குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, பங்குனி(மீனம்) 30 ம் திகதி திங்கட் கிழமை .

கட்டுரைகள்

தமிழ் தந்த சித்தர்கள்

17.02.2020 .......'ஓம்' என்பது தனிக்குறியீடு மட்டுமல்ல. பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி நாதவிந்தாகவும், அனைத்துப் படைப்புக்களையும் உள்ளடக்கிய கட்டற்ற தத்துவமாகவும் உள்ளது 'ஓம்'. அதை எம்மொழியிலும் எழுதலாம். "ஓம்" என்ற ஒலி ஆதியலிருந்தே தமிழோடும், தமிழர் வழக்கிலும் இருந்து வந்துள்ளது. ஈழத்தில் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை, "ஓம்" என்று தான் பேச்சு வழக்கில் கொண்டுள்ளனர். 

மேலும் வாசிக்க...
 

வில்விழா வரலாற்றில்_தமிழர்களின்_காதலர் நாள்.

14.02.2020....வில்விழா ! வரலாற்றில்_தமிழர்களின்_காதலர்_நாள்  3

பண்டைய தமிழகத்தில், காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !

09.02.2020...தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.

மேலும் வாசிக்க...
 

அழிந்தது போக இருப்பவை இவ்வளவா! எல்லாம் படித்து நிறைவு செய்ய ஒரு பிறவி போதாது!!

09.02.2020.....1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

மேலும் வாசிக்க...
 

தேவநேயப் பாவாணரின் சிறப்பைப் பற்றி அவரது மாணவன் பெருஞ்சித்தரனார் கூறுவதைக் கேளுங்கள் !

07.02.2020....மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

உலகில் 6000 மொழிகள் அறியப்பட்டன. அதில் 2600 மொழிகள் வழக்கில் இருந்தன. அவை அனைத்திற்கும் மூலம் 6 மொழிகள் என்று உலக மொழியியல் வல்லுனர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த 6 மொழிகளில் மூத்தமொழி தமிழ்மொழி என்பதை கிரேக்க, சீன மொழிகளில் ஊடுருவி உள்ள தமிழ்ச் சொற்களை எடுத்துச் சொல்லி சான்றுகளுடன் நிறுவிய ஒரே மாந்தன் தேவநேயப் பாவாணர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 129 இல்