குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு -27, புதிய சனநாயக மக்கள் முன்னணி ,கைலாசபதியின் 28.வது ஆண்டு நினைவாக

பகுதி. 7)  28 .04.2012  மு.தளையசிங்கமும் முற்போக்கு இலக்கியமும். 27.04.2020....எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்கவில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம், பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால்; முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம், அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே! 

மேலும் வாசிக்க...
 

கிறிசு(ஸ்)துக்கு பின் 600ஆம் நூற்றாண்டு....

26.04.2020...மெடிட்டெரேனியன்(mediterranean) கடலினூடாக கிழக்கு உரோம பேரரசின்(Byzantine empire) தற்போது இசு(ஸ்)தான்புல் என அறியப்படும் கான்Rடான்டிநோபில் துறைமுகத்தில் தரைதட்டுகிறது யசுடினியன் பேரரசனின் போர்க்கப்பல்கள்.

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் கைலாசபதி மாதம். பதிவு..-26 கைலாசாதியின் 28.வது ஆண்டு நினைவாக…. பகுதி(6) 28.01.2012

கைலாசபதியும் மு. தளையசிங்கமும்.

26.04.2020இன்று எழுந்துள்ள ‘நற்போக்கு’க் கூடாரம் கைலாசபதியின் பெயரை முற்றாக ஒதுக்கிவிட முயல்கிறது. ‘முற் போக்கு’க் கட்சி எப்படி அவரையே முழு முதல் இலக்கியக் கடவுளாக வழிபட விரும்பிற்றோ அப்படியே    ‘நற் போக்கு’ அவரின் பெயரை முற்றாக அழித்துவிட முயல்கிறது.

அதனால் இரண்டும் பிழைத்து விடுகின்றன. உண்மை இரண்டிலும் இல்லை. இரண்டுக்குமிடையில் தான்.

கைலாசபதி கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒரு படி உயர்த்தியே தான் இருக்கிறார். முதலில் அதை ஒப்புக் கொண்டு தான் கைலாசபதியின் செல்வாக்கைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாக வேண்டும்”

என கைலாசபதியின் இலக்கியப் பார்வை பற்றி குறிப்பிடுகின்றார் மு.தளையசிங்கம்.

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு-25 புதிய சனநாயக மக்கள் முன்னணி கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக..

.(பகுதி 5) 28.04.2012 வ.அ. இராசரத்தினமும் டானியலும் 25.04.2020 “நான் கடிதம் எழுதிக் கேட்டிருந்தபடி டானியல் அவர்கள் முதன் முதலாக என்னை ஈழகேசரிக் காரியாலயத்தில் சந்திக்கின்றார். மிக அமைதியாக, அடக்க ஒடுக்கமாக” என்கின்றார் வ. அ.

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் கைலாசபதி மாதம பதிவு 24 புதிய சனநாயக மக்கள் முன்னணி கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….

(பகுதி 4) 28.01..2012 வ.அ. இராயரத்தினம் பற்றி….24.04.2020 “நான் எவ்வளவு தான் எசு. பொ.வோடு ஒத்திருந்தாலும், நற்போக்கு என்ற பதச் சேர்க்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை” நற்போக்கு எனும் கருத்துருவாக்கம் உருவாகிய போது வ.அ. இராயரத்தினம் அவர்களால் முன் வைக்கப்பட்ட அபிப்பிராயம் இது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 141 இல்