குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, பங்குனி(மீனம்) 30 ம் திகதி திங்கட் கிழமை .

கட்டுரைகள்

தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா?

முன்னுரை: 13.11.2019- தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா?. – இக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரையை எழுதுவதற்கான காரணத்தை முதலில் சொல்லி விடலாம். சகடம், சக்கரம், சமையல், சிப்பி, சிறகு என்று எந்தவொரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக சகரம் வந்தாலும் அது தமிழ்ச் சொல் அல்ல; சமக்கிருதச் சொல் என்றே பலரும் நம்புகின்றனர்; சிலர் நம்பாவிட்டாலும் அப்படியும் இருக்குமோ? என்று அயிர்க்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

தொல் தமிழரின் பானை கழிவறைகள்

06.11.2019- தமிழகத்தில் பொதுவில் மலம் கழிக்கும்அநாகரீக வழக்கம் பெருவாரியாக இருக்கிறதுஎன்று நம் மேல் ஒரு பழி உண்டு தமிழ் நாட்டில் முன்பு தனிக் கழிப்பறைகள்மலம் கழிக்க உபயோகிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்று பொதுவாகக்கருதப்படுகிறது .ஆனால் உண்மை முற்றிலும் வேறானது .

மேலும் வாசிக்க...
 

வள்ளுவம்...

05.11.2019- கேரளா மாநிலம் கோட்டயம்,இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவர் வழிபாடு உள்ளது.திருக்குறளை ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை வணங்குகிறார்கள் திருவள்ளுவர் வழிபாட்டு கட்டிடத்தை ‘ஞானமடம்’ என்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

பல்லவ அரசர்களின் மாமல்லபுர ஐந்து தேர்கள்! வடமொழியை வடவர்கடவுளை தமிழ?ருக்குள் திணித்தவர்கள் இவரகளே!!

24.10.2019 மாமல்லையில் பஞ்ச பாண்டவர்கள் இரதம் என அழைக்கப்படும் இந்த ஐந்து இரதக்கோவில்கள் உண்மையில் மகாபாரத கதையின் தாக்கத்தில் எழுப்பப்பட்ட இரதங்கள் அல்ல. இதை ஏற்கனவே ஒரு பதிவில் நாம் விவாதித்திருக்கிறோம் எனினும் மீண்டுமொருமுறை நினைவுபடுத்த கடமைபட்டுள்ளேன். 1800களின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இந்திய தொல்லியலின் மேல் ஆர்வம் கொண்டு கல்வெட்டுகளையும் கோவில்களையும் ஆவணபடுத்திக்கொண்டிருந்த நேரம் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து கல்வெட்டுகளை படித்து பொருள் தந்தது காவாலி சகோதரர்கள்.

மேலும் வாசிக்க...
 

பனிக்கன்குளக் காட்டுப்பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கண்டுபிடிப்பு செல்வன்

13.10.2019 கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கற்கால மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற்கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பனிக்கன்குளத்தில்  வாழ்ந்து வரும் திரு.கயன், திரு.யெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய  கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை  எமக்கு அனுப்பியிருந்தனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 129 இல்