குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

ஈழத்து வரலாறும் தொல்லியலும் , ஈழம் = பூநகரி ?

05.03.2023....மண்ணித்தலையிலே கிடைத்த இரண்டு மட்பாண்டச் சாசனங்கள் இப்பிராந்திய வரலாற்றாய்வில் மட்டுமன்றி ஈழத்தமிழர் வரலாறு பற் றிய ஆய்விலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது.இவ்விருசாசனங் களும் கிறிசு(ஸ்)துவுக்கு முற்பட்ட காலத்திற்குரியவை என்பதை இவற் றின் எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிகிறது.

மேலும் வாசிக்க...
 

எழுத்து சீர்திருத்தத்தில் நிதானம் வேண்டும் கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005கா.சிவத்தம்பி பிரிவு: -

எழுத்து சீர்திருத்தத்தில் நிதானம் வேண்டும் கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005கா.சிவத்தம்பி பிரிவு:  -

வெளியிடப்பட்டது: 03 மே 2010 எமது செருகல் .....எழுத்து சீர்திருத்தத்தில் நிதானம் வேண்டும் அது தற்போது நன்றாகவே  உள்ளது. பிறமொழி எழுத்துகள் கலக்காமல் இருந்தால் சரி.26.02.2023

இலங்கையிலிருந்து வந்திருந்த தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்தோம். அப்போது அவருடன் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .

மேலும் வாசிக்க...
 

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு(சிங்கைநகர் பூநகரியா?)

02.02.2023 சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராசதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கியநகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார்.

மேலும் வாசிக்க...
 

கடலுக்கு அடியில் தமிழர் நாகரிகம்‘ ...என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் டி.கே.வி.இராயன் பேசியது.

ஆகசுட் - 2015,தினமலர் நாளிதழ். குமரிநாடு.கொம்  இணையத்தில் இடப்பட்ட பக்கல் 29.01.2023

கடலுக்கு அடியில் தமிழர் நாகரிகம்‘ ...என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் டி.கே.வி.இராயன் பேசியது....

மிகப்பெரிய அளவில் பூம்புகார் கடல் அகழாய்வு செய்யவேண்டும் என்றார்.இப்போதுதான் செய்யப்பட்டது.

சங்க இலக்கியம் கூறிய குமரிகண்ட குறிப்புகள் உண்மையா என்பதை கண்டறிய குமரியிலிருந்து மடகாஸ்கர் வரை ஆய்வு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்கிறார் இராயன்.

கபாடபுரம், பஃறுளி ஆறும் எங்கே என்று கண்டறிய வேண்டும் என்கிறார் மத்திய தொல்லியல்துறை இயக்குனர் தயாளன்.

மேலும் வாசிக்க...
 

மறைக்கப்பட்ட பூம்புகார் - தமிழர் வரலாறு !

24.10.2022 முன்பும் பல  முறை  ஏற்றப்பட்ட கட்டுரை இது!1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கு மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டு…

மேலும் வாசிக்க...
 
பக்கம் 5 - மொத்தம் 166 இல்