குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, பங்குனி(மீனம்) 30 ம் திகதி திங்கட் கிழமை .

கட்டுரைகள்

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

03.02.2020 ...திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா.

மேலும் வாசிக்க...
 

குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களின் ஆவணம்மைக்ரோ பிலிம் ஆக்கப்பட்ட 200 சுருள்கள் (ரீல்கள்)

யுனெசு(ஸ்)கோ அதிகாரிகள் மூலம் சுவிற்சர்லாந்து லுசேன் மாகாண கிளாரூசு(ஸ்) ஆவணக்காப்பகத்தில்  2003 இல் வைக்கப்பட்டது.30.01.2020....நேற்று (22.06.2016) குரும்பசிட்டி கனகரட்ணம் அவர்களின் நினைவு நாள். சமாதான காலப்பகுதியில் கிளிநொச்சி பொதுச்சந்தையின் பின் வீதியில் தமிழீழ ஆவணக்காப்பகம் ஒன்றினை அமைத்து அதில் தன்னு டைய ஆவணங்களை பாதுகாப்பு வந்தவர். என்ன தகவல் தேவை என்றாலும் எந்த சலிப்பின்றி இவரே தேடி எடுத்து தரும் ஐயாவை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருக்கவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தின் முதல்வராக காமராயர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன்.இறுதிக்காலம்!

28.01.2020...தமிழகத்தின் முதல்வராக காமராயர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

சமசுகிருத மொழி பற்றி!

28.01.2020 ... சமசுகிருதம் என்ற வார்த்தைக்கே மூலச்சொல் சமசுகிருதத்தில் இல்லை. தமிழில் தான் உள்ளது. கிருதம் என்றால் மொழி, சம் என்றால் சமைக்கப்பட்டது, செய்யப்பட்டது, மேம்படுத்தப்பட்டது. ஆக சமசுகிருதம் என்றால் மேம்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்து மேம்பாடு, மாறுபாடு செய்யப்பட்டது என்று பொருளாகிறது. எது ஏற்கனவே இருந்தது? பிராகிருதம், அதாவது வட இந்தியத்தமிழ்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களே இந்தியாவின் பூர்வீகக்குடிகள் அழகிய தமிழ் இருக்கும் போது பிணமான சமசுகிருதம் ஏன்??

26.01.2020 சமசுகிருதத்தின் மீது கோபம் இல்லை குத்தூசி ஆரிய மாயை, சமசுகிருதம், சமசுகிருதத்தின் மீது எனக்கு கோபமோ, எதிர்ப்போ, நகைப்போ இல்லை எதுவரை என்றால் எந்த நாட்டிலும், ஊரிலும் வீட்டிலும் பேசப்படாத பிணமான சமசுகிருதம் கடவுள் மொழி தேவ மொழி என்று சொல்லாதவரைஎதுவரை என்றால் தமிழை அழித்து சமசுகிருதம் வாழவேண்டும் என்று நினைக்காதவரை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 129 இல்