குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மார்கழி(சிலை) 7 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ் வாழ வாழ்வோரைத் }{ தமிழினம் வாழ்த்தும்!

05.07.2019-சென்னை 'தமிழ்மண் பதிப்பக' நிறுவநர்

கோ. இளவழகனார் 72ஆம் பிறந்தநாள் 07 , 3 ( 1948 )

தமிழ்மண் பதிப்பகத்தின் வழி , பழந்தமிழ்

இலக்கியச் செல்வங்களைத் தொடர்ந்து

வெளியிட்டுத் தமிழுக்கு வளம்சேர்த்து

வருபவர் கோ. இளவழகனார்.

மேலும் வாசிக்க...
 

பூநகரியின் பொருளாதாரத்தை பாதிக்கும் நீராதாரம். ஒதுக்கப்பட்ட700 மில்லியன் ரூபா நிதி எங்கே போனது..?

30.06.2019-பூநகரி மக்களை பொறுத்த வரையில் அவர்களின் பிரதான தொழிலாக நெற்செய்கை காணப்படுகிறது இந்த நெற்செய்கையின் மூலம் ஆட்டக்காறி, மொட்டைக் கறுப்பன், பச்சைப் பெருமாள் போன்ற பிரபல்யமான நெல்லினங்களும் இதைவிட இன்னும் பல நெல்லினங்களும் இங்கு விளைவிக்கப் படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

பூநகரி நாச்சிக்குடாவில் 2000 ஆயிரம் கிலோ அரியவகை மீன் சிக்கியுள்ளது.

29.06.2019-நாச்சிக்குடா எங்கிருக்கென்று தெரியாது தடுமாறுமளவிற்குசெய்திவெளியாகி உள்ளது!  நாச்சிக்குடா பூநகரியில் உள்ளது என்பதனை தெரியாத நிருபரால்  செய்தி  அனுப்பப்பட்டதா அல்லது நாச்சிக்குடாவில் மீன்பிடித்தொழில் செய்யும் வேறுஊர் நபரால் இச்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

மேலும் வாசிக்க...
 

சசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் - சாத்தியமானது எப்படி? பிபிசி த

28.06.2019-பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார்.பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான்.

மேலும் வாசிக்க...
 

பூநகரியும் நீர்ப்பற்றாக்குறையும்.கைiலைநாதன்.அன்பரசன்

28.06.2019-பூநகரியில்  பத்தொன்பது கிராம சேவையாளர் பிரிவுகளில் 24000 இற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு வாழும் மக்களின் பிரதான தொழிலாக நெற்ச்செய்கை காணப்படுகின்ற போதிலும் மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்களும் இங்கு உள்ளனர்.

பூநகரியை நில அமைப்பின் அடிப்படையில் வடக்குத் தெற்காக பிரித்து நோக்கினால் பூநகரி வடக்கு தெற்க்கைக் காட்டிலும் நன்நீர் இன்மையால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பாக காணப்படுகின்றமையால் இங்குள்ள மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களின் மத்தியிலும் வேறு கிராமங்களில் இருந்து உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்படும் நீரை விலைகொடுத்து வாங்கித்தான் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

பல்வேறுபட்ட சிறிய குளங்கள் காணப்படுகின்ற போதிலும் மாரிகாலங்களில் அவற்றில் தேக்கிவைக்கப் படுகின்ற நீர் வருடம் முழுவதும் இங்கு வாழும் மக்களின் குடிநீர் தேவை தவிர்ந்த இரத தேவைகளையும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதியதாக காணப்படவில்லை இதன் காரணமாக வருடத்தின் ஆடி ஆவணி புரட்டாதி போன்ற அதிக வெப்பம் நிலவுகின்ற காலங்களில் குடிநீர் தவிர்ந்த இரத தேவைகளுக்கான நீரையும் கால்நடைகளுக்கான குடிநீரையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுவது பூநகரி வடக்கு மக்களின் துர்ப்பாக்கியம் ஆகும்.

இரணை மடுவில் இருந்தான பூநகரிக்கான குடிதண்ணீர் வினியோகம் மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனினும் பூநகரி வடக்கின் ஒரு சில கிராமங்களில் நீர் வினியோகத்திற்கான குழாய் பொருத்தும் பணி இடம்பெறாமல் இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் உண்டு பண்ணி இருப்பது கவலைக் குரிய விடயமாகும்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டியது துறை சார்ந்த அதிகாரிகளினதும் அரசியல் தலைவர்களினதும் தலையாய கடமையாகும் எனினும் குறித்த விடயம் தொடர்பாக அவர்கள் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இவை எல்லா வற்றையும் கடந்து இரணை மடுவில் இருந்தான நீர் வினியோகம் பூநகரி மக்களின் அன்றாட தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடமும் அனைத்து மக்களிடமும் உள்ளது.

கைiலைநாதன்.அன்பரசன் 28.06.2019

 

தமிழகத்தமிழர் வாயில் -Omelette ஆம்லெட்டா சார்...

27.06.2019-இரண்டாயிரத்தாம் ஆண்டு அளவில் மலேசியாவிலிருந்து தமிழ்ப்புனல் ஐயா மணிவெள்ளையனார் அவர்களின் தலைமையில் நானும் தமிழ்நெறிக் கழக மூத்த பொறுப்பாளர்களும் தமிழ் நாட்டிற்கு தமிழியல் நோக்கில் செலவு மேற்கொண்டிருந்தோம். அச்செல்கை தொடர்பாக இனிய அறிவார்ந்த நினைவலைகள் பலவற்றை வரலாறாய் எழுதலாம்.

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் வித்தியானந்தன்

26.06.2019-சு. வித்தியானந்தன் (மே 8, 1924 - சனவரி 21, 1989) ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.

மேலும் வாசிக்க...
 

மலேசியத் தமிழாசிரியர்களுக்கான இலக்கியப் பயிலரங்கம் ,கோலாலம்பூர்

25.06.2019-மலேசியத் தமிழ்வளம் தந்த மகிழ்ச்சி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மலேசியத் தமிழாசிரியர்களுக்கான

இலக்கியப் பயிலரங்கம் ,கோலாலம்பூர்

'டைனசுடி 'விடுதி (Hotel Dynasty)

அரங்கில் 2015 சூன் 11-13 மூன்று

நாள்கள் நிகழ்ந்தன. தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகப் பேரா.தெ.

வெற்றிச்செல்வனும் நானும்

கருத்தாளர்களாகப் பங்கேற்றோம்.

மேலும் வாசிக்க...
 

சிங்கப்பூர்ச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆகச் சிறிய தமிழ்ப் புத்தகம் குறளொலி.

23.06.2019-சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஆகச் சிறிய தமிழ்ப் புத்தகம் என்ற பெருமையை, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகம் 'குறளொலி' என்ற புத்தகத்துக்கு வழங்கியுள்ளது.கடன் பற்று அட்டை அளவிலான 'குறளொலி' இன்று வெளியிடப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

"கி.மு 3-ம் நூற்றாண்டில் தமிழர் வாழ்ந்ததற்கான சான்று!" - நாங்கூர் தொல்லியல் ஆய்வில் தகவல்

மு.இராகவன் மு.இராகவன்  பா.பிரசன்ன வெங்கடேச் 22.06.2019-தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை சார்பில், நாங்கூரில், நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கி.மு.3 -ம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 7 - மொத்தம் 1112 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.