குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

நம் ஆதிச்சநல்லூர் 3000 ஆண்டுகள் பழமையானது: ஒத்துக்கொண்டது நம் இந்திய அரசு.!

21.04.2021.....உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும்  தாய் எம் தமிழ் தாய்......!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரி பொருட்களின் கார்பன் பரிசோதனையில் ஒரு பொருளின் வயது கிமு.905 மற்றொன்றின் வயது கிமு.791 என தெரியவந்துள்ளது என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்.செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர்  முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் வாசிக்க...
 

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

20.04.2021....இயேசு கிருசுது பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் #போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாசான சிலையை செய்தவரும் இவர்தான்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டு சிறப்பு பார்வை அருந்தவபாலன் சாவகச்சேரி!

சுறவம்

தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து புதிய தளர்வினை 19. 04. 2021 முதல் அறிவித்துள்ளது

14.04.2021....01.04.மேழம்  திருவள்ளுவராண்டு2052.... மேழத்திருநாள் கீழறை இந்து வருடம் பிறந்திருக்கும் இந்நாளில் (14.04.21) சுவிற்சர்லாந்து அரசு தனது புதிய மகுடநுண்ணி தளர்வினை அறிவித்துள்ளது.
இதன்படி 19. 04. 2021 முதல் இப்புதுத் தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ளன:மீண்டும் திறக்கப்படுகின்ற உணவகங்கள் மற்றும் மதுநிலையங்கள் வெளித்திடலில் மீண்டும் இயங்கலாம்.  பொழுது போக்கு- மற்றும் பண்பாட்டுநிறுவனங்கள் (உள்ளரங்கிலும்) திறக்கப்படும் விளையாட்டு அரங்குகளும் (உள்ளரங்கிலும்) திறக்கலாம்.
மேலும் வாசிக்க...
 

பூநகரி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

14.04.2021......01.04.தி.ஆ 2051.....மன்னார் - பள்ளிமுனையில் இருந்து நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவு பூநகரி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்! எழுதியவர், பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்.

04.04.2021...மொழிக்கு அரசியல் தேவையா?

மொழி, மக்களின் வாழ்வியலில் ஓர் இயந்திரப் பொறி (Engine). கண்ணுக்கு நேரடியாகத் தெரியாவிட்டாலும், அதன் மூலமாகத் தான் வாழ்வியல் வண்டி ஓடுகிறது. மொழி சிதைந்து போனால், ஏதோ பழைய வரலாறு, பண்பாடு, நாகரிகம் – இவை மட்டும் தான் சிதைந்து போகும் என்று எண்ணிவிட வேண்டாம். நம் மக்களின் எதிர்காலமும், அடுத்த தலைமுறையின் அறிவாற்றலும், இன-வரைவியல் தனித்தன்மையும், மொழியுடன் சேர்ந்தே சிதைந்து போகும்.

மேலும் வாசிக்க...
 

யெனிவா அரசியலை தமிழ் தரப்பு 12ஆண்டுகளின் பின்னரும் ஒருங்கிணைப்பின்றிக் கையாண்டிருக்கிறதா? நிலாந்தன்

16.மீனம்.திருவள்ளுவராண்டு 29.03.கிறிசு ஆண்டு 2021....புதிய யெனிவாத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக் கிறது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இராயதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற் காக தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே.

மேலும் வாசிக்க...
 

இந்திய ஐரோப்பிய மொழியினம்:

15.மீனம்.தி.ஆ.2052......8.03.2021...கிரேக்கம், செர்மனியம், உருசியன், செல்டிக் போன்ற மொழிகள் இவ்வினத்தின் கீழ் சொல்லப்படு கின்றன. இவை கி. மு. 3000ஆண்டுகளில் அப்பகுதியில் பேசப்பட்ட மொழிகளாகும். இம்மொழிக் குடும்பத்தில் இந்திய என்ற சொல் எவ்வாறு இனணக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்துள்ளார், இந்நிய மொழியின் தாக்கம் அம்மொழிகளில் உணரப்பட்டதாலேயே எனலாம்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை குறித்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கைதோல்வி!

22.03.2021.....இலங்கை குறித்த தீர்மானம் யெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா, கனடா, யேர்மன், மொன் ரனீக்றோ, செக் ஆகிய நாடுகளின்  தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா

பெ.மணியரசன் கண்டனம்! 08.மீனம்.தி.ஆ .2052....ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் 22.3.2021 அன்று விவாதத்திற்கு வரப்போகிறது. இந்தத் தீர்மானத்தைப் பிரிட்டன், கனடா, செர்மனி, வடக்கு மாசிடோனியா, மாலவி, மான்டினிக்ரோ ஆகிய ஆறுநாடுகள் முன் மொழிந்துள்ளன.47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 46-வது கூட்டத்தில் வரவுள்ள

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 1145 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.