குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, ஆடி(கடகம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

கம்போடியா அரசர் இரண்டாம் சூரியவர்மன், அங்கோர் வாட்டை (உலகின் மிகப்பெரிய கோயிலை ) கட்டியவர்

21.06.2019-அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் [3] ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழியின் உலகத்தாய்மை! உல் மெல் என்ற வேர்ச் சொற்களே ஐரோப்பிய மொழிகளில்!!

உல் மென்மை கருத்து வேர்...இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மெல்ல மெல்ல மெல் Mel ஆகியது

ஊகாரச்சுட்டில் பல்வேறு கருத்துகள் ஆணி வேரிலிருந்தும் பக்க வேரிலிரும் சல்லி வேரிலிருந்தும் பிறக்கும்.

உல் எனும் வேரின் மூலக் கருத்துகளில் முதன்மையானது தோற்றம் பெற்று முற்படுவதாகும்.

தோற்றம் பெறுகின்ற ஒன்று புதியதாகவும் இளையதாகவும் இருக்கும். பிறந்த குழந்தையின் உடல் உறுதிபெற்று இறுக்கமாக இராமல் மென்மைபெற்று விளங்கும். எனவே உல் எனும் வேர் மென்மைப் பொருள் தரும் சொற்களையும் பிறப்பித்தது.

மேலும் வாசிக்க...
 

"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்" - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண் சாய்ராம் யெயராமன் பிபிசி

18.06.2019-சுவீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது.சுகுவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்கியவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள்.பெரியளவில் கொண்டாடுவோம்.வேதநாயகம்

தபேந்திரன் 17.06.2019 -கிளிநொச்சி மாவட்டம் தனது பிறப்பின் வெள்ளிவிழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாட வேண்டிய 2009 ஆம் ஆண்டில் சுடுகாடாக இருந்தது.இன்று இந்த மாவட்டத்தை உருவாக்கிய தந்தையின் வீ.ஆனந்தசங்கரி ஐயாவின் 86 வது பிறந்த நாள்.அதனால் சில நினைவலைகள் எழுகின்றது. த அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தசங்கரி ஐயா பூநகரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய போதே கிளிநொச்சி தனி மாவட்டமாக வரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

மேலும் வாசிக்க...
 

எல்லா சாதியினரும் எல்லாத் தெருவிலும் நடக்கலாம், எல்லா நீர் நிலைகளிலும் நீர்எடுக்கலாம் சட்டமாக்கியவர்

16.06.2019-எல்லா சாதியினரும் எல்லாத் தெருவிலும் நடக்கலாம், எல்லா நீர் நிலைகளிலும் நீர் எடுக்கலாம் என்பதைத் தமிழகத்தில் முதன் முதலாகச் சட்டமாக்க சட்ட முன்வரைவை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேறக் காரணமாக இருந்தவர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் .டாக்டர் . அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது அவருக்கு இரட்டை மலை சீனிவாசன் இப்படிக் கடிதம் எழுதினார், "நாம்தான் வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்ட இந்து இல்லையே. நாம் அவர்ணசுதர் எனும் வருணமற்றவர், பின் ஏன் மதம் மாற வேண்டும்?" என்று.

மேலும் வாசிக்க...
 

தமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள் பிரமிளா கிருச்ணன் பிபிசி தமிழ்

16.06.2019-கீழடியில் அகழ்வாய்வு நடந்ததை பலரும் ஒரு செய்தியாக கடந்த சமயம், சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச. இளங்கோ, தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு படம் எடுக்க முடிவுசெய்தார்.கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் உழைப்பை செலுத்தி, நண்பர்களின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் எழுத்துகள் குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளார் இளங்கோ.

மேலும் வாசிக்க...
 

சோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது டாக்டர்.

சம்பகலக்‌சுமி-18.12.2015  மீண்டும் குமரிநாட்டில்..நேர்காணல்: ப.கு.இராயன் -சென்னையில் பிறந்தவரான டாக்டர்.சம்பகலக்‌ச்சுமி, எத்திராச் கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை, முதுகலை வரலாறு பயின் றவர். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று,அங்கேயே பண்டைய வரலாறு மற்றும் அகழ்வாய்வியல் துறையில் பணிதுவக்கியவர்.தெரிய வில் லை.  முருகன் தூய தமிழ்ப் பெயராகவும் சுப்பிரமணியன் சம்சுகிருதமாகவும் இருப்பதால் இருக் கலாம்.

மேலும் வாசிக்க...
 

தஞ்சைப்பெரிய கோயிலின் அத்திவாரம் 240 டன் கற்கள் விமானத்தின்மேல் தான் உள்ளன நம்புவீர்களா!

12.06.2019-சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் விமானக்கல்.இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர

மேலும் வாசிக்க...
 

திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில்

11.06.2019-திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௦ (2050) ஆனித்திங்கள் 19,20 (3-6, சூலை 2019 அன்று சிகாகோ மாநகர், அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடலை ( Theme song) பெருமையுடன் வழங்குகிறார்கள் .

மேலும் வாசிக்க...
 

தஞ்சைப்பெரிய கோயில் பற்றிய பெரிய உண்மைகள் கல்வெட்டுக்கள் சொல்பவை

தமிழ வேள்  "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது.

அந்தக் கோயில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 1107 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.