குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

இடம்பெயர்ந்த சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடு

பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்தவர்களுக்கான வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற குழந்தைகள் 500 பேரை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு அனுப்பி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

யோகராஜனும் சச்சிதானந்தமும் ஐ.தே.கவில் இணைகின்றனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உப தலைவரான ஆர். யோகராஜன் அவர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளார்.

தற்போது துணை அமைச்சராக இருக்கும் எம். சச்சிதானந்தமும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க வசதியாக கிளிநொச்சி மைதானத்தில் 68 கொத்தணி நிலையங்கள்

போரினால்  இடம்பெயர்ந்த மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கிளிநொச்சி, றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் 68 கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றுக் கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. 

மேலதிக தேர்தல் ஆணையாளர் எஸ். சிறிவர்த்தன, இடம்பெயர்ந்தவர்களின் வாக்களிப்பு தொடர்பான பிரதி ஆணையாளர் எஸ்.சண்முகம், யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ்.பிரதித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மறுவாழ்வு பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

தஞ்சம் கோரிய இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச்சென்ற வழியில் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் 47 பேர் மறுவாழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஈழம் உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்

உலகில் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது இன்று எல்லோரும் அறிந்த விடயம்.ஆனால் அவர்களின் நெருக்கடிகள் என்ன என்பது எல்லோருக்கும் அறியப்படாத விடயம் அந்தந்த நாடுகளில் வாழ்வோர் தமது நெருக்கடிகளை வெளிக்கொணரும்போது அவற்றை வெளிப்படுத்த முடியும்.

மேலும் வாசிக்க...
 

டாக்டர் சிவபாலனை நீதிமன்றம் விடுவித்துள்ளது

போர்க் காலத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கிவந்தவர் டாக்டர்.சிவபாலன்
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட்டுவந்த ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்களில் ஒருவரான சிவபாலன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முடிவு

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாகவே அக்கூட்டமைப்பில் ஓர் அங்கமாக உள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி தனது இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

நிவாரணப் பொருட்களை விற்று பிற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வவுனியா அகதிகள்

நிவாரணப் பொருட்கள் வியாபாரம் நடக்கிறதுஇலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமக்கு நிவாரணமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து தமக்குத் தேவையான ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம், இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1145 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.