ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் யாழ்பாடி ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
அந்த மாநாட்டில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவிகருணா நாயக்க,அனுரகுமார திஸநாயக்க, அர்ஜீண ரணதுங்க, அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.