குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வெவேறான அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிரணி இணங்கவில்லையென சம்பந்தரால் கூறமுடியுமா?: வீரவன்ச சவால்

"வடக்கு கிழக்கை இணைத்தல், புலி உறுப்பினர்களை விடுவித்தல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கல், சர்வதேச சாசனங்களில் கையெழுத்திட்டு சட்டங்களை இயற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு எதிரணி வேட்பாளர் உடன்படவில்லை என்று, முடியுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்மந்தன் கூறட்டும் பார்க்கலாம் " என்று சவால் விடுக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தொடர்பான இணை ஊடக பேச்சாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

பிரபாகரன் உடல்' பற்றிய தொழில்நுட்பத்தை ராஜபக்சேவிடம்தான் கேட்க வேண்டும்!- தமிழ்மாறன்

சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

27.01.2010 அன்று இலங்கை நிலை எப்படி இருக்கும்?.

மகிந்த இராசபட்ச வென்றால் இலங்கை அரச நிருவாகம் தனியார் நிர்வாகம் ஆகும். எதிர்க்கட்சிகள் நேர்மையாகக் கடுமையாக  உழைத்தாலும் தேர்தல் காலத்திருட்டைத் தடுக்க மக்களை வைத்து சரியான திட்டம் எதையும் தீட்டவில்லை சிறிய வித்தியாசத்தில் தோற்றுவிடவும் வாய்ப்புண்டு.

மேலும் வாசிக்க...
 

கனகரத்தினம் எம்.பி விடுதலை

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கோத்தபாயாவும் நாட்டைவிட்டு வெளியேறினாரா ?

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலில் நெருங்கிவரும் போது எதிர்பாராத சம்பவங்கள் பல நடைபெறுமென எதிர்பார்க்கபடுகையில், திடீரென சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவர் உடனடிச்  சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் சில தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)
3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.
4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும்.
இவைதொடர்பாக மேலும்.
எதிர்வரும் 15.01.2011-தைப்பொங்கல் 01.01.2042 ஆம் தமிழாண்டு ஆகும்.  புதிய இணைப்புக்களுடன்.....

மேலும் வாசிக்க...
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை இன்று ஆரம்பித்திருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

ஒற்றையாட்சி முறையே இலங்கைக்கு நல்லது: மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையை திங்களன்று கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

"மஹிந்த சிந்தனை – நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது அவர் வெளியிட்டார்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழருக்கு நல்லதொரு தீர்வைத்தாருங்கள்; இந்தியாவிடம் சம்பந்தன் பகிரங்கக் கோரிக்கை

யாழ்.நகரில் நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சி மாநாட்டில் விடுத்தார்

இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று  எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1141 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.