குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

நளினியை விடுதலைசெய்ய ஆவனைசெய்யவில்லை இன்று விடுதலைக்காய் துடிப்பது தெரிகிறது.

18.06.2011.j.M-2042--டில்லிக்கம் அங்கும் இங்கும ஓடித்திரிகின்றார்கள். இலங்கையில் அடைபட்டு இருக்கும் மக்களையும் பார்த்துவிட்டு அவர்கள் நலமாக இருக்கின்றார்கள் என்றார்கள். யாரைப்பார்க்க ஏன் சென்றார்கள் என்பதை மறந்தார்கள்

மேலும் வாசிக்க...
 

சிங்களவரை வந்தேறு குடிகள், கூலிப் படைகளின் வாரிசுகள் என்கிறார் வரலாற்று அறிஞர்

18.06.2011 த.ஆ.2042--இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களின் வாரிசுகள்தான் இன்றைய சிங்களவர்கள் என்று கூறுகின்றார் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் எசு.முத்தையா

மேலும் வாசிக்க...
 

செயலலிதா மன்மோகனிடம் சமர்ப்பித்துள்ள மனுவில் முதலாவது பிரச்சினையாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை

17 .06. 2011  -த.ஆ.2042--சிங்கள மக்களுக்குண்டான அதே சமத்துவமான உரிமைகளோடும் சுய கௌரவத்தோடும் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கில் தமக்கான சுயஆட்சி முறையினைக் கொண்டிருக்கும் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் வாசிக்க...
 

கிரந்தம் வடிவில் வரும் எமன் தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா?:

17.06.2011.த.ஆ-2042---‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

திருவள்ளுவராண்டு 2042 தமிழ் நாள்காட்டி

 2011 சனவரித் திங்கள் 15ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2042 ஆகும்.

மேலும் வாசிக்க...
 

இந்திய நடுவண் அரசு, தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவிக்க வேண்டும்

 தமிழைச் செம்மொழியாக அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசு, தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசியாவில் ‘செம்மொழி அகவை திருத்த மாநாடு’ நடைபெறவுள்ளது. அது குறித்து நாளிகையில் வெளிவந்த செய்தி இது. -சுப.ந

மேலும் வாசிக்க...
 

0:- இது சுழியமா? பூச்சியமா?பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!

(1992இல் கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வெளியிட்ட 'கலைச்சொல் அகர முதலியிலிருந்து எடுக்கப்பட்டது )

பூச்சியந்தான் எல்லாருக்கும் புரியுமாம் – அதைப்
பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!
பூச்சியத்தைச் சுழியமென்ற *வானொலி – சில
பூச்சியங்கள் பேச்சைக் கேட்டு மாற்றியதாம் மறுபடி!

மேலும் வாசிக்க...
 

சனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச்சியை பார்வையிட்ட 7 இலட்சம் மக்கள்!

17.06.2011--பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நேற்று முன்தினம் ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் என்ற ஆவணப்படத்தை உலகெங்கிலும் இருந்து 7 இலட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி

17.06.2011.த.ஆ-2042-இந்திய விஞ்ஞானி திவ்யேந்து நந்தியின் ஆராயும் ஆர்வமெல்லாம் சூரியன் மீதுதான். 37 வயதாகும் திவ்யேந்து, சூரியனைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் :
17.06. 2011  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக இன்று முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் சீருடையில் புகுந்த படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1130 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.