குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை இன்று ஆரம்பித்திருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

ஒற்றையாட்சி முறையே இலங்கைக்கு நல்லது: மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையை திங்களன்று கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

"மஹிந்த சிந்தனை – நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது அவர் வெளியிட்டார்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழருக்கு நல்லதொரு தீர்வைத்தாருங்கள்; இந்தியாவிடம் சம்பந்தன் பகிரங்கக் கோரிக்கை

யாழ்.நகரில் நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சி மாநாட்டில் விடுத்தார்

இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று  எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன்.

மேலும் வாசிக்க...
 

உயர்பாதுகாப்பு வலயம் "இருக்காது ஆனா இருக்கும்" :மகிந்த காமடி

யாழ்ப்பாணம் சென்ற மகிந்த இன்று துரையப்பா திறந்தவெளி அரங்கில் மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் எனபதுபோல சூசகமாகக் கூறி, பின்னர் அங்கு இராணுவத்தினர் நிலைகொள்வர் எனவும், பாதுகாப்பு அரண் அகற்றப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார். அதாவது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள, மற்றும் பாதுகாப்பு அரண் ஸ்தாபிக்கப்பட்டு அங்கு மக்கள் செல்லமுடியாத இடத்தையே நாம் உயர் பாதுகாப்பு வலயம் என்கிறோம், ஆனால் இவர் இதற்கு புது விளக்கம் சொல்கிறார்.

மேலும் வாசிக்க...
 

அமரர் வேலுப்பிள்ளைக்காக இரங்கல் உரையாற்றிய இடதுசாரி முன்னணி உறுப்பினர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளின் பின்னர் அஞ்சலி உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மன்னார் மறைமாவட்டத்திற்கு போப் பிரதிநிதி விஜயம்

போப்பாண்டவரின் இலங்கையின் பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பீட்டரி அவர்கள் மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம் செய்திருக்கின்றார்.

மேலும் வாசிக்க...
 

நாடாளுமன்றத்தில் மேல்சபை உருவாக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அங்கு உரையாற்றிய பொதுச் கூட்டத்தில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் மேல்சபை(செனட்) ஒன்று உருவாக்கப்படும் என்றும், அதில் மாகாண சபையின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வகையான அரசியல் தீர்வு என்று அவர் விளக்கமளிக்கவில்லை.

மேலும் வாசிக்க...
 

கோத்தபாயாவின் மனைவி பெரும் நிதியுடன் சிறீலங்காவில் இருந்து தப்பி ஓட்டம்

சிறீலங்காவில் எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவின் மனைவி பெரும் நிதியுடன் ஆசிய நாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

மகிந்தவின் பயணம்; தமிழரசுக் கட்சி மாநாடு; வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு: நாளை யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் விஜயம், தமிழரசுக் கட்சியின் வருடாந்தத் தேசிய மாநாடு, வே. பிரபாகரனின் தந்தை தி.வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வு என மூன்று முக்கிய நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

மேலும் வாசிக்க...
 

தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வுகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு அனுமதி கிடைத்து, வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1106 - மொத்தம் 1111 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.