உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடிவரும் கிளர்ச்சியாளரகளுக்கு ரஷ்யா உதவிபுரிந்தால், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி கோரிப் போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.