குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமனம்

சிவசங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

மேலும் வாசிக்க...
 

திருமணத்திற்கு முன்னரான உடலுறவு பற்றி நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்களில் குற்றமில்லையென கூறமுடியாது - இந்திய உச்ச நீதிமன்றம்

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழ் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து, குற்றமில்லை என்று சொல்ல முடியாது என இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி: எம்.கே.நாராயணன் புகார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான  இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மேலும் வாசிக்க...
 

சிட்னியில் இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரகுமான்.

ஆஸ்திரேலியாவின் இந்தியர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு தீர்வு காண முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இறங்கி உள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 

கழுதைகளுக்கு தெரியுமா?

சக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா?

மேலும் வாசிக்க...
 

திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ரவுடி கும்பலால் வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த தமிழக அமைச்சர்கள் இருவர்,

மேலும் வாசிக்க...
 

ஆந்திர மாநில வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு

தெலங்கானா ஆதரவு போராட்டம்இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெலங்கானாப் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்தம் அங்கு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

நாட்டின் பல பாங்களையும் தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கும் சாலைகள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

இந்திய விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள்

இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள், இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில், நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கோபன்ஹேகன் மாநாட்டு முடிவுகள் இந்திய இறைமையை பாதிக்காது என்கிறார் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்

பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கை, இந்தியாவின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 35 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.