குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின்

நினைவேந்தல் நிகழ்வு.

அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் 24.05.2015- பி.ப. 3.30 மணிக்கு சுவிற்சர்லாந்து தலைநகர் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வு. அனைவரையும் இம்நினைவேந்தல் நிகழவில் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிசுவாழ் பூநகரி மக்களும் அவர்களின் நண்பர்களும்.

உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவரும்,தமிழ் சர்வதேச ஊடகங்களில் நன்கு அறியப்பட்டவரும், கனடா உதயன் பத்திரிகையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக “பூநகரான் பார்வையில்” என்னும் தொடரை எழுதியவரும், கனடா தமிழ் விஸன்” ( TVi) தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தவருமான திரு குகதாசன் பொன்னம்பலம் (பூநகரான்) காலமான செய்தியை வாசகர்கள் அனைவரும் அறிந்து இருப்பார்கள்.

 

 

 

 

அன்னாரின் பூதவுடல் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை மார்க்கம் நகரில் உள்ள Chapel Ridge Funeral Home ல் (8911 Woodbine Avenue) மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், இலங்கை தபால் திணைக்கள முன்னாள் உத்தியோகத்தர்கள், கனடா வாழ் கலை இலக்கிய அன்பர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வர்த்தக அன்பர்கள் ஆகியோர் பெருமளவில் அமைதியாக வந்து திரு குகதாசன் பொன்னம்பலம் அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

 

அவரது துணைவியார் தனலட்சுமி மற்றும் இரண்டு பிள்ளைகள் அபிராமி, தர்மினி ஆகியோர் மற்றும் உற்றார் உறவினர்கள் பலர் அங்கு துயரம் தோய்ந்த முகத்துடன் கண்ணீர் சிந்திய வண்ணம் காணப்பட்டார்கள்.

 

இரங்கல் உரை பகுதியை எழுத்தாளர் திரு குயின்றஸ் துரைசிங்கம் தொகுத்து வழங்கினார். முதலாவது இரங்கலுரையை கனடா உதயன் திரு ஆர்,என். லோகேந்திரலிங்கம் ஆற்றினார்.

 

அமரர் பூநகரான் குகதாசன் அவர்களுக்கு மக்கள் தமது இறுதி அஞ்சலியை இன்று ஞாயிற்றுக்கிழமையும் காலை செலுத்தலாம். காலை 8.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரது பூதவுடல் இன்றே தகனம் செய்யப்படும்.

 

நேற்று எடுக்கப்பட்ட படங்கள் கீழே,

 

மேலதிக விபரங்களுக்கு – 416 725 1570- 0041 31 302 38 70