குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தபால் மூல வாக்களிப்பு - அரச பணியாளர்களின் விபரங்கள் சந்திரசிறி வசம் - பழிவாங்கும் படலம் ஆரம்பம்

 29.07.2011  -நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பில் பங்கெடுத்த அரச பணியாளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற விபரங்கள் வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறி வசம் சிக்கியிருப்பதாக தெரியவருகிறது. இதையடுத்து பழிவாக்கும் படலம் ஆரம்பமாகியிருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவந்துள்ளது.  யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்ட அரச பணியாளர்கள் எந்தத் தரப்பிற்கு வாக்களித்தார்கள் என்பன தொடர்பான விடயங்களே வடக்கு மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி வசம் சிக்கியிருப்பதாகத் தெரியவருகின்றது.
 
யாழ் செயலகத்தின் அதியுயர் அதிகாரி ஒருவர் இந்த ஆவணங்களைக் கையளித்திருப்பதனை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உள்ளகத் தரப்பினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.. தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டு இருப்பதையடுத்து அரச அதிகாரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் வடக்கு மாகாண ஆளுனர் ஈடுபட்டிருப்பதாகத் கூறப்படுகிறது.
 
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட வடக்குப் பகுதியில் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வியால் ஆளுனர் சந்திரசிறி மிகவும் குழப்பமடைந்திருக்கின்றார்.
 
'ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எந்த முகத்துடன் சந்திப்பேன்' என அவர் தனது செயலாளர்களிடம் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். இதனிடையே கொழும்பு சென்றிருந்த அவர்மீது ஜனாதிபதியும் தனது கோபாவேசத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் திரும்பியுள்ள அவர் பழிவாங்கும் வகையிலான இடமாற்றங்களையும் வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
 
ஏற்கனவே வடமாகாண கல்விப்பணிப்பாளர் விக்னேஸ்வரன் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார். இதையடுத்து பலர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
 
பலர் பதவிகள் இல்லாத இடங்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர். 60 வயது தாண்டிய ஓய்வூதியம் பெறுகின்றவர்கள் பலர் அடுத்த மாதம் 15ம் திகதி முதல் வீட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த மாற்றத்தினாலும் வீட்டிற்கு அனுப்புவதனாலும் பல வெற்றிடங்கள் வடக்கு மாகாணத்தினில் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது. இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு பயிற்சி நடவடிக்கைகளுக்காக வந்துள்ள தென்னிலங்கை சிங்களவர்களைக் கொண்டு நிர்வாக சேவை வெற்றிடங்கள் நிரப்பப்படலாம் என்ற ஊகங்களும் வெளியாகிருக்கின்றன.

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் உயர்வடைந்தள்ளன - இமெல்டா சுகுமார்
29 .07. 2011  வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். சிறு பிராய திருமணங்கள், இளவயது கர்ப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஒவ்வொரு மாதத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பதிவாவதாகவும் இவை 20 முதல் 100 வரையில் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரதேச வைத்தியசாலைகளின் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் கடந்த 12 மாதக் காலப்பகுதியில் ஒன்பது பெண்கள் அவர்களது கணவன்மாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதேச பெண்களுக்கு விசேட வழிப்புணர்வு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
வன்முறைச் சம்பவங்களிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, யாழ்ப்பாண பெண்களிடையே பாலியல் தொழில் பிரபல்யம் பெற்று வருவதாக ஜே.வி.பி சோசலிச இளைஞர் முன்னணி செயற்பட்டாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் இயல்பு நிலைமை ஏற்படுத்தப்படாத காரணத்தினால் இவ்வாறான சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.