குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழர் அரசியலில் அடுத்துவரும் வாரங்கள் முக்கியமானவை – த.தே.கூ. தலைவர் சம்பந்தன்!

29.07.20011த.ஆ.2042--வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எடுத்துள்ளது எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இது விடயம் முக்கியமானதாக அமையப்போகின்றது என்று தமிழ்த்தேசியக்கட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது இதனைத்தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை மற்றும் சேருவில பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மற்றும் வேட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

கலந்துரையாடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமை வகித்தார்.

அப்போது இன்றைய அரசியல் நிலவரம் பற்றி சம்பந்தன் பேசினார்.

‘வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தின் இறைமை மற்றும் ஆட்சி அதிகாரம் ஆகியன தங்களிடமே இருக்க வேண்டும் என்பதை உள்ளுராட்சித்தேர்தலில் தெட்டத்தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தில் தங்களுக்குத் தாங்களே எஜமானர்களாக இருக்க வேண்டும் என்பதை தேர்தல் மூலம் நிலைநாட்டியுள்ளனர். என்றுமே இல்லாத வகையில் ஐநா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச சமூகம் இலங்கை பல்லின நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட லேண்டும் என்றும் அங்கு தமிழ் மக்கள் சம உரிமை பெற்று வாழ்வதற்கு உரித்துடையவர்கள், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாகக்கூறியுள்ளன.

தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழத்தேசியக்கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என்று சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அந்த அழுத்தம் காரணமாக எம்முடன் பேச்சுவார்த்தையை அரசாங்கம் நடத்தி வருகின்றது.

கூட்டமைப்பு ஏற்கும் எந்த அரசியல் தீர்வையும் தாம் ஏற்கத்தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்திருக்கின்றது. இதே நிலைப்பாட்டை ஏனைய அரசியல் கட்சிகளும் எடுக்கப்போகின்றன என்று சம்பந்தன் தெரிவித்தார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.