குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது

 29.07 2011  -யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாகக் காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 320000த்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
 
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் ஆசனங்கள் ரத்தினபுரி, மாத்தறை, குருணாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுடன் சேர்க்கப்படவுள்ளது.
 
 
யாழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடாது – சுரேஸ்
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்திலிருந்து ஆறாகக் குறைக்கப்படுவது அநீதியானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
2009ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
பெரும் எண்ணிக்கையிலான யாழ்ப்பாண மக்கள் வெளிநாடுகளிலும், வேறும் மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 
போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போதுதான் மீளத் திரும்பி வருவதாகவும் இதனாலேயே வாக்காளர் இடாப்பில் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், யுத்த காலத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடனும் தேர்தல் ஆணையாளருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஆண்டின் இறுதிக்குள் அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் - கெகலிய
29.07. 2011  இந்த ஆண்டின் இறுதிக்குள் அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
அவசர காலச்சட்டத்தின் வலுவான சில சரத்துக்கள் விரைவில் அகற்றப்பட உள்ளதாகவும், கிரமமான முறையில் சட்டம் முழுமையாக அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவசரகாலச் சட்டம் அகற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்கள் உள்நாட்டு ரீதியிலேயே எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு அஞ்சி, அவசரகாலச் சட்டம் நீக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்படாவிட்டால் இலங்கைக்கான உதவி நிவாரணங்கள் நிறுத்தப்படும் என அண்மையில் அமெரிக்கா காங்கிரஸ் சபை எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
உலகின் பல நாடுகள் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஆட்சி நடத்தி வருகின்ற போதிலும், இலங்கையில் அவ்வாறான நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் போது அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையிலேயே தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
தேசிய சனநாயகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக எஞ்சியுள்ள உள்ளராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.