குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் – ஆந்திர மனித உரிமை செயல்பாட்டாளர்கள்

 27.07. 2011  த.ஆ-2042--ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஊடகவியலாளர் மன்றத்தில் சனிக்கிழமை 23 யூலை 2011 அன்று 'போர்க்குற்றங்கள் ,இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்' ஆந்திர மாநிலக் குழுவின் சார்பாக, 'தமிழின அழிப்பை நிறுத்து! ,லங்கை போர்க்குற்றவாளிகளைத் தண்டி!' என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இ,ந்தக் கூட்டத்தில் 'போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்' ஆந்திர மாநிலக் குழுவில் உள்ள, APCLC, CLMC, OPDR, HRF, The March போன்ற பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மக்கள் அமைப்புகள் கலந்து கொண்டன.
 
கூட்டத்தில் கலந்து கொண்ட சிவில் லிபர்ட்டி மானிடரிங் கமிட்டியை (CLMC) சேர்ந்த அனீஸ்ஃபாத்திமா பேசுகையில்:
 
சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மொழி, நிறம், கலாச்சாரம், மதம் இவற்றில் சிறுபான்மைனராக இருப்பவர்களைப் பெரும்பான்மை சமூகம் தொடர்ந்து ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும். சிங்களர்கள், தன் சொந்த நாட்டில் சிறுபான்மையாக உள்ள மக்களைப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் இனப்படுகொலை செய்துவிட்டு, அதை 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று கூறி மறைக்கப் பார்க்கிறார்கள என்றார்.
 
'தி மார்ச்' அமைப்பின் சந்தனா சக்ரபர்த்தி பேசுகையில்,
 
வெளிஉலகினர் யாரும் அனுமதிக்கப்படாது, சாட்சிகளற்ற ஒரு இன அழிப்புப் போரை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. சேனல்4-ன் ஆவணப்படத்தின் மூலம் ,ந்தக் கொடூரங்கள் இன்று உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த போரானது, 90,000க்கும் அதிகமானவர்களை கணவர்களை இழந்த பெண்களாக்கியுள்ளது. போர் முடிந்த பின்பும், தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகள், ஆதரவற்ற முதியோர்கள், அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது போரின் முகம். மனிதத்தன்மையற்ற இந்தக் கொடூர செயல்களுக்கு எதிராக நாம் இன்னும் அமைதியாகவே இருக்கப்போகிறோமா?. மானுடத்திற் கெதிராக நடந்தேறும் அவலங்களுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாவரும் இணைந்து, தங்கள் மொழி, மாநிலம், நாடு என்று தங்களைச் சுருக்கிக் கொள்ளாமல், செயலாற்றவேண்டும் என்றார்.
 
சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்.மணிவண்ணன் அவர்கள் பேசுகையில்,
 
உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வராத ஒரு கேள்வி, இலங்கைப் பிரச்சினை பற்றிப் பேசும் போது மட்டும் வருகிறது. அது 'நீ தமிழனா? அதனால் தான் இப்பிரச்சினை பற்றி பேசுகிறாயா?' என்ற கேள்வி. ,லங்கை போரில் ,ந்தியாவின் தொடர்பு பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'நாங்கள் சிறு ஆயுதங்கள் மட்டுமே வழங்கினோம்' என்று இந்திய அரசு பதில்அளித்தது. ஆயுதங்களில் சிறியது பெரியது என்று என்ன வித்தியாசம் இருக்கிறது? எல்லா ஆயுதங்களும் மக்களைக் கொல்லத்தானே பயன்பட்டது! ,தனால் தான், காங்கிரஸின் துரோகத்தை மன்னிக்காதத் தமிழர்கள் 1967-க்குப் பிறகு, கடந்த தமிழகத் தேர்தலில்அதனை மிக மோசமாகத் தோற்கடித்தார்கள்.
 
சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்களர்கள் அதிகாரத்தைத் தங்கள் பக்கம் வைத்துக் கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டனர் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் பறித்தனர்; அவர்களின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிக்கத் தொடங்கினர். இப்போது, போருக்குப் பிறகும் 'முகாம்'களில் தங்க வைக்கப்பட்டுள்ளத் தமிழர்கள் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மிச்சம் மீதி எஞ்சியிருப்பதையும் இலங்கை இராணுவமும், புதிதாகக் குடியமர்த்தப்பட்டுவரும் சிங்களர்களும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.இதையெல்லாம் மக்களுக்குத் தெரியப்படுத்தாமல், இலங்கை அரசு சொல்லும் பொய்களையெல்லாம் செய்திகள் என்று 'தி ,ந்து' போன்ற சில ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. 'ஒரு பொய்யை ஆயிரம் முறை திரும்பத் திரும்ப சொல்லும் போதுஅது 'உண்மை'யாக உருமாருகிறது' என்பதை இலங்கையும் அதற்கு ஆதரவான ஊடகங்களும் கையாண்டு வருகின்றன என்றார்.
 
 
 
உலகிலுள்ள எல்லா மக்கள் ,யக்கங்களும் ஒன்று தான். அவற்றின் ஒற்றை நோக்கம் மக்களின் நலன், என்று பேசிய ரமேஸ்
 
'மக்கள் ஒன்று சேர்ந்தால் இலங்கை, இந்தியா ஏன் உலகமே எதிர்த்தாலும் தமிழர்களின் வெற்றி நிச்சயம்.  எல்லா மக்கள் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது. இலங்கைத் தமிழர்களே, நீங்கள் தனியாக இல்லை. உங்களின் போராட்டங்களைக் கண்டு நாங்கள் கண்ணீர் வடிக்கின்றோம்.  உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்'
 
என்று பொருள் பொதிந்த ஒரு தெலுங்குப் பாடலை மேடையில் முழங்கினார்.
 
மனித உரிமை மன்றத்தின் (HRC) சீவன்குமார் அவர்கள் பேசுகையில்
 
மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது ஒரு உலகளாவிய நிகழ்வு. ஆனால், ஆட்சியாளர்கள் பிரச்சினைகளுக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல், தங்களால் முடிந்த வழிகளில் எல்லாம் போராட்டங்களை அடக்கிவிட முயற்சிக்கிறார்கள். அரசின் ,த்தகைய முயற்சிகளை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். ,இலங்கை பிரச்சினையின் மூல காரணங்களை மக்களிடம் விளக்க வேண்டும். தொடர் கூட்டங்கள், போராட்டங்கள் மூலம் உலகத்தின் கவனத்தை ,ப்பிரச்சினை தொடர்பாகத் திருப்ப வேண்டும் என்றார்.
 
வீக்சனம் ,தழின் ஆசிரியரான வேணுகோபால் அவர்கள் பேசுகையில்,
 
தமிழ்நாட்டில் ,ருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான 'தி இந்து', இலங்கையிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகைகளைக் காட்டிலும் அதிக துரோகத்தைத் தமிழர்களுக்கு ,ழைத்து வருகிறது. இப்பத்திரிகைக்கு ராஜபக்சே வழங்கிய பேட்டியில், சேனல்4 வீடியோவை' மற்ற திரைப்படங்களைப் போல அது ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு படம்' என்கிறார். அவருடன் அமர்ந்து மதிய உணவருந்திவிட்டு வரும் இந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுதன் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்.
 
ஈழப்பிரச்சினையைப் பின் வரும் முறைகளில் அணுகுவது நல்ல புரிதலை அளிக்கும். மனிதநேயம் மற்றும் அரசியல்பார்வை.
 
இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றி ஒவ்வொரு அறிக்கையிலும் ஒவ்வொரு விதமாகக் குறிக்கப்பட்டுள்ளது. நடுநிலையாளர்கள் ,இந்தஎண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். மனிதநேய ஆர்வலர்கள் இதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். தான் எந்த ' போர்க்குற்றங்களையும் செய்யவில்லை என்று திரும்பத்திரும்ப கூறிவரும் 'ராஜபக்சே' அரசாங்கம் பின்னர் எதற்காக 'சர்வதேச விசாரணைக்கு' மறுப்பு தெரிவித்து வருகிறது?
 
தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். 1956-ல் தமிழை ஆட்சி மொழியில் ,இருந்து நீக்கினார்கள். இது போன்று தொடர்ந்து தமிழர்கள் ஒடுக்கப்பட்டதனால்தான் விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதக் குழுக்கள் உருவானார்கள்.
 
தமிழர்களைக் கொன்று அழித்ததைப் 'பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்' என்று, ராசபக்சே கூறி வருகிறார். மன்மோகன் சிங் அதையே முன்மாதிரியாகக் கொண்டு 'பசுமைவேட்டை' என்ற பெயரில் இந்தியாவில் நிகழ்த்தப் பார்க்கிறார்.
 
விசாரணையின்றி தன்சொந்த அரசாங்கத்தாலேயே கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பது நம்அனைவரின் கடமை என்றார்.
 
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய 'போர்க்குற்றங்கள் ,இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்' ஆந்திர மாநிலப் பொறுப்பாளரான ஆந்திர சிவில் லிபர்டி கமிட்டியை APCLC ஊ சேர்ந்த சுரேசு குமார் அவர்கள் ,இம்மன்றம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
 
கடந்த 02 யூலை 2011 அன்று 'போர்க்குற்றங்கள் ,இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்' கர்நாடக மாநிலக் குழுவின் சார்பாக அரங்க கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது ,இங்கு குறிப்பிடத்தக்கது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.