குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

ஏன் பிரபாகரன் பெயரிலும் இவர்கள் இறைச்சிக்கடை வைப்பார்கள். எம்தமிழ் நெஞ்சங்களே சிந்தியுங்கள்!!!

27.07.2011  இனஉணர்வு இல்லாத   தமிழ்வியாபாரிகள்  எவர்பெயரையும் விற்பார்கள். தமிழ் மன்னன் மாவீரன் எல்லாளன் இறைச்சிக்கடைகளும், விளம்பரங்களும்!-ஒரு வாசகனின் ஆதங்கம்சுதந்திரதாகம் கொண்ட சுவிசில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் எத்தனை ஆண்டுகள், எத்தனை தடவைகள் ஐ.நா சபை முன்றலில் சென்று சுதந்திரதாக உணர்வுகளை வெளிக்காட்டி உரிமைகளை கேட்டிருந்தார்கள். அதையெல்லாம் ஐக்கிய நாடுகள் சபை கண்டுகொண்டதா? என்பது கேள்விக்குறி. கண்டுகொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் பற்றி குமுறியிருக்கமாட்டோம். கண்டுகொள்ளவில்லையே என்பதே தமிழினத்தின் ஆதங்கம்.

இந்த சுதந்திர வேட்கையினதும், தமிழினப்போராட்டத்தினதும் ஆரம்பமாக இருக்கக்கூடிய மாவீரன் எல்லாளனது வரலாறு அதை மறப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த மாவீரனின் போராட்ட வரலாற்றின் பரிணாமமே இன்று எமது விடுதலைப் போராட்டம்.

அந்த மாவீரனின் பெயர் இறைச்சிக்கடைகளுக்கும், மீன் சந்தைகளுக்கும்; சூட்டப்பட்டுள்ளது. அதை கண்டுகொள்ளாது இருப்பது வெட்கக்கேடான விடயம்.

இன்று தமிழர்களின் மன்னன் எல்லாளன் இறைச்சிக்கடைகளும், மீன் சந்தைகளும்- நாளை தமிழீழ மாவீரர்கள் இறைச்சிக்கடை, மீன் சந்தைகள் என்றும், பண்டாரவன்னியன் பெயரில் பிரியாணி கடைகள் என்றும் அந்த மாவீரர்களுக்கு இந்தப் பெருந்தகை வியாபாரிகள் இப்படித்தான் மரியாதை செலுத்துவார்கள். ஏன் பிரபாகரன் பெயரிலும் இவர்கள் இறைச்சிக்கடை வைப்பார்கள். எம்தமிழ் நெஞ்சங்களே சிந்தியுங்கள்!!!

எமக்கு நடந்த கொடுமைக்கு அதைத் தடுப்பதற்கு உலகில் யாரோ எல்லாம் பொறுப்பிலிருந்தும் மௌனமாக இருந்துவிட்டார்கள் என்று குமுறிக் கோபப்படும் நீங்கள், உங்கள் கண் முன்னே ஒரு மாவீரன் பெயரும் அவன் வாள்; உம் இறைச்சி வெட்டுவதற்கும், மீன் அறுப்பதற்கும் விளம்பரப்படுத்துவது கண்டு மௌனித்துப்போனது ஏன்?

சுவிசிலுள்ள சமூக அமைப்புகளானாலும் சரி கலைபண்பாடு வரலாற்று விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பு மிக்கவர்களானாலும் சரி,பொறுப்புமிக்க இணையத்தளங்களானாலும் சரி ஏன் கண்டுகொள்ளவில்லை?

தமிழாட்சி புரிந்த மாவீரன் எல்லாளன், மாவீரன் பண்டாரவன்னியன் போன்றோரினதும் தமிழாட்சிக்காக இன்றுவரை போராடிய எம் மாவீரர்களின் வரலாற்றை எல்லாம் இங்கு வாழும் இளைய தமிழ் தலைமுறைக்கு அறிவூட்டி அவர்களின் திறமைக்கும், புலமைக்கும் இந்த மாவீரர்களின் பெயரால் விருது வழங்குவதே பொறுப்புமிக்கவர்களின் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கப்போகிறதா அல்லது எம் இளம் சந்ததிக்கு நீங்கள் காட்டும் வரலாற்றுக் கற்பிதம் இந்த விளம்பரம்தானா?

எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் எல்லாளன் இறைச்சிக்கடை என்றும் மீன்கடை என்றும் பெயர் வைத்து வியாபாரம் நடத்துபவர்கள் வேறு யாருமல்ல. மகிந்த…டக்ளஸின் அடிவருடிகள் தான்.

நெஞ்சுபொறுக்குதில்லையே…….     எம் தமிழ் நெஞ்சங்களே சிந்தியுங்கள்!!!

ஈஸ்வரன், சுவிஸ்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.