குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிலாரி - யெயலலிதா புதிய உறவுகள்:கொழும்பில் உருவாகியிருக்கும் அச்சம்!

26.07.2011.-- இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வாரம் சென்னை சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலாரி கிளின்டன், தமிழக முதலமைச்சர் செல்வி யெயலலிதா யெயராமுடன் நடத்திய பேச்சுக்களின் போது இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பிரசுதாபிக்காததையிட்டு கொழும்பு நிம்மதியடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் வாஷிங்டன் - சென்னை உறவுகள் வலுவடைவதையிட்டு இலங்கை அரச தரப்பு கவலையடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் தன்னுடைய பேச்சுக்களை முடித்துக்கொண்டு இந்தோனேஷியா செல்லும் வழியில் சென்னை சென்ற கிலாரி கிளின்டன், யெயலலிதாவுடன் கூமார் 45 நிமிடங்கள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அதிகாரிகள் சகிதம் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுக்களையடுத்தே இருவரும் தனிமையில் 45 நிமிடங்கள் பேச்சுக்களை நடத்தியதாக தமிழக அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவருடைய பேச்சுக்களின் போதும் இலங்கைத் தமிழர்களின் விவகாரம் தொடர்பாகப் பேசப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபட்டபோதிலும், இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இதனைவிட தமிழகத்தில் முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜெயலலிதா விளக்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், இலங்கைப் போரின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதை இருவரும் தவிர்த்துக்கொண்டதையிட்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் திருப்தி தெரிவித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அது தொடர்பாக இச்சந்திப்பின் பேசப்படலாம் என கொழும்பு அச்சத்துடன் எதிர்நோக்கியிருந்தது.

இருந்தபோதிலும் போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பேசப்படாததது இலங்கைக்கு நிம்பதியைக் கொடுப்பதாக அமைந்திருந்தாலும் கூட, அமெரிக்காவுக்கும் சென்னைக்கும் இடையில் உறவுகள் வலுவடைவது இலங்கையின் நிம்மதியைக் குலைப்பதாக அமையலாம் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தற்போது கருதுவதாகத் தெரிகின்றது.

இலங்கை மீது தடைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ஜெயலலிதாவுடன் உறவுகளை வலுப்படுத்துவற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பது கொழும்புக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்மைக்காலத்தில் சென்னைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு முதலமைச்சர் ஒருவருடன் முக்கிய அரசியல் விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியுள்ள ஒரு உயர் மட்ட சர்வதேசத் தலைவராக ஹிலாரியே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.