குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

திமுக தொடங்கியது வேட்டை. - வசந்தன்.

25.07.2011--கடந்த அதிமுக ஆட்சியின் போது கலைஞரின் கோபாலபுர வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த போலீசார் அத்துமீறி கலைஞரிடம் நடந்து கொண்டார்கள். அந்த நாட்கள் ஒரு எமர்ஜென்சியை நினைவுபடுத்தியது என்றால் அதுதான் உண்மையும் கூட, கலைஞரை கைது செய்வதற்கான முகாந்திரமோ, முன் அறிவிப்போ, சம்மனோ இல்லாமல் தடாலடியாக நடந்த கைது அது. அன்றைக்கு கலைஞருக்காக கட்சி பேதமின்றி அனைவரும் குரல் கொடுத்தார்காள். அவர மூன்று நாட்களுக்கு மேல் சிறையில் வைக்க முடியாவில்லை. அவர் விடுதலை ஆனார். இப்போதோ கலைஞரைத் தவிற திமுகவில் உள்ள பெரும்பலான இரண்டாம் மட்டத் தலைமைகள் அனைத்துமே கைது செய்யப்படும் நிலை. ஆனால் இப்போது ஒரே ஒரு மாற்றம். அதிரடிக் கைதுகள் இல்லை, போலீஸ் அடவாடி இல்லை, முறையாக போலீசார் சம்மனை அனுப்புகிறார்கள்.விசாரணைக்கு வருமாறு அழைக்கிறார்கள். விசாரணைக்கு வர நேரம் தேவைப்பட்டால் அதையும் கொடுக்கிறார்கள்.பின்னர் தேவைப்பட்டால் கைது செய்கிறார்கள்.இந்த கைதுகளை கண்டிக்கவோ, இது பழிவாங்கும் நடவடிக்கை என்றோ சொல்ல எவரும் இல்லை. திமுக மட்டுமே இதை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறது. மக்களின் வெறுப்பை சமாதிக்கும் அளவுக்கு நில அபகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் மீது புகார் கொடுத்திருப்பவர்கள் அனைவருமே அப்பாவிகள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக பிரமுகர்களிடம் தங்களின் நிலங்களை இழந்தவர்கள்.நிலம் அபகரிப்பு மட்டுமல்ல எந்த தொழில் என்றில்லாமல் எல்லா தொழில்களையும் கைப்பற்றிய திமுகவினர் மீதான வேட்டையைத் துவங்கியிருக்கிறது அதிமுக அரசு.

 

வேட்டை-1

......................

 

கலைஞர் கருணாநிதியின் கடந்த ஆட்சியின் போது நடைபெற்ற பல் வேறு முறைகேடுகள் குறித்து அதிமுக அரசு விசாரிக்கத் தொடங்கியுள்ளது. ஊடக ஆதிக்கம், நில அபகரிப்பு, கட்டைப்பஞ்சாயத்து, உள்ளிட்ட பல் வேறு முறைக்கேடுகள் குறித்தும் தமிழக அரசு தனது விசாரணையைத் துவக்கியுள்ளது. இதில் முதலாவது பொறிக்குள் கொண்டு வரப்பட்டவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் செயல் அதிகாரி சாக்சேனா. திரைப் படத்துறையில் ஏக போக செல்வாக்கைக் கொண்டிருந்த சன் குழுமத்தால் பல் சிறு நடுத்தர தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சேலம் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாக்சேனா கைது செய்யபப்ட்டுள்ளார். ஒரு வழக்கில் கைது செய்யபப்ட்ட பின்னர் மேலும் நான்கு வழக்குகள் என்று அவர் மீதான மோசடி வழக்குகள் இப்போது ஐந்து. முன்னர் ஒரு முறை கலைஞர் கைது செய்யப்பட்ட போடு தனது ஊடகங்களை வைத்து சன் குழுமம் உருவாக்கிய பரபரப்பை இப்போது உருவாக்க முடியவில்லை. அப்படி ஒரு பரபரப்பை அவர்களால் இனி உருவாக்கவும் முடியாது காரணம். மக்கள் மத்தியில் கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் கசப்புமே காரணம். 

 

எனது உயிருக்கு ஆபத்து சக்சேனா நீதிபதிக்கு கடிதம்.

..................................................................................................

 

5 வழக்குகளில் கைதாகி ஜெயிலில் இருக்கும் நிலையில் அவருக்கு 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது.இதுவரை இரண்டு முறை போலீஸ் காவலுக்கு அனுப்பட்டு விட்ட நிலையில், நீதிமன்றம் வந்த சக்சேனா நீதிபதியிடம் தான் எழுதிய கடிதம் ஒன்றை ஒப்படைத்தார். அக்கடிதத்தில் தன்னை போலீசார் துன்புறுத்துவதாகவும் சன் பிக்சர்ஸ், சன் தொலைக்காட்சி அதிபர் கலாந்திமாறனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்குமாறு தன்னை அச்சுறுத்துவதாகவும் என்னை போலீசார் மிரட்டுகின்றனர். மேலும் போலீசார் நான் போலீஸ் விசாரணையில் கலாநிதிமாறனுக்கு எதிரான வாக்குமூலங்களைக் கொடுத்து விட்டதாக சில செய்திகளை ஊடகங்களில் பரப்பிவருகின்றனர். கலாநிதிமாறனுக்கு எதிரான எந்த விதமான வாக்குமூலங்களையும் நான் போலிசாரிடம் கொடுக்கவில்லை. அவர்களே அப்படியான வேலைகளைச் செய்கிறார்கள். என்னை மிரட்டும் விதமான சிறைக்குள்ளேயே என்னை தாக்குவார்களோ என்று அஞ்சுகிறேன். ஆகவே என்னை போலீஸ் விசாரணைக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை பெற்றுக் கொண்ட நீதிபதி அவரை 27 மணி நேர போலீஸ் விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கினார்.ஆனால் ஏற்கனவே கலாநிதிமாறனுக்கு ஆஜராகக் கோரி தமிழக போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு அவர் வருகிற 26-ஆம் தேதி வரை விலக்குக் கேட்டிருந்தார் அதை போலீசார் வழங்கியுள்ள நிலையில் 26-ஆம் தேதி கே.கே. நகர் போலீசில் கலாநிதிமாறன் ஆஜர் ஆகும் போது சாக்சேனா போலீஸ் காவலில் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே கலாநிதிமாறனையும் கைது செய்து விட முடியும். ஏனென்றால் போலீசார் என்னை மிரட்டுகிறார்கள் என்று நீதிபதிக்கு கடிதம் எழுதிய சக்சேனா அதற்கு சில நாட்கள் முன்பு போலீசார் உங்களை துன்புறுத்தினார்களா? என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்துள்ளார். ஒழுங்காக உணவு கொடுத்தார்களா?என்று கேட்டதற்கு ஆமாம் என்றும் பதிலளித்த சக்சேனாதான் அதே போலீசார் மீது இப்போது புகார் கூறியிருக்கிறார்.

 

வேட்டை-2

.....................

 

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

 

சேலம் பிரிமியர் ரோலர் மில் இயக்குநர் வி.ரவிச்சந்திரனும், அங்கம்மாள் காலனி டி.கணேசன் ஆகியோர் போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் தங்களது நிலங்களை அடியாட்களை வைத்து மிரட்டி வாங்கிக் கொண்டதாக புகார் கொடுத்தனர். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சம்மன் அனுப்பினார்கள் ஆஜாராத அவரைப் பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நீதிமன்றத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் கோரினார். அந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சரணடையும் படி அறிவுத்தினார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து விட்டு புதன்கிழமை நீதிமன்றத்தில் அஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த திமுக ஆட்சி நடந்த போதே அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகள் அப்பாவி விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துப் பறிக்கிறார்கள் என்ற முனகல்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனால் ஆளும் கட்சி செல்வாக்குக் காரணமாக மௌனமாக இருந்தவர்கள் ஆட்சி மாறியதும் புகார் மனுக்களை போலீசாரிடம் கொடுக்கிறார்கள்.

 

முன்னாள் அமைச்சர் நேரு மீதான குற்றச்சாட்டுகள்.

திருச்சியில் பேருந்து நிலையம் அருகே சுமார் முப்பது கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஹோட்டலை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக கே.என்.நேரு மீது குற்றச்சாட்டு. நாமக்கல்லைச் சார்ந்த டாக்டர் கதிவேல்தான் பாதிக்கப்பட்டவர். இந்த வழக்கில் இதுவரை நேரு மீது வழக்கு பதியப்பட வில்லை. அவர் இந்த அபகரிப்புக்குத் துணை போனாரா?என்பதே போலீசாரின் விசாரணை நோக்கம். போதிய ஆதாரம் இருந்தால் அவரை கைது செய்வோம் என்கிறார்கள் போலீசார்.

 

மதுரை கைதுகள்.

...............................

 

மதுரை அன்பு என்பவர் சினிமா பைனாஸ்சியர் இதற்கு முன்னர் அதிமுக ஆட்சி நடந்த போது சசிகலாவில் துணையோடு சினிமாவில் பைனான்சியராக கால் பதித்தார். அநியாயமான வட்டி போட்டு சினிமா தயாரிப்பாளார்களை மரணத்தின் விளிம்புக்கே தள்ளியவர் இந்த அன்பு. தயாரிப்பாளரும் இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனுமான ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொள்ள முக்கிய காரணியாக விளங்கினார் என்று இவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பின.ஆனால் அப்போது ஆளும் கட்சி செல்வாக்கில் தப்பித்துக் கொண்டார். பின்னர் திமுக ஆட்சி வந்ததும் அப்படியே சசிகலா குழுவினரை கை கழுவி விட்டு மு.க. அழகிரி குழுவின் ஐக்கியமானார் அன்பு. சினிமா பைனாஸ் தொழிலோடு கூடவே ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். அப்பாவிகளை மிரட்டி நிலங்களைப் பிடுங்குவது, ஆள் அரவமற்று கிடக்கும் நிலங்களுக்கு போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பதுதான் இவரது தொழில். அடுத்து அட்டாக் பாண்டி கட்டப்பஞ்சாயத்து, வசூல் என்று என்று இறங்கிய ஒரு ரௌடியாக மட்டுமெ வாழ்ந்த அட்க்காக் பாண்டியை அரசியல் ரௌடியாக்கியது மு.க. அழகிரி மதுரை தினகரன் எரிப்பு வழக்கில் பிரதான குற்றவாளி. கைது செய்யபப்ட்டு பின்னர் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர். மதுரை விவசாயத்துறை வாரியப் பதவி வழங்கியதோடு அரசு வாகனத்தில் பாதுகாப்போடு பவனி வந்த அட்டாக் பாண்டி மீதும் நில அபகரிப்பு புகார்தான்.இது போல தளபதி என்பவர். ஆக மொத்தம் மதுரை அன்பு, அட்டாக் பாண்டி, தளபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பிரமுகரான எஸ்.ஆர்.கோபி இவர் திமுக பொதுக்குழு உறுப்பினர் மு.க அழகிரியால் நடத்தபப்ட்டது என்று சொல்லபப்ட்ட முன்னாள் திமுக அமைச்சரும் மதுரையில் தனக்குப் போட்டியாக இருந்தவருமான த.கிருட்டினன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கபப்ட்டு பின்னர் விடுதலையானர் இந்த எஸ்.ஆர்.கோபி.இவரின் தம்பி போஸ் முத்தையா மதுரை அவனியாபுரம் சேர்மன் ஆவார்.   மற்றொரு சகோதரர் திருப்பரங்குன்றம் திமுக ஒன்றிய செயலாளர் ஆவார்.மதுரை திருமங்களத்தை சேர்ந்த சிவனாண்டி,  அவரது மனைவி பாப்பா ஆகியோர்  மதுரை எஸ். பி.அஸ்ராஹாக்கியிடம் கொடுத்த புகாரில்,  தங்களது 5 ஏக்கர் நிலத்தை  மிரட்டி வாங்கியதாக தெரிவித்திருந்தனர். இந்தப்புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷும்,  திமுக மதுரை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திருமங்களம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திமுக முக்கிய பிரமுகர் தாய்முகாம்பிகை சேதுராமன் ஆகிய நான்கு பேர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று கைது செய்யப்பட்டனர்.இவர்களுடன் எஸ்.ஆர்.கோபியும் நேற்று கைதாக வேண்டியவர்.  அவர் நேற்று போலீசில் ஆஜராகாததால் இன்று மதியம் 3.05க்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.ஆர்.கோபி வீட்டுக்குள் புகுந்தது.   தொடர்ந்து வீட்டுக்குள் சோதனை நடைபெற்றது. வீட்டில் எஸ்.ஆர். கோபி இல்லை.   விசாரணையில் அவர் தாய்லாந்துக்கு தப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகார்களுக்கப்பால் அழகிரியின் மனைவி காந்தி மீதும் சுமார் 50 கோடி அளவிலான நிலங்களை அடியாட்களை வைத்து மிரட்டு பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டும் உள்ளது.

மேலும் சுற்றி வளைப்புகள்.

இன்றைய சூழலில் இதை பொய் வழக்குகள் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். இதுவரை ஸ்டாலின் மீதோ அவரது வாரிசுகள் மீதோ இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்னும் நிலையில் ஸ்டாலினை கைச்சுத்தமானவர் என்று சொல்லலாம். ஆனால் கலைஞரின் ஏனைய வாரிசுகளும் அவரது வழி வந்தவர்களும் அப்படி அல்ல. தயாளு அம்மாளின் பிரமாண்டமான ராயல் பர்னிச்சரில் தொடங்கி முக முத்துவின் மகன் வரை கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன, இவைகளை பழி வாங்கும் நடவடிக்கை என்று கூட சொல்ல முடியாது காரணம் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை இவர்களின் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இது போல எல்லா மாவட்டங்களிலுமே நேரடியாகவே நில அபகரிப்பு விஷயங்களில் திமுக பிரமுகர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு திமுக ஆட்சியின் போதே வெளியாவது. என்.கே.பி பெரியசாமியின் மகனும் திமுக பிரமுகருமான ராஜா ஒரு குடும்பத்தின் சொத்தையே அபகரித்ததோடு அவர்களை அடித்து உதைத்ததும் வரலாறு. ஆக மொத்தம் இன்றைய தேதியில் திமுக செய்த வினைகளுக்கான பலன்களை இந்த விஷயத்தில் அனுபவிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இதைத்தான் பொய் வழக்கு என்று சொல்லி கவர்னரிடம் மனுக்கொடுத்திருக்கிறது திமுக, மேலும் நேற்று கோவையில் நடந்த பொதுக்குழுவிலும் இது குறித்து விவாதித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த நில மோசடி கைதுகள், இரண்டு அமைச்சர்களின் பதவி பறிப்புகள்,ஆ.ராசா,கனிமொழி கைது, என புயலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் திமுகவில் வீசப்போகும் அடுத்த அலை. யாருக்கு தலைமை என்பதே மு.க அழகிரி தலைமையில் மாற்றம் தேவையில்லை என்கிறார்.ஸ்டாலினோ தலைமை தனக்கு வேண்டும்.கட்சியையே மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்கிறார்.உட்கட்சியில் வெல்லப்போவது எந்த அணி என்பதே இப்போது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.