குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

எதிர்ப்பு அரசியலுக்கு வெற்றி! தமிழ் செய்திகளுக்காக பரணிகிருசுணரயனி.

 25 .07. 2011  மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும்  மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள - பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது இதன்விளைவாக சிங்கள நிகழச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிருந்தோம்.
 
 இது சிங்களத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி. இந்த உளவியலிலேயே நாம் தொடர்ந்து இருக்கும் வண்ணமாக சிங்கள அரசு கவனமாகக் காய்களை நகர்த்தி;க்கொண்டிருக்கிறது. போரில் பாரிய வெற்றியை பெற்றபோதும் அதை இறுதியும் அறுதியுமான வெற்றியாக்கிக் கொள்ள போராடியவர்கள் மீதும் அதற்கு தோள்கொடுத்த மக்கள் மீதும் மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது சிங்கள அரசு. திட்டமிட்டே சிங்கள் அரசு நடத்தும் இந்த கபட நாடகத்தை புரிந்து கொள்ள முடியாமல் பலர் சிங்களத்தின் காலடியில் 'பொத்துபொத்து' என்று விழத்தொடங்கியிருக்கிறார்கள். தெரியாமல் விழுந்தவர்கள் பாதி 'தெரிந்தே' விழுந்தவர்கள் மீதி என்று வேறொருவகை அவலம் எமது இனத்தின் எதிர்காலத்தின் மீது இருளாய் கவியத் தொடங்கியிருக்கிறது.
 
 
எதிர்ப்பு அரசியலை  எப்படி செய்யப்போகிறோம் என்று சிந்தித்து செயற்பட வேண்டிய ஏன் நாம் சிங்களத்திற்கெதிராக எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டும் என்று மீண்டும் 60 வருடத்திற்கு முன் நோக்கி சுருங்கியது ஒரு அவலமான வரலாற்று முரண். மே18 உடன் முடிந்து போன ஆயுதப்போராட்டத்தின் பின் இந்தக் கணம்வரை இந்த கால இடைவெளியில் சிங்களத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை செய்வதற்கு சாத்தியமான நம்பிக்கை தரும் ஒரு சிறு சமிக்ஞைகூட தெரியவில்லை. மாறாக பெரும் பேரவலத்தை சிங்களம் கட்டவிழ்த்துக்கொண்டே இ;ருக்கிறது. ஆனால் தமிழத்தேசிய அரசியல் செய்பவர்கள் தொடக்கம் கேபி வரையான ஒரு தொகுதியினர் சிங்களத்துக்கு 'மனம் நோகாமல்' நடப்பது குறித்து வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கூட இந்த இணக்க அரசியலின் வலைக்குள் வீழந்தவர்களாகவே இருந்தார்கள்.
 
சிங்களத்துடன் இணக்கபாட்டு அரசியல் மூலம் நாம் எதையும் பெற முடியாது. அரசியலை விடுவோம். மக்கள் துயரங்களைக்கூட போக்க முடியாது. ஏனெனில் திட்டமிட்டே அயiவெயin  செய்யப்படுகிற  விடயம் இது. பேரம் பேசும் ஒரு வல்லமையை உருவாக்குவதுதான் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாக இருக்க முடியும். எல்லாம் முடிந்துவிட்டது என்று அவல அடிபணிவு ஒப்படைவு அரசியலை செய்யமுடியாது. ஏனெனில் சிங்களம் அதையும் தனக்கு சாத்தியமாக மாற்றுமே தவிர ஒரு சிறு உரிமையைக்கூட தராது. முள்ளிவாய்க்கால் அழிவை அடுத்து முதலில் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட இடைப்பட்ட இந்த காலம் மேற்படி யதார்த்தைத்தான் எமக்கு போதித்திருக்கிறது.
 
போரில் நலிவடைந்த  - விரட்டப்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை.. அவர்களது வாழ்விடங்களும் பாடசாலைகளும் மருத்துவமனைகளும் மீளமைக்கப்பட வில்லை.. ஆனால் மிகத்துரிதமாக சிங்கள குடியேற்றங்களும் புத்தவிகாரைகளும் தினமும் தமிழர் தாயகம் எங்கும் முளைத்தபடியே இருக்கின்றன. எந்த சக்தியாலும் இவற்றை தடுக்கமுடியவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் மீளக் குடியேற்றப்பட்டாலும் திடீரென முளைத்த சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களும் பௌத்த மேலாதிக்க மத அடையாளங்களும் ஏற்கனவே போரில் அழிந்து போன வாழ்வை கட்டமைக்க முயலும் தமிழ் மக்களுக்கு   மேலதிக வாழ்வியல் பௌதிக பொருண்மிய பண்பாட்டு சிக்கலை உருவாக்கும்.
 
இது வேறு ஒரு வகை அவலமாக அந்த மக்களுக்கு இருக்கும். இவை எல்லாவற்றையும் உற்று நோக்கும்போது மிக நுட்பமான முறையில் ஒரு அடக்குமுறையை சிங்களம் கையாள்வதாகவே தெரிகிறது. எம்மில் ஒரு தொகுதியினரே இன்று இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் நிலையிலிருந்து இந்த முரண் அவலத்தை புரிந்து கொள்ளலாம்.
 
எதிர்ப்பு அரசியல் என்றவுடன் ஏதோ ஆயுதப்போராட்டம் என்பதுபோல் பலர் கற்பனை செய்து வியாக்கியானங்களை அடுக்குகிறார்கள். இன்னொரு அவலத்திற்கு தூபம் போடுகிறார்கள் என்று உளறவும் தலைப்படுகிறார்கள். எதிர்த்தரப்புடன் பேரம் பேசும் வல்லமையை வளாத்துக்கொள்ளும் எல்லா மக்கள் செயற்பாடுகளும் எதிர்ப்பு அரசியல் வகைமைக்குள் வரும்.
 
அரசியல் தீர்வுகளை விடுவோம். மக்கள் அவலங்களை போக்குவதற்கும் அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்வதற்கும்கூட நாம் எம்மை ஒரு வல்லமையுள்ள சக்திகளாக மாறவேண்டும். கெஞ்சுவதால் அடிபணிந்து போவதால் உரிமைகளை பெறுவதென்பது அரசியலுக்கு மட்டுமல்ல சாதாரண மனித வாழ்க்கை நியதிகளுக்கே முரணானதும் ஏற்பில்லாததும். இதை சிங்களத்திடம் நாம் காலம் காலமாக கண்டு வருகிறோம். மே 18 இன் பிற்பாடும் அது தொடர்கிறது.
 
இப்போது மக்கள் வழங்கிய இந்த் தீர்ப்பு மக்கள் இணக்க அரசியலை புறந்தள்ளி எதிர்ப்பு அரசியலுக்கு தம்மை தயார் படுத்திவிட்டார்கள் என்பதையே சுட்டிநிற்கிறது. மேற்படி கூறுகளை யாரும் விளக்கம் செய்யாமலேயே மக்கள் உணாந்திருப்பதை ஆரோக்கியமான அறிகுறியாக நாம் கொள்ளலாம்.  இணக்க அரசியலா? எதிர்ப்பு அரசியலா? என்று தடுமாறிய கூட்டமைப்பினருக்கும் மக்கள் தமது தீhப்பினூடாக தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறார்கள்.
 
 
மே18. அனைத்துத் துயரமும் ஒன்றாய் குவிந்த நாள். அன்றிலிருந்துதான் பேதலித்து மரத்துப்போன வெற்று நிலைக்குள் எமது மக்கள் வந்து சேர்ந்தார்கள். யாரை எதிர்த்துப் போராடி யாரிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று விரும்பினோமோ அவர்களிடமே மண்டியிட்டு இரந்து உயிர்வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இந்த நிலை எவ்வளவு துயரமானது. இது எமது உளவியலை எப்படி ஊனமாக்கும் என்பதை  விரிவாக வேறு விளக்க வேண்டுமா? இந்த ஊனமுற்ற உளவியல் கடந்த கால போராட்டத்தின் மீதான வெறுப்பாக -  போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் மீதான வெறுப்பாக, தமது கனவு தேசம் குறித்த அருவருப்பாக, வசைபாடல்களாக, காட்டிக்கொடுப்புக்களாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக, எதுவுமே பேச முடியாத மௌனமாக என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. போதாதற்கு எமக்குள்ளிருந்தே சோரம் போன அரசியல்வாதிகளை, போராளிகளை, கலைஞர்களை,  எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களினூடாகவும் எமது மக்கள் ஒரு திசையை நோக்கித் துரத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றiயும் தாண்டி இன்று மக்கள் எடுத்திருக்கிற  முடிவு சில  வாய்ப்பாடுகளை - நியதிகளை உடைத்திருக்கிறது. தனித்தேசம், சுயாட்சி என்ற பதங்கள் அவர்கள் உளவியலில் ஒரு கூட்டு நினைவுத்திரட்டாக படிந்து போயிருப்பதையே இது சுட்டுகிறது. சிங்கள அரசுக்கு மட்டுமல்ல தாம் வாக்களித்த கூட்டமைப்பிற்கும் இதையே மக்கள் நினைவுறுத்த விரும்புகிறார்கள் என்று கொள்ளலாம். அனைத்துலக சமூகம் இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கும் தமது ஆதரவை வழங்க பின்நிற்க மாட்டார்கள் என்பதே இதன் பின்னுள்ள செய்தியென்பது முக்கியமானது.
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.