குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கை நெருக்கடி காலச் சூழலைப் போன்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - ரொபர்ட் ஓ பிளேக்.

24 .07.2011  ---இந்தியாவிற்கு சென்றிருந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலிதாவைச் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவாகரங்களுக்கான இணை அமைச்சர் ரொபர்ட் பிளேக், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஹில்லாரியும் தமிழக முதல்வரும் அக்கறையோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இலங்கையில் நிலவும் சூழலை மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையோடும் அணுக வேண்டும் என்று இருவரும் ஒப்புக் கொண்டனர்.இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இலங்கை இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுவது குறித்து இருவரும் விவாதித்தார்கள். இறுதிப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடீயோ ஆவணம்.அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளில் உள்ள மீறல்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். காணாமல் போனோர், கொல்லப்பட்டோர் தொடர்பாகவும், முகாம்களில் உள்ள மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.
 
மனித உரிமை தொடர்பான சில முன்னேற்றங்களை இலங்கை அரசு செய்ய வேண்டும். குறிப்பாக நெருக்கடி கால நிலை போன்ற சூழலை உடனடியாக இலங்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். ஊடகச் சுதந்திரம் இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிலை தொடர்பாக இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் ஆழமான கவலைகளும், அக்கறைகளும் காணப்படுகின்றது. அது போன்ற கவலைகள் எங்களுக்கும் உண்டு. அது போன்ற ஒரு ஆர்வத்தையே ஹில்லாரி கிளிண்டனும், தமிழக முதல்வர் ஜெயலிதாவும் வெளிப்படுத்தினார்கள்' என்று தனது நேர்காணலில் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.