குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

அன்பார்ந்த எமது தாய்நிலத்து உறவுகளே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களியுங்கள்!

23.07.2011.த.ஆ.2042--ஆடி 23 ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான தேர்தலாகும். அது தமிழ் தேசியத்தின் இருப்பை எடை போடும் நாளாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்பலத்தை நிர்ணயிக்கும் நாளாகும். வட - ‎ கிழக்கில் 26 உள்ளுராட்சிச் சபைகளுக்கு நடைபெறும் தேர்தலில் சில சபைகளையாவது வென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணி தனக்கு இருக்கிற அதிகார பலம், ஆட்பலம், பணபலம் ஊடக பலம், இராணு பலம் என எல்லாப் பலங்களையும் பயன்படுத்துகிறது.

குறிப்பாக ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் தனது அமைச்சர் பட்டாளத்தோடு முகாமிட்டு அபிவிருத்தி என்றபோர்வையில் வேட்டி, சேலை போன்ற பல இலவசங்களை அள்ளி வழங்கி இருக்கிறார்.

எமது உறவுகளை பல்லாயிரக் கணக்கில் கொன்றொழித்த அரக்கர்கள் அவர்களது குருதி தோய்ந்த கைகளுடன் இன்று தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.

மருத்துவ மனைகளை இலக்கு வைத்துத் தாக்கி நோயாளிகளைக் கொன்றவர்கள் இன்று தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.

சரண் அடைந்த வி.புலித் தளபதிகளையும் போராளிகளையும் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றவர்கள் தமிழ்மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருகிறார்கள்.

தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதை தாரை தப்பட்டையோடு கொழும்பில் இராணுவ அணிவகுப்பு நடத்திக் கொண்டாடியவர்கள் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.

எமது மக்களை முள்ளுவேலி முகாம்களுக்குள் ஆடுமாடுகள் போல் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது தமிழ்மக்களது வாக்குக் கேட்டுத் தெருத்தெருவாய் திரிகிறார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்களையும் இராணுவ தளங்களையும் இராணுவ குடியிருப்புக்களையும் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் நிறுவுவதில் காட்டும் வேகத்தில் நூறில் ஒரு பங்கைக் கூட எமது மக்களை மீள்குடியமர்த்துவதில் காட்டாத மகிந்த இராசபக்சே தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்.

மாவீரர்களின் துயிலும் இல்லங்களை உழுது அழித்த காட்டுமிராண்டிகள் தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள். சிங்கள இராணுவத்துக்கு ரூபா 21,500 கோடி செலவழிக்கும் மகிந்த அரசு மீள்குடியமர்வுக்கு வெறுமனே ரூபா 174 கோடியை மட்டுமே செலவழிக்கிறது. இந்த அரசின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேதான் தமிழ்மக்களிடம் தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.

போரினால் இடப்பெயருக்கு உட்பட்ட 320,000 பேர்களில் 190,000 பேர் இன்னமும் உறவினர்களது வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.30,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.

மெனிக்பாமில் 16,000 பேர்தங்கியுள்ளார்கள். எஞ்சிய 84,000 பேர் மட்டுமே சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த இலட்சணத்தில் மகிந்த இராசபக்சே தமிழ்மக்களது வாக்குக் கேட்டு வருகிறார்.

மகிந்த இராசா போர்க்குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்கே உள்ளாட்சித் தேர்தலில் எதைக் கொடுத்தும் எதைக் காட்டியும் வென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு நிற்கிறார்.

ஒரு சில சபைகளில் வென்றால் அதை வைத்து தமிழ்மக்கள் தன் பக்கம் என்று மகிந்த இராசபக்சே உலகத்தை ஏமாற்றவே இந்தத் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பட்டாளத்தோடு நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்.

சிங்கள பௌத்த வெறியரான மகிந்த இராசபக்சேயின் பரப்புரையில் தாயக மக்கள் ஏமாற மாட்டார்கள் என நம்புகிறோம்.

இந்தத் தேர்தலில் தாயக மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு தவறாது வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும்.

அதன் மூலம் சிங்கள – பௌத்த இனவாதி மகிந்த இராசபக்சேக்கு தாயக மக்கள் நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.