குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 20 ம் திகதி செவ்வாய் கிழமை .

கணினியூனூடே செம்மொழி கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்உலகளாவிய நிலையில்சுவிட்சர்லாந்து முருகவேள்

 23.07.2011-த.ஆ.2042--உலகளாவிய நிலையில் நார்வே பிரபு, சுவிட்சர்லாந்து முருகவேள், சேர்மன் சுபாசு. சிங்கப்பூர் மணியம், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் வலைப்பூ உருவாக்கியுள்ளனர். (வள்ளுவர் கோட்டத்தில் உலகத்திருக்குறள் மையத்தின் சார்பில் 28-05-2011 அன்று குறள்ஞானி மோகனராசு தலைமையில் இணையதளத்தில் நாங்கள் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை)

கல்தொன்றி மந்தொன்றாக் காலத்தே மூத்த முதல் மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்கு காலம் காலமாக அனைத்துத் தலைமுறையினரும் துறை சார்ந்தவர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.. ஒலைச்சுவடிகள், கல்வெட்டுகள், அச்சாக்கம் என பல்வேறு நிலைகளில் பல் நூற்றாண்டுகளாக வழங்கிய மொழி தற்போது இணையதளங்களில் வலைப் பூக்களாக வலம் வருகின்றன.

தற்பொது வெளிவரும் தின இதழ்கள். நமது சங்க இலக்கியங்கள் வாழும் சிந்தனைகள் அனைத்தும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இணைய தளம் மூலம் கண்டு உலகத் தமிழர்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சியால் வந்த பயனை இந்திய மொழிகளில் தமிழ் மொழி இணையதளங்களில் பயன்பாட்டு மொழியாக முதல் இடத்தில் உள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அவர்தம் சிந்தனைகள் வலைப்பூக்களை உருவாக்கி இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூக்களின் வரும் சிந்தனைகளைக் கண்டு அவரவர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்கின்றனர்.
நாம் எழுதி அதைப் பதிப்பித்து பிறரை அடைந்து பின் அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் வலைப்பூக்களின் கண்டவுடன் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் கண்டால் நமக்கு இணையதளத்தின் பயன்பாடு புரியும்.

இணையதள பயன்பாட்டை அறிஞர்பெருமக்கள் வழக்கத்தில் கொள்ளவேண்டும். பொருளாதார மேம்பாடு உடையோர் ஒரு கணினியைப் பொருத்தி நம்மிடம் இருக்கும் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டே இணையதள வசதியை ஏற்படுத்தி நம் இடத்திலேயே பயன்படுத்தலாம். இயலவில்லையாயின் இணையதள சேவைகள் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளன. அங்கு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் நாடு இணய பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்றோமனால் இணையதளத்தில் தமிழின் வளர்ச்சியை அறியலாம். உலகத் தமிழர்கள் தமிழைப் பயில இணைய பல்கலைக் கழகம் பெருந்தொண்டாற்றி வருகிறது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் இவ் இணைய தளத்தில் காணலாம். தமிழ் அகராதி முழுமையும் இணையதளத்தில் கண்டு தெளிவு பெறலாம். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இணைய பல்கலைக் கழகத்தின் வழி பயின்று தேர்வுஎழுதி பட்டம் பெறுகின்றனர்.

உலகில் வாழும் கணினி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து உத்தமம் என்ற அமைப்பை நிறுவி 10 மாநாடுகள் பல்வேறுநாடுகளில் நடத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு செம்மொழி மாநாட்டோடு இணைந்து கணீனி மாநாடும் நடத்தினர். உலகம் முழுதும் அறிஞர் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். இவ்வாண்டு உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணையா மாநாட்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமுள்ள பெருமக்கள் தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம

உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும் இசைந்துள்ளார். உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுகிறார்.

மலேசியா : இளந்தமிழ், துணைத்தலைவர், உத்தமம் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் , இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இந்தியா : ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

இலங்கை : மயூரன், செயற்குழு உறுப்பினர் உத்தமம் :

ஐரோப்பா : சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர் உத்தமம் :

ஆசுதிரேலியா : முகுந்த், செயற்குழு உறுப்பினர், உத்தமம் :

சிங்கை : மணியம், செயலர்- இயக்குநர் உத்தமம்,

அமெரிக்கா: கவிஅரசன் வா.மு.சே. தலைவர் உத்தமம்,

கணினி அறிஞர்களின் கருத்துரைகளை அறிந்து தமிழக அரசு ஒருங்குறி தமிழ் எழுத்துகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஒருங்குறி முறையைக் கொண்டு வந்ததனால் உலகமெங்கும் ஒருங்குறி அச்சுருக்களை காண வழி பிறந்தது. ஒருங்குறி முறை இல்லையெனில் அவரவர்கள் வெவ்வேறு அச்சுருக்களை பயன்படுத்தும் போது அவரவர்கள் பயன்படுத்திய அச்சுருவை கணினிக்கு இறக்கம் செய்தே காண வேண்டும். தமிழக அரசின் ஒருங்குறி அச்சுருக்களே உலகின் எங்கும் காணக் கூடிய நிலையில் உள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ் ஒருங்குறி எழுத்துக்களை http://www.infitt.org என்ற இணயதளத்திலிருந்து கணினியில் இறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழக அரசு மாநடுகளின்போது அச்சுருக்கான குறுவட்டுகளையும் மக்களுக்கு வழங்கியது.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை உலகமெங்கும் காண்பது போல் நம் தமிழையும் காணமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மின் அஞ்சல் அனுப்பும்போது ஒருங்குறியைப் பயன்படுத்தி தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர்.

வலைப்பூக்கள் பல்வேறு பெருமக்கள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் மறைமலை தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களுக்கு வலைப்பூ உருவாக்கி அவரது கவிதைகளை வழங்கியுள்ளார். வாழும் மரபுக் கவிஞர்கள் 35 கவிஞர்கட்கு அவரவர் பெயர்களில் வலைப்பூ உர்வாக்கி அவர்களது வாழ்க்கைக் குறிப்பு கவிதைகளை பதிவு செய்துள்ளார்.

ABDUL RAHMAN
amuthabarathy
ARATTAI
ARIVUMATHI
E.S.MUTHUSWAMI
Erode Tamilanban
Ilangkannan
K.C.S.ARUNACHALAM
Maa.Sengkuttuvan
manimaran
manivendhan
Naaraa Nachiyappan
PICHINIKKAADU ILANGO
Poet Amallathasan
Poet Kalaimathiyan
POET SIRPI
Poet Minnoor Seenivasan
POET PONNADIYAN
Poet Va.Mu.Sethuraman
POET VEZHAVENDHAN

உலகளாவிய நிலையில் நார்வே பிரபு, சுவிட்சர்லாந்து முருகவேள், செர்மணி சுபா, சிங்கப்பூர் மணியம், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் வலைப்பூ உருவாக்கியுள்ளனர்.
வருகை தந்துள்ள ஆன்றோர் பெருமக்களே அச்சில் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ள நீங்கள் இணையத்திலும் தங்களின் பங்களிப்பை வழங்கி உலகத்தமிழர்களோடு பயணிக்க வேண்டுகிறேன்

செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை எதிர்ப்போம்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் உரை------------------------

(சென்னையில் 25-2-11 அன்று செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை நீக்க ஆர்ப்பாட்டம் தமிழ் பண்பாட்டுச் சங்கம் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை நீக் ஓர் ஆர்ப்பாட்டம் தமிழ் பண்பாட்டுச் சங்கம் தமிழ் மீட்பு படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இப் போராடத்தை முன்னின்று நடத்தும் பாக்கம் தமிழனையும் அவரைச் சார்ந்த பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

இங்கு அமர்ந்திருக்கும் தமிழியக்கப் போராளி புலவர் கி.த. பச்சையப்பனார் தமிழ் காக்கும் தொண்டராகவே இன்றும் களப் பணியாற்றுகிறார். எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் 1993 ஆம் ஆண்டு உலக அமைப்பாளர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் அறிஞர்பெருமக்கள் குமரி முதல் சென்னை வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு 1330கி.மி நடந்து வந்தோம். கட்சி மதம் சாதியை மறந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி மூத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு கோட்டைக்குச் சென்றபோது காணவே மறுத்தார் அன்றைய முதல்வர் செயலலிதா அம்மையார். அது போது தம்முடைய தமிழாசிரியப் பெருமக்களையெல்லாம் ஒருங்கிணைத்து நடைப்பயணம் வெற்றிபெற ஒத்துழைத்த பெருமகன் கி.த.ப.

பேரறிஞர் பாவாணர் வழி தமிழகத்தில் மிகப் பெரும் தனித்தமிழ்ப் புரட்சியே நடத்தியுள்ளனர். முறம்பில் புலவர் நெடுஞ்சேரலாதன் பாவாணர் கோட்டம் அமைத்து பாவாணர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வழியில் அறிஞர் இறைக்குருவனாரின் தென்மொழி, கவிச்செம்மல் அருகோவின் எழுகதிர் புதுவை தெளிதமிழ் நமது தமிழ்ப்பணி மற்றும் பல இதழ்கள் தனித்தமிழ் இதழ்களாகவே வெளிவநது உலகை வலம் வருகின்றன.

நமது உணர்வுகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி, செம்மொழிக்கென மேம்பாட்டு வாரியம் அமைத்து கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி நமது பெருமையை உலகறியச் செய்து நிலைக்க வைத்துள்ளார். தமிழாகவே வாழும் கலைஞரின் காலத்தில் நமது கோரிக்ககைகளெல்லாம் வழி வகை காணப்படும்.

தமிழ் கல்வெட்டு ஒலைச்சுவடி அச்சு என பல் நிலையைத் தொடர்ந்து கணினியிலும் உலகளாவிய நிலையில் வலம் வருகிறது. தமிழக அரசின் ஒருங்குறி தமிழ் பதிவர்களிடையே மிகப் பெரும் புரட்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழக அரசும் உத்தமம் அமைப்பும் இணைந்து இணைய மாநாட்டை உலகளாவிய அறிஞர் பெருமக்களைக் கூட்டித் கணினித் தமிழில் மிகப் பெரும் ஏற்றத்தை வழங்கியது.

ஒப்புயர்வுள்ள இக் கால கட்டத்தில்தான் ஆண்டாண்டு காலமாக நம்மையும் நம் மொழியையும் அடிமைப் படுத்திய கூட்டம் தமிழ் ஒருங்குறியில் ஏற்கெனவே உள்ள 5 எழுத்துக்களோடு மேலும் 26 கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கச் சதி செய்கின்றனர்.
பன்னெடுங்காலம் போராடி தமிழிலேயெ அனைத்தும் நடைமுறையில் உள்ள இந்த கால கட்டத்தில் கிரந்த தினிப்புக்கு முயற்சி செய்யும் நய வஞ்சகர்களை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழுக்கென்று நம் முன்னோர் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு வகையே போதுமானது. கிரந்தத்தை திணித்து மீண்டும் மணிப்பிரவாள நடையைத் தடுக்க நம்மைப் போன்ற தமிழ் அமைப்பின் பொறுப்பாகும். தற்போது ஆங்கிலம் கலந்த தமிங்கிலத்திடமிருந்து நம்மொழியைக் காப்பதும் நமது தலையாய கடமையாகும்.

”வட சொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகுமமே” என்பது தொல்காப்பியம் எந்த சொற்களையும் தமிழ் மரபுக்குத்தகுந்த வடிவமைக்கக முடியும். தமிழ் எழுத்துக்கள் சொற்களின் பொருளுக்கு தக ஒலிக்கும் ஒலிப்பான தன்மையுடையன.
செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்கள் கூடாது கூடாது என உங்களோடு இணைந்து முழங்கி பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எம்முடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திரளாக பங்கேற்றுள்ள அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.