குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எசு.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

22.07.2011-கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற..தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எசு.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார். கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற,  நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகுமாறும் அதற்காக லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதாகவும் அச்சுறுத்திள்ளார் எனவும் சிறீதரன் கூறியுள்ளார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடக்கிறது. பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உதய சூரியன் சின்னத்திலும் கரைச்சி பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.
 
இதில் கரைச்சி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான மாரியப்பன், சுகந்தன், பொன்னையா இராமலிங்கம், இராமசாமி வடிவேல், சின்னையா சுப்பையா போன்றோரே பல வந்தமாக நாமலிடம் அழைத்துச்செல்லப்பட்டார்கள் என முறையிடப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் வேட்பாளர்கள் தமக்கு நடந்தவற்றை விளக்கினார்கள்.'திடீரென என்னிடம் வந்த நான்கைந்து பேர் என்னைப் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் போனார்கள். அங்கு சென்றதும் இவர்கள் என்னைக் கடத்தி வந்திருக்கிறார்கள் என நாமலிடம் முறையிட்டேன். அவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள் என நாமால் கூறினார் என வேட்பாளர் சுப்பையா தெரிவித்தார்.
 
கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்குத் தனக்கு 5 லட்சம் ரூபா தருவதற்கு தயார் என நாமல் கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.அரசுடன் சேர்ந்து கொண்டால் இன்னும் அதிக பணம் தருவதாக நாமல் வாக்குறுதியளித்ததாகவும் சுப்பையா குறிப்பிட்டார்.
 
வேட்பாளர்களை நாமலுடன் வைத்து ஒளிப் படங்கள் எடுதுள்ளார்கள். அவற்றை ஆதாரமாகக் காட்டி கூட்டமைப்பு வேட்பாளர்கள் அரசுடன் சேர விருப்பம் என்பது போன்ற பொய்ப் பிரசாரங்களில் அரச ஊடகங்கள் மூலம் ஈடுபடப்போகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.