குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபைக்கு வெற்றிவாய்ப்பு கூட்டணிக் கூட்டமைப்பிற்கே பலமாக உள்ளது.

22.07.2011.-மேற்கண்டவாறும்  பின்வருமாறும் பிரபல்யமான இணையம் ஒன்று  கருத்து வெளியிட்டுள்ளது. நேர்மையான தேர்தலோன்று நடைபெற்றால் மக்கள் சொல்ல வருவது உலகுக்கு தெரியும். சாவகச்சேரி நகரசபை மற்றும் சாவகச்சேரி பிரதேசசபைகளுக்கு தேர்தல் நடக்கின்றது. முன்னதாக 1998 இல் நடைபெற்ற தேர்தலில் நகரசபையை புளொட் கைப்பற்றியிருந்தது. சாவகச்சேரி பிரதேச சபை ஈ.பி.டி.பி. வசம் போட்டியின்றி சென்றிருந்தது. புளொட் இம்முறை கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. கூட்டமைப்பும் பலமாகவே உள்ளது. மாணவன் கபில்நாத் படுகொலை தொடர்பான கறுப்புப்பக்கங்கள் உண்டு. மறுபுறத்தே முகமாலையின் பின்புறமான எழுதுமட்டுவாழ், மிருசுவில் பகுதிகளிலும் தனங்களப்பு.கோயிலாக்கண்டி.மறவன்புலோ மீள்குடியமர்வு அரசதரப்பின் சாதனையாக கொல்லப்படுகின்றது.

கிளிநொச்சி

கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான தேர்தல. வேட்பு மனு தாக்கல்செய்யப்பட்டவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் பங்காளிக்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் கூட்டமைப்பு போட்டியிடவேண்டியேற்பட்டுள்ளது. கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச சபைகள் வெற்றிவாய்ப்பு கூட்டமைப்பு பலமாக உள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபை வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது. ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சொந்த இடமென்ற வகையிலும், கிளிநொச்சியிலேயே அவர் தங்கி நின்று பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதனாலும் இழுபறிநிலையே காணப்படுகின்றது. பெரும்பாலான குடும்பங்கள் அண்மைகாலங்களிலேயே மீளக்குடியமர்ந்துள்ளன. எனினும் குடியமர்த்தப்படவேண்டி பல கிராமங்கள் காத்திருக்கின்றன.

தீவகம்

தீவகப் பகுதி தொடர்ந்தும் ஈ.பி.டி.பிக்கான வெற்றிவாய்ப்பை தருவதாகவே அமைந்திருக்கிறது. வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் பிரதேச சபைகளுக்காக தேர்தல் நடைபெறுகின்றது. கூட்டமைப்பினர் பிரச்சார நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத சூழலே நிலவியது. ஏற்கனவே கூட்டணியினர் நாரந்தனையில் தாக்கப்பட்ட சட்பவம் ஆதரவாளர்களை கூட அங்கு செல்ல அச்சம் கொள்ள வைத்துள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக்கட்சிக்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிரச்சார நடவடிக்கைகளை பரவலாக மேற்கொண்டுவருகின்றர். அவருடையதும், அவரது கணவரும் அமைச்சருமான மகேஸ்வரனதும் சொந்த இடமென்ற வகையிலும், காரைநகர் பிரதேச சபையில் வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாகவுள்ளது. நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்துறை ஈ.பி.டி.பி பங்காளிக்கட்சியாக உள்ள ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணிக்கு வாய்ப்பாக உள்ளது. வேலணை பிரதேசசபையின் வெற்றிவாய்ப்பு சரிபாதியாக உள்ளது. இடம்பெயர்ந்த நிலையில் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தீவக மக்களின் வாக்குகள் கூட்டமைப்பிற்கு கிட்டலாம். இறுதி நேரங்களில் இடம்பெறும் தடாலடிப்பிரச்சாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

வலிகாமம்

ஐந்து பிரதேச சபைகளைக் கொண்டதாக வலிகாமம் பிரதேசமே உள்ளது. காங்கேசன்துறை தொகுதியை உள்ளடக்கிய வலி. வடக்கு, கோப்பாயை உள்ளடக்கிய வலி. கிழக்கு, வலி.மேற்கு வலி. தெற்கு மற்றும் வலி.தென்மேற்கு என பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறுகின்றன. வலி.வடக்கு, வலி.தெற்கு, வலி.தென்மேற்கு என்பவை  நிச்சயமாக வெற்றிகொள்ளக் கூடியவை என கூட்டமைப்பு நம்புகின்றது. ஓய்வு பெற்ற கிராமசேவையாளர்களென கனமான வேட்பாளர் பட்டியல் கூட்டமைப்பிடமுண்டு.

வலி.கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் விருப்பிற்குரியது. கூடிய அளவு வேட்பாளர்களும் அவர் கட்சி சார்ந்தே போட்டிக்களத்திலுள்ளனர். கடுமையான பிரச்சாரம் மூலம் வென்று விட முடியுமென்ற நம்பிக்கை அவர்களிடமுண்டு.

நல்லூர்

நல்லூர் பிரதேச சபை தொடர்பில் கூட்டமைப்புக்கு அதிகமாகவே நம்பிக்கையுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலிலும்,  கூட்டமைப்புகூடிய ஆர்வத்தை; அங்கேயே செலுத்தியிருந்தது.

 

எது எவ்வாறு இருப்பினும் அரச இயந்திரம் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி முழுவீச்சில் பிரதேசத்தில் களம்இறங்கியிருந்தது. ஆளும் தரப்பின் அடாவடி மற்றம் இராணுவ பின்னணி எதிர்தரப்புகளை முடக்கியமை மக்களிடையே அரசு மீது வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கறது. இவற்றுக்கிடையில் தமிழ்தேசியம கோஷங்களை மட்டுமே முன்னிறுத்தி கூட்டமைப்பு களம் இறங்கியுள்ளது.  யுத்த காலங்களிலுமாயினும் சரி, சமாதான காலங்களிலும் சரி மக்களுடனேயே வாழ்ந்த வேட்பாளர்களே கூட்டமைப்பின் பலமாக உள்ளனர்.நேர்மையான தேர்தலோன்று நடைபெற்றால் மக்கள் சொல்ல வருவது உலகுக்கு தெரியும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.