குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாரகைகளைவைத்து சதிராடும் அரசகூட்டத்தை வாக்குகளால் அடித்துவிரட்டுங்கள். சூடுசுறணை இல்லாதவர்கள் என்ற

 22.07.2011.த.ஆ.2042--யாழ்ப்பாணத்தில் தாரகைகளைவைத்து  சதிராடும்  அரச கூட்டத்தை   யாழ்மக்கள் வாக்குகளால் அடித்து விரட்டுங்கள்.  யாழ்மக்கள் சூடுசுறணை  இல்லாதவர்கள் என்ற எண்ணத்தில் அரசு. வாக்களிக்கும்  உரிமை மக்களுடையது. அதேபோன்று யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையும் தமிழ் மக்களுக்குரியது.  ஆனால் வாக்குகேட்கும் சுகந்திரத்தை வைத்துக்கொண்டே எமது தலையில் நின்று  அதமக்கூத்தாடுவதை  எப்படி ஏற்றுக்கொள்வது.

 துன்பப்படும் மக்கள்பற்றி யாழ்மக்கள் சிந்திக்கவில்லை என்று அரச தரப்பு  முடிவெடுக்குமளவுக்கு  யாழ்மக்கள் சென்றுவிட்டார்கள் என்றே பொருள் கொள்ளவேண்டியிருக்கு.

 கிளிநொச்சி முல்லைத்தீவில் ஏன்போர்நடந்த இடமெங்கும் தமிழர்கள் தரப்பாள்களின் கீழ் தகரங்களின் கீழ் வாழ்கின்றார்கள்  தமிழர்களுக்கு உலகு கொடுத்த பணத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் பணத்தில் யாழ்ப்பாணத்தில் களியாட்டங்கள் பாட்டுக்கூட்டங்கள் கன்யரின் ஆட்டங்கள் போட்டு அரசு  ஆழ்காட்டுகின்றது. 

 இதைக்கண்டு யாழ்மக்கள் கொதித்தெழுந்து அரசுக்கு எதிராக வாக்குப்போடவேண்டாமா? 

 அந்த அந்த ஊரை அவன் அவன் நிர்வகிக்கவே உள்ஊர்ராட்சிசபை பிறகு ஏன் எங்கையோ  இருக்கின்ற  சனாதிபதி மந்திரிகள் எல்லாம் வந்து யாழ்மக்களிடம் தவம்கிடக்கினம் ஒன்றும் புரியல்லை. 

 யாழ்ப்பாணத்தில வெண்டுகாட்டிறன் பிரபாகரனையே வென்ற எனக்கு இது பெரியவிடயமா?  என்றநினைப்பில எல்லாம் நடக்கின்றது.

 தவறாகவென்றாலும் வென்றாகவேண்டும் என்று கண்மூடித்தன பயங்கரவாதத்தனமாக அரசு நடக்கின்றது.

 இதை தமிழ்மக்கள் ஏழுச்சிபெற்று  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செயற்பட்டே கையாளவேண்டும். இந்தஅரசு சிங்களக்கட்சிகளையே தேர்தல்காலத்தில் எப்படிநடத்தியது என்பதைஉலகு உணராது இருப்பது  முள்ளிவாய்க்கலில் படுகொலைகள் நடந்தபோது கண்ணை இறுகமூடியிருந்து விட்டு இப்போ நாடகமாடுகின்ற மாதிரியான நிலைதான்.

 உண்மையில் மகிந்தகாலத்தில் அய்.நா. போன்ற சர்வதே கண்காணிப்பு இல்லாமல் இனியொரு தேர்தலும் தேர்தலாக நடக்காது.

 மகிந்த எண்ணப்படியே எல்லாம் நடக்கும் இதற்கு நடவடிக்கை இல்லாது மதில்மேல் புனையாய்  உலகத் தமிழர்பேரவையும் நாடுகடந்த தமிழழுீழ அரசும் என்னசெய்கிறார்கள்.   அவர்களை உசுப்பவேண்டியவர்களும் என்ன செய்கிறார்கள் உடனே உசார்வேண்டும் இல்லையேல் மகிந்த முத்திப்பெருகி விடுவார். எவரும் ஒன்றும்செய்யமுடியாது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.