குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

யாழ்ப்பாண தேர்தலை ஒத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

21 .07. 2011  யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை இல்லையாழ்ப்பாண தேர்தலை ஒத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை -  நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ள யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில்  இடம்பெறுமென்ற நம்பிக்கை தமக்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி யும் அறிவித்திருக்கின்றன.
இன்றையதினம் யாழ் செயலகத்தில் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியான உதவித் தேர்தல் ஆணையாளர் முகமட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  அவ்வேளையிலேயே ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்புகளில் வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி ,அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து அரச இயந்திரங்களாலும் தேர்தல் மோசடிகள் இடம்பெறுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். தேர்தல் தொடர்பாக எம்மால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லையெனவும் அவர்கள்; தெரிவித்தனர். குறிப்பாக சுவராட்டிகள், பனர்கள், கட்அவுட்டுகள் கூட இன்றுவரை அகற்றப்படவில்லை. இவை எப்போது அகற்றப்படும் என்ற உறுதிமொழிகளை வழங்கக் கூட தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூற முடியாமல் போய்விட்டது.
 
தேர்தல் பணிகளில்  தெற்கில் இருந்து வருகை தருகின்ற முந்நூறிற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அவ்வாறானவர்களுள் அண்மையில் அரச நியமனம் பெற்ற நிர்வாகசேவையைச் சேர்ந்த 130 சிங்களவர்களும் உள்ளடங்குவதாக அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இதனை முற்று முழுதாக நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்தவர்கள் தேர்தல் வாக்கெண்ணும் பணியில் ஈடுபட தாங்கள் அனுமதிக்க முடியாது எனவும் அவர்களில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதிலும் தேர்தல் ஆணையாளர் நிர்வாகசேவை அதிகாரிகளான அவர்கள் வாக்கெண்ணும் பணியில் ஈடுபட வேண்டும் என வாதிட்டார். நீண்ட இழுபறிகளின் பின்னர் தேர்தல் ஆணையாளர் அவர்கள் அந்த பணிகளில் பார்வையாளர்களாக இருப்பார்களே மட்டுமன்றி பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என உறுதி மொழி வழங்கப்பட்டதையடுத்து முடிவு எட்டப்பட்டிருந்தது.
 
தீவகப் பகுதிகளில் குறிப்பாக நெடுந்தீவுப் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டிகள் ஹெலிகொப்ரர் மூலம் எடுத்துவரப்படும் எனக் கூறப்பட்டபோதும் அதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதே போல் கடல்வழித் தொடர்புடைய தீவுப் பகுதிகளில் கடற்படைப் படகுகளில் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படும் என்றும் அவ்வேளையில் எவ்வாறு துஸ்பிரயோகங்கள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த முடியும்; எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பவ்ரல், தேர்தல் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் கடற்படைப் படகுகளிலேயோ ஹெலிகளிலேயோ பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோசமும் எழுப்பப்பட்டிருந்தது.
 
இதனிடையே ஈ.பி.டி.பி. யினரால் வெளியிடப்படுகின்ற மாலைமுரசு எனப்படுகின்ற புதிய அநாமதேயப் பத்திரிகை சர்ச்சைக்குரிய விடயங்களை கடந்த 2 தினங்களாக வெளியிடப்படுகின்றமை தொடர்பாக அங்கு அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த மாலை முரசு எங்கு, யாரால் அச்சிடப்படுகின்றது என்ற தகவல்கள் அற்று வெளிவருவதாகவும் அது கூட்டமைப்பினரிடையே பிளவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அது மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கும் வகையில் வெளிவருவதாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ் சாட்டினர்.
 
இதனிடையே ஈ.பி.டி.பி.யின் நாளிதழான தினமுரசு பத்திரிகையிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி இன்றையதினம் கூட கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததையும் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்ததையும் அவர்கள் அம்பலப்படுத்தினர். இது தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. கூட்டமைப்பினர் கணிசமான முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தபோதும் அரச அதிகாரிகளான அவர்களால் தங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது எனவும் தங்களின் உண்மை யதார்த்தத்தைப் புரிநிதுகொள்ளும்படியும் தாங்கள் வெறுமனே அரச அதிகாரிகள் மட்டும் எனவும் இறுதி நிலையில் தேர்தல் அதிகாரிகள் சரணடையும் நிலையே ஏற்பட்பட்டிருந்தது. ஆனாலும் நீதியான தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கு அனைத்து தரப்பும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமென அரச அதிபர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
இன்று மாலைக்குள் சுவரொட்டிகள் அகற்றப்படாவிட்டால் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் - தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 12:56.08 PM GMT ]
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ் மாவட்டம் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பனர்கள் மற்றும் பதாதைகள் இன்று மாலை 4 மணிக்குள் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படாவிட்டால் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையே இன்று யாழ் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யாழ். மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரிடம் தமது காத்திரமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குடாநாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அரச தரப்பின் சுவரொட்டிகள் பனர்கள் மற்றும் பதாதைகள் போன்றன வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளின் படி இவைகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் காவற்றுறையினர் இவற்றை அகற்றாமல் தவிர்த்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் சுவரொட்டிகள் மட்டும் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அகற்றப்படாமல் தேர்தல் நடத்தப்படுவது தேர்தல் விதிகளை அப்பட்டமாக மீறப்படும் நடவடிக்கையாகும். இது ஒரு மோசமான ஒரு தேர்தல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனையடுத்து தேர்தல் ஆணையாளைரை தொடர்பு கொண்ட வேளையிலேயே தேர்தல் ஆணையாளர், சுவரொட்டிகள் மற்றும் பனர்கள் பதாதைகள் என்பன இன்று மாலை 4 மணிக்குள் அகற்றப்பட வேண்டுமென உத்தியோகபூர்வ எழுத்து மூல கடிதத்தை காவற்றுறை உத்தியோகத்தர்களுக்கு சமர்ப்பிக்குமாறு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவைகள் அகற்றப்படாவிட்டால் தேர்தல் மறு தேதி அறிவிக்கப்படாது ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்குமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாண தேர்தலை ஒத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

யாழ்ப்பாண தேர்தலை ஒத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலம் முடிவடைந்துள்ள போதிலும் யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் தொடர்பில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கும் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஆளும் கட்சி சுவரொட்டிகள் சட்டவிரோதமான முறையில் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் போது உடனடியாக அராசங்க அதிபர் இமெல்டா சுகுமார், தேர்தல் ஆணையாளருக்கு இது குறித்து அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள ஆளும் கட்சி சுவரொட்டிகள் இன்றைய தினத்திற்குள் அகற்றப்படும் எனவும் அவ்வாறு அகற்றப்படாவிட்டால் தேர்தல்களை ஒத்திவைக்க நேரிடும் எனவும் தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இரவு எட்டு மணி வரையில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை என யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

fpலாரி தமிழ்நாடு பயணம்- இந்திய அரசிடம் விளக்கம் கேட்கவேண்டும் என்கிறார் விமல் வீரவன்ச!

அமெரிக்க ராயாங்கச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் தமிழ் நாட்டுக்கு சென்று முதலமைச்சர் யெலலிதாவை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசியமை குறித்து இந்திய மத்திய அரசிடம் இலங்கை வெளியுறவு அமைச்சு விளக்கம் கோரவேண்டுமென சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவாரான விமல் வீரவன்ச, இன்று காலை அரச இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மாநில அரசு ஒன்றுக்கு அயல் நாட்டின் விவகாரங்கள் குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் பேச அதிகாரம் இல்லையென அவர் கூறியுள்ளார். புதுடெல்லியில் ஹிலறி கிளின்ரன் இலங்கைத் தமிழர் தொடர்பாக எதுவும் பேசாத நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மாத்திரம் அது குறித்துக் கலந்துரையாடியதன் நோக்கம் என்னவென்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்;;;.
இந்திய சமஷ்டி முறைபோன்ற ஒரு தீர்வை இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டுமென ஹிலறி கிளின்ரன் டெல்லியில் கூறாமல் தமிழ் நாட்டில் வைத்து ஏன் கூறினாரென கேள்வி எழுப்பிய விமல் வீரவன்ச, மாநில அரசு ஒன்றுக்கு அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை இந்திய மத்திய அரசு வழங்கியுள்ளதா என சந்தேகம் வெளியிட்டார்.
ஹிலறி கிளின்ரனின் தமிழ் நாட்டு பயணமும், அவர் சென்னையில் நிகழ்த்திய உரையும் இலங்கையின் இறைமைக்கு பெரும் சவாலெனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார். சிறிலங்காவில் மீள்நல்லிணக்கத்தை அரசியல் ரீதியாக ஏற்படுத்துவதற்கான முன்மாதிரியாக இந்தியாவைக் கொள்ளலாம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது..

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.