குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழக பாடகர்கள் ராசபக்சவின் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்-

20 .07. 2011 -- கிளிநொச்சி தேர்தல் பிரச்சாரம் தோல்வியில் முடிந்தது இலங்கையில் நடைபெறப்போகும் உள்ளூராட்சி தேர்தலில் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் ராசபக்ச கலந்து கொள்ளவிருந்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தை மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட இலங்கை அரசு தமிழகத்திலிருந்து பாடகர் மனோ, கிரிச், சுசித்ரா ஆகியோரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்.
 
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று அவர்களும் இன்று கொழும்பு சென்றனர். ஆனால் தமிழக இசைக்கலைஞர்கள் ராயபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என சீமான், நெடுமாறன் போன்றோர் மனோ, கிரிச், சுசித்ரா  ஆகியோருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் பாடகர் மனோவிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்த மூவரும் நிகழ்ச்சியை ரத்து செய்து தமிழகம் திரும்புகிறார்கள். இது தொடர்பாக தொலைபேசி வழியே பாடகர் மனோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ''கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம்(விளையாட்டுத்திடல்) திறப்பு விழா என்றே தங்களை அழைத்தார்கள். அங்கு சென்ற பின்தான் தெரிந்தது இந்த ஸ்டேடியம் திறப்பு விழாவில் ராசபக்சவும் கலந்து கொள்கிறார். மேலும் இந்த விழாவையே அங்கு நடைபெறக்கூடிய தேர்தல் பிரச்சாரமாகவும் செய்கிறார்கள் என்பதே அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது.
 
தமிழ் ஆர்வலர்களும் பெரியவர்களும் கேட்டுக் கொண்டதாலும் நான் நிகழ்சியை ரத்து செய்து விட்டு தமிழகம் திரும்புகிறேன். எமது மக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் விரும்பவில்லை' என்று கூறினார் பாடகர் மனோ.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.