குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

பேச்சுவார்த்தை பொய்யென்பவர் அதுபற்றிப்பேசுகிறார் தண்டிக்கப் போகிறார்கள் தமிழர்களை மட்டும்.

20 .07.2011 சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை பொய்யென்பவர்  அதுபற்றிப்பேசுகிறார் தண்டிக்கப் போகிறார்கள் தமிழர்களை மட்டும். சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஜோஸ் லுயிஸ் டயஸிற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணேவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மனித உரிமை விவகாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாக பாலித கொஹணே தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்நிற்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த 110 படை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மீள அழைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகளின் பின்னர் மீள அழைக்கப்பட்டவர்களில் பலர் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏனைய நாடுகளைப் போன்றே சட்டத்தின் அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
செனல்4 ஊடகம் மற்றும் தாருஸ்மன் அறிக்கை ஆகியன போலியானவை எனவும் எந்த விதமான அடிப்படையுமின்றி போலித் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவினால் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக் குழு போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு துணை போவதன் மூலம் அவற்றின் நன்மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சரியான ஆதாரங்கள் இன்றி இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதியின் கருத்துக்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.