குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் பலமாகத் தாக்கப்பட்டநிலையில் வைத்தியசாலையில்

 19 .07. 2011 -யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது :யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடாத்தத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது இரண்டு குழுக்கள் கண்காணிப்பு பணிகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பல எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்ததாக மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
 
தேர்தல்களை பிரச்சார நோக்கில் அரசாங்கம் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை அனுப்பி வைக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடம், பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

19 .07. 2011  கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசம் மணியங்குள விநாயகர் குடியிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை ஈ.பி.டி.பி. கட்சியினரே தாக்கினர் என காவற்துறை மற்றும் கபே அமைப்பு என்பவற்றிடம் முறையிடப்பட்டுள்ளது.

செல்லத்துரை தயாகரன் என்பவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தாக்குதலுக்குள்ளானார். சம்பவ தினத்தன்று இவர் தனது 12 வயதான மகனுடன் உறவினர் வீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் இவரது மகனையும் முள் வேலிக்குள் தூக்கிஎறிந்ததால் அவரும் காயமடைந்துள்ளார்.
 
ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த சுரேஸ் என்பவரும் அவரது சாக்களும் தம்மை இடைமறித்து முகத்தில் தாக்கினர் எனவும் இதனால் கீழே விழுந்த தம்மை அவர்கள் கால்களால் பலமாகத் மிதித்தனர் எனவும் தயாகரன் தெரிவித்தார்.
 
 
அக்கராயன் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்ட தயாகரன் அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அங்கு தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகிறார்.தயாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளரான நடராசா டெனிஸ் ராசாவை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சுரேஸ் ஈ.பி.டி.பிக்கு ஆதரவானவர்.
 
 
சில நாள்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வந்து சுரேஷ், தன்னைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என மிரட்டினார் என்றும் மீறிப் பிரசாரம் செய்தால் நடப்பது வேறு என்று பய முறுத்தினார் எனவும் தயாகரனும் வேட்பாளருமான டெனிஸ்ராசாவும் கூறியுள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.