குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

உலக்கையால் கணவனை அடித்த மனைவி: தம்பலகாமம் பகுதியில் சம்பவம்

  திருகோணமலை தம்பலகாமம் கா.து பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவி தன் கணவனுக்கு உலக்கையால் அடித்து காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்  தலையில் பலத்த காயங்களுக்குள்ளான கணவன் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர விபத்துச் சேவைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றித் தெரியவருவது, தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் 52 வயதான யோவான் பால்ராச்.

இவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெறுவது வழக்கம். அதேபோல் இன்று பிற்பகல் திங்கள்கிழமை கணவன்-மனைவிக்குமிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராற்றில் ஆத்திரமுற்ற மனைவி உலக்கையால் தனது கணவரை தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பால்ராச் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இவரின் தலையின் உள் பகுதியில் இரத்தக்கண்டல் ஏற்பட்டுள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் விபத்து சேவைக்குப் பொறுப்பான வைத்தியரொருவர் தெரிவித்தார்.
 
மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.