குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .

28.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஆம்ஆத்மி பிளவு:காங்., கண்டனம்

புதுடில்லி : ஆம்ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கண்டிக்கதக்கது. இதே நிலை தொடர்ந்தால் அதனால் பாதிக்கப்பட போவது டில்லி மக்கள் தான். அதன் பிறகு மக்கள் அவர்களின் முடிவை காட்ட வேண்டி இருக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக்குகள்:அமைச்சர் திடுக் தகவல்

புதுடில்லி : உயிரிழக்கும் ஒவ்வொரு மாட்டின் உடலிலும் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி: விஞ்ஞானி விளக்கம்
பெங்களூரு : புவிசார் வழிகாட்டி தொழில்நுட்பத்திற்காக பி.எஸ்.எல்.வி சி 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கை கோள் தாங்கி செல்ல உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.19 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட் குறித்து தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானி தேவ்கன், இந்த ராக்கெட்டால் இந்தியாவிற்கென சொந்தமான ஜி.பி.எஸ்., வசதி பெற முடியும். என தெரிவித்துள்ளார்.
இந்திய ரசிகர்களுக்கு மெக்கலம் அழைப்பு
மெல்போர்ன் : நாளை நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக்கல்லம், நாளைய போட்டியில் நியூசி.,தான் வெற்றி பெற வேண்டும் என பெரும்பாலான நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் கருதுகிறார்கள். இது வரை நடைபெற்ற போட்டிகளில் அளித்தது போன்று நாளைய போட்டியிலும் ஆஸ்திரேலியா முழுவதிலும் உள்ள இந்திய ரசிகர்கள் வந்து நியூசி., அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏர்இந்தியா விமான கடத்தல்:அரசு மறுப்பு
புதுடில்லி : லண்டனில் இருந்து டில்லி வந்த ஏர்இந்தியா விமானம் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை ஏர்இந்தியா நிர்வாகமும், டில்லி விமான நிலைய நிர்வாகமும் மறுத்துள்ளன. இது முற்றிலும் தவறானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஆத்மிக்கு ஜெட்லி அட்வைஸ்
வாரணாசி : ஆம்ஆத்மியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆம்ஆத்மி அரசு தங்களின் அரசியல் முதிர்ச்சியின்மை காரணமாக டில்லி மக்களுக்காக பணியாற்ற கிடைத்துள்ள வாய்ப்பை இழந்து விட வேண்டாம். வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று மிகப் பெரிய நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களுக்கு ஓட்டளித்துள்ளனர். கட்சி உறுப்பினர்களுடனேயே கெஜ்ரிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுவது புது விதமான அரசியல் என கூறி உள்ளார்.
கோவை:குறுந்தொழில் நிறுவனங்கள் மூடல்
கோவை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பந்த்திற்கு ஆதரவாக கோவையில் சுமார் 4000 முதல் 5000 வரையிலான குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கோவையில் மொத்தம் 50,000 குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஏமனில் இருந்து மக்கள் வெளியேற்றம்
ஏமன் : ஏமனின் ஏடன் பகுதியில் இருந்து வெளிநாட்டினர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை சவுதி அரசு வெளியேற்றி உள்ளது.
கட்சியிலிருந்து பூஷன், யாதவ் வெளியேற்றம்
புதுடில்லி : டில்லியில் நடைபெற்றள ஆம்ஆத்மியின் தேசிய குழு கூட்டத்தில் பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்தரி யாதவ்வை கட்சியில் இருந்து வெளியேற்றுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் இருந்து வெளியேறினார் கெஜ்ரி
புதுடில்லி : ஆம்ஆத்மியின் தேசிய குழு கூட்டம் இன்று டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பிரசாந்த் பூஷன் மற்றும் யோகாந்திர யாதவை கட்சியில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படதாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே காரணம் ஏதும் தெரிவிக்காமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
பன்றிக்காய்ச்சல் பலி 2000ஐ தாண்டியது
புதுடில்லி : நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2011 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 33,462 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் பன்றிக்காய்ச்சலால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக-தமிழக எல்லையில் பதற்றம்
ஓசூர் : கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் தமிழக அரசை கண்டித்து ஜெயகர்நாடக அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடத்துவதற்காக அத்திப்பள்ளி நோக்கி விவசாயிகள் வந்து கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நான் மன்னிப்பு கேட்கிறேன்:யாதவ்
புதுடில்லி : டில்லியில் இன்று நடைபெறும் ஆம்ஆத்மி கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அட்மிரல் ராம்தாசை ஆம்ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து யோகேந்திர யாதவ் பேசுகையில், இது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவரிடம் இருந்து கடிதம் கிடைத்தது. கட்சியினர் இவ்வாறு கூறியதற்காக அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன். அதே சமயம் அவரை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கட்சி அனுப்பி உள்ள கடிதத்தையும் வெளியிட வேண்டும் என அவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
நாகையில் விவசாய சங்கத்தினர் கைது
நாகை : மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் காரைக்கால்-வேளாங்கண்ணி ரயிலை மறிக்க முயன்ற திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் பந்த்தால் பாதிப்பில்லை
சென்னை : தமிழகம் முழுவதம் பந்த் அறிவிக்கப்பட்டிருந்த போதும் தொழில் நகரமான கோவையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பொள்ளாச்சியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதிலும் பஸ்கள் எப்போதும் போல் இயக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல்லில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை. மதுரையில் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.
விமானநிலைய அதிகாரி சஸ்பெண்ட்
புதுடில்லி : டில்லி விமான நிலையத்தில் சோதனையிடுவதாக கூறி பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக விமான நிலைய அதிகாரி மீது பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விமான நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இன்று அமேதி செல்கிறார் சோனியா
புதுடில்லி : அமேதி தொகுதி எம்.பி.,யும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் எங்கிருக்கிறார், எப்போது வருவார் என எந்த தகவலும் தெரியாமல் இருக்கும் நிலையில் அவரது தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து தனது தொகுதியான ரேபரேலிக்கும் சோனியா சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
நாளையுடன் ஓய்வுபெறுகிறார் கிளார்க்
மெல்பேர்ன் : மெல்பேனில் நாளை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் அறிவித்துள்ளார். நாளைய போட்டி தான் தனது கடைசி ஒருநாள் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆம்ஆத்மி தேசிய குழு இன்று கூடுகிறது
புதுடில்லி : ஆம்ஆத்மி கட்சியின் தேசிய குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
ரயில்வேயில் தனியார்துறை முதலீடு : அமைச்சர்
புதுடில்லி: ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் தனியார்முதலீட்டில் வெளிப்படையான முறை கடைபிடிக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது. அதே நேரத்தில் ரயில்வே துறையி்ன் நிதிநிலைய வலுப்படுத்தவதற்கு தனியார் முதலீடுகள் அவசியமாகிறது. இத்துறையில் முதலீடு செய்யும் தொழில்அதிபர்கள் பங்குதாரர்களாகவே கருதப்படுவர்.தனியார் முதலீட்டிற்கு வெளிப்படைத்தன்மை அவசியம் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற் கொள்ளும் என கூறினார்.
ஆந்திரா : அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஐபோன் வசதி
ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தின் அனைத்து கட்சியையும் சேர்ந்த 175 எம்.எல்.ஏக்களுக்கும் ஐபோன்-6 வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடிரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ஐபோன் வைத்திருந்த போதிலும் அவர்களுக்கும் அரசு ஐபோன்வழங்கியுள்ளது. மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவது போன்ற திட்டங்களுக்கு ரூ17 ஆயிரத்து 500 கோடி கடன் இருப்பதாக அரசு அறவித்த நிலையில் பட்ஜெட் கூட்ட இறுதி நாளில் ஐபோன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நில மசோதா குறித்து மோடியுடன் விவாதத்திற்கு தயார்: ஹசாரே
மும்பை: நில மசோதா குறித்து பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய நேரடியாக தயாராக இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஹசாரே, பிரதமர் மோடி பங்கேற்கும் விவாதத்தில், சில முடிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தால், இந்த விவாதத்தில், எங்கள் இயக்கத்தை சேர்ந்த 4 அல்லது 5 பேர் பங்கேற்பார்கள். விவாதத்திற்கான நேரம் மற்றும் இடத்தை பிரதமர் மோடியே முடிவு செய்து தெரிவிப்பார் என நாங்கள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர், விவசாயிகள் நலனுக்கான எந்தவொன்றும் இந்த மசோதாவில் இல்லை என கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக துபாய் செல்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மூன்று நாள் பயணமாக துபாய் செல்ல உள்ளார். வரும் 29ம்தேதி அவர் துபாய் செல்ல உள்ளார். கொச்சியிலிருந்து துபாய் செல்லும் அவர், கொச்சியில் அமைய உள்ள ஐ.டி., பார்க் குறித்துஆலோசனை நடத்தும் அவர், தொழில்துறை மாநாடு குறித்த கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார் என அதிகாரி ஒருவர் கூறினார்.
பி.எஸ்.எல்.வி சி 27 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது
பெங்களூரு: புவிசார் வழிகாட்டி தொழில்நுட்பத்திற்காக பி.எஸ்.எல்.வி சி 27 ராக்கெட், நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கை கோள் தாங்கி செல்ல உள்ளது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை மாலை இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று முன்தினம் மாலை 5 மணி 49 நிமிடங்களுக்கு துவங்கியது குறிப்பிடத்தக்கது.
ரவுடி கொலை வழக்கு: பா.ஜ., பெண் கவுன்சிலர் சரண்
பெ.நா.பாளையம்: ரவுடி கொலை வழக்கில், பா.ஜ., பெண் கவுன்சிலர் போலீசில் சரண் அடைந்தார். கோவை மாநகராட்சி, முதல் வார்டு கவுன்சிலர் வத்சலா; பா.ஜ.,வைச் சேர்ந்தவர். இவருக்கும், அவினாசியைச் சேர்ந்த ரவுடி, 'ஜிம்' ஆறுமுகம், 51, என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது.நேற்று முன்தினம், துடியலுார், மணீஸ் நகரில் ஆறுமுகம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கவுன்சிலர் வத்சலா உட்பட, நான்கு பேர், போலீசில் நேற்று சரண் அடைந்தனர்.
பெ.நா.பாளையம்: ரவுடி கொலை வழக்கில், பா.ஜ., பெண் கவுன்சிலர் போலீசில் சரண் அடைந்தார். கோவை மாநகராட்சி, முதல் வார்டு கவுன்சிலர் வத்சலா; பா.ஜ.,வைச் சேர்ந்தவர். இவருக்கும், அவினாசியைச் சேர்ந்த ரவுடி, 'ஜிம்' ஆறுமுகம், 51, என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது.நேற்று முன்தினம், துடியலுார், மணீஸ் நகரில் ஆறுமுகம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கவுன்சிலர் வத்சலா உட்பட, நான்கு பேர், போலீசில் நேற்று சரண் அடைந்தனர்.
கன்னியாஸ்திரி கற்பழிப்பு: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு மறுப்பு
புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம் ரானாகாட் பகுதியில் 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் சி.ஐ.டி., போலீசார் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த முடிவை மாநில அரசுக்கு தெரிவித்து விட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.