குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

இலங்கைக்கு விழுந்த பேரிடி: கிலரி ஈழத் தமிழர் குறித்து நிச்சயம் பேசுவார் !பிளேக்கும் சொல்கிறார்.

 18.07.2011த.ஆ.2042--அமெரிக்க ராசாங்கச் செயலாளர் ஒருவர் சென்னை சென்று தங்கி அம்மாநில முதல்வரைச் சந்திக்கவிருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவை எனக் கூறப்படுகிறது.தமிழும்(முழுத்தமிழா) ஆங்கிலமும் முதல் முறைசந்திப்பு சாதிக்கப்போவது என்ன?  அமெரிக்க ராயாங்கச் செயலாளரும் உலகில் பலம்மிக்க பதவியொன்றில் உள்ளவருமான திருமதி கிளிங்கடன் அவர்கள் சென்னை செல்லவுள்ளார். அவர் சென்னையில் தங்கியிருக்கும் நாட்களில், அம்மாநில முதல்வர் செல்வி யெயலலிதாவை சந்தித்து உரையாடவுள்ளார். இருப்பினும் இவரது பயணம் ஒரு அரசியல் அல்லது உத்தியோகபூர்வ பயணம் அல்ல எனவும், அவர் பெண்கள் மேம்பாடு மற்றும், வணிகம் சம்பந்தமாகவே சென்னை செல்வதாகவும் அமெரிக்கா கண்டிப்பாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை செல்லும் திருமதி கிளிங்கடன் அவர்கள் இலங்கைத் தமிழர் விடையம் தொடர்பாக செல்வி யெயலலிதாவோடு பேசவேண்டும் என பல தரப்பாலும் அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்ததோடு, பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. இன்று(18.07.2011) அமெரிக்க ராசாங்கத் திணைக்கள உயரதிகாரி ஒருவர் இந்திய செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில், கிலரி கிளிங்கடன் அவர்கள் நிச்சயமாக இலங்கைத் தமிழர் குறித்துப் பேசுவார் என உறுதிப்படுத்தியுள்ளார். கிலரி கிளிங்கடனின் சென்னை பயணத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றாலும் நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளது இலங்கை அரசுக்கு விழுந்த பேரிடியாக உள்ளது !

சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி யெயலலிதா அவர்கள் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரவேண்டும் எனக் குறிப்பிட்ட கருத்துகளை, இலங்கை வன்மையாகக் கண்டித்ததோடு, தாம் மாநில அரசுகளோடு பேசுவது இல்லை என்றும் தெரிவித்து, மாநில அரசை ஒரு செல்லாக்காசு என வர்ணித்திருந்தது. ஆனால் உலகின் பலம் மிக்க பதவியில் இருக்கும் திருமதி கிளிங்டன் அவர்கள், செல்வி யெயலலிதாவோடு பேசவிருப்பது தொடர்பாக இலங்கை அதிருப்தியடைந்துள்ளதாகவும், இருப்பினும் அதனைத் தடுக்கும் வல்லமை இல்லாது இருப்பதாவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும், கரிசனையும் கொண்டுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் வருவது, ஒரு நியாயமான செயலாக அமையாது என அமெரிக்க உயரதிகாரி கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.கிலாரி யெயலலிதாவுடன் இலங்கை தொடர்பாக பேசப்படலாம் - ரொபர்ட் ஓ பிளேக் :
18 .07. 2011  அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிpலாரி கிளின்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பாக பேசப்படலாம் என அமெரிக்கா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார துணைச்செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
 
 
எனினும் கிலாரி கிளின்டன் தன பயணத்தின் போது, இலங்கை தொடர்பாக பேச மாட்டார் என இந்திய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
 
தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கை நிலைமைகுறித்து கூடிய அக்கறை செலுத்தியுள்ளதாகவும் அது கிளின்டன் மற்றும் யெயலலிதா சந்திப்பில் கட்டாயமான ஒரு அங்கமாக இருக்கும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.
 
 
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளின்டன் இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
 
 
கிளின்டன், தனது இந்திய பயணத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங்,  வெளிவிவகார அமைச்சர் எசு.எம். கிருசுணா,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.