குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் ஈழம் மீதான அக்கறையும் கூட்டமைப்பின் தாக்கமும்

18.07.2011- ஆனாலும் இந்தியாவின் விலாங்குப் போக்கை தமிழர்கள் நம்பமுடியாது. இந்தியா உண்மையில் தனது ஆரியபிராமணிய ஆதிக்கத்தன்மையை விட்டு தமிழினத்தை தமிழகத்தை மதித்து நடக்குமாயின்  இலங்கைப் பிரச்சனை இலகுவாகும். இன்று வெள்ளைகளையும் இதற்குள் இழுத்து ஆசியாவில் தனக்கெதிரானவர்களை இதில் சிக்கவைத்துக் கொண்டிருக்கு அரச நுணுக்கத்தையே இந்தியா கையாழுகின்றது. இது குமரிநாட்டின் கருத்து. சில நேரங்களில் எல்லாமே நாம் நினைத்தபடி நடந்துவிடும். அதுவே வேறு சில நேரங்களில் எல்லாமே நாம் நினைத்தவைக்கு மாறாக நடந்து விடும். அப்படியான ஒரு வரலாற்றுச் சிக்கலில் ஈழத்தமிழினம் தற்போது உள்ளதைக் கருத்திற் கொண்டு பின்வரும் கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கின்றோம்.
கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகள் யாவும் இந்தியா பற்றிய ஒரு மாயையை அல்லது இதுவரை இந்தியாக கொண்டிருந்த நிலைப்பாட்டை மாறுபட வைப்பனவாகவும், இலங்கைத் தமிழர்கள் சம குடிகளாக வாழ வேண்டும் என்ற ஒரு அதிகாராத் தொணியை இந்தியா உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும் இருந்தது வருகிறது.

அது போலவே சர்வதேசமும் ஈழத்தில் வாழும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான அழுத்தமான விசாரணையை நடத்துங்கள் என இருவேறு முனைகளில் சிறீலங்கா அரசிற்கு சாம, தான, தண்ட, பேத அழுத்தங்கங்களைக் கொடுத்து வருகிறது.

இதுவே சமகாலத்தில் தமிழினம் தரிசிக்கும் உண்மை, யதார்த்தம். இதுகூட எமது மாவீரர்கள், போராளிகளின் பங்களிப்பின் பெறுபேறாக எமது இனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிற ஒரு பணியே. இப் பணியில் நம் முன் தற்போது உள்ள தெரிவு இந்த இரண்டு வழிமுறைகளிலும் நாம் எவ்வாறு பங்களிப்புச் செலுத்த முடியும் என்பதேயாகும்.

ஏனென்றால் தமிழ்த் தேசியம் என்றுமில்லாதவாறு, ஆனந்தசங்கரி, சித்தார்த்தான், சிறீஸ்காந்தா, சிவாஜிலிங்கம் என எல்லோரையுமே ஓரணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக திரளவைத்து இருக்கின்ற இத் தருணத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமைகளென வர்ணிக்கப்படுவோரில் ஒரு பகுதியினர் வாய்மூடி மௌனிகளாக இருப்பதையிட்டு நாம் விசனமடைகிறோம்.

போர்க் குற்றத்திற்கான சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டைப் போடும் மேற்குலகுடன் நாங்கள் முரண்பட்டேயாக வேண்டும். யூத இனம் எவ்வாறு தம் அழிவுகளிற்கு ஹிட்லரை அடையாளம் காட்டியதோ அதே போன்று ஈழத்தமிழனத்தின் சார்பில் மகிந்தவின் ராஜாங்கத்தை நாங்கள் நிறுத்த வேண்டிய கடமை எம்மது என்பதில் தமிழ்வின் நூறுவீத நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆனால் அதேவேளை ஈழத்தில் வாழும் தமிழ்மக்களிற்கான தீர்விற்கான முயற்சிகளோடு இதனை தொடர்புபடுத்தி அதனை தடுப்பதில் யாராவாது முனைந்தால் அதற்கு நாம் என்றுமே ஆதரவளிக்கப் போவதில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்களின் ஜனநாயக வாழ்வியலும், போர்க் குற்ற விசாரணைகளும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் “தமிழீழம்” என்ற இரயில் பயணிக்கும் இரண்டு தண்ட வாளங்களேயாகும்.

இந்த இரண்டு தண்டவாளங்களும் சமாந்தரமாக செல்லுமே தவிர எப்போதுமே ஒன்றையொன்று சந்திக்காது. எனவே அங்கு இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் வாழும் ஈழத்தமிழர்களின் ஜனநாயக உரிமை என்ற பாத்திரத்தில் நாங்கள் விட்டுக் கொடுத்துச் செயற்பட வேண்டிய தேவை ஒன்றுள்ளது.

இலங்கைத் தீவிற்கான பேச்சுவார்த்தைக்கான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடையாளப்படுத்தப்பட வேண்டுமானால் அது மக்களின் விருப்பை பெற்ற கட்சியாக இருக்க வேண்டும். அதற்கான சோதனைக் களமே இந்த உள்ளாட்சித் தேர்தல். இதனை முறியடிக்கவே பண, படைப் பலத்துடன் தனது மந்திரிகள் சேனையை வடக்கில் களமிறக்கியுள்ளார் மகிந்த ராஜபக்ச.

ஆனால் அதனையும் முறியடித்து வெற்றிவாகை சூடுவோம் என உயிரைப் பணயம் வைத்துக் களமாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். அவர்கள் வாய் வீரர்களாக இல்லாது செயல்வீரர்களாகவும் துணிச்சலுடன் செயலாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமையின் ஒரு பகுதியினர் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் சாதிப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிருக்கு தமது ஆதரவை தெரிவிப்பதில் பின் நிற்கிறார்கள். அல்லது அவர்களிடைய பிரிவுகளை விரும்புகிறார்கள். இவர்களிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் நிகழ்வுகளையும், நியாங்களையும் பிரித்து மக்களின் வாழ்வியலைப் பாருங்கள் என்பதேயாகும்.

ஏனென்றால் இந்த உள்ளக ஆட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாண்மை பெறாவிட்டால் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை எனவே அவர்களுடன் மாத்திரம் பேசத் தேவையில்லை மாற்றுக் கட்சிகளுடன் பேசவேண்டும் என்ற நியாயப்பாட்டை சிறீலங்கா முன்வைக்கும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாண்மை பெற்றால் இது தான் எங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு என ஒரு தீர்வை முன்வைக்கும் போது அது மறுதலிக்கப்பட்டால் சர்வதேசம் எமது நியாயங்களைப் புரிந்து கொள்வதற்கும் மாற்றுவழி தேடுவதற்கும் நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தவர்களாவோம்.

சிறீலங்கா ஆட்சியமைப்பில் பாராளுமன்றத் தேர்தலும் உள்ளுராட்சித் தேர்தலும் இன்றியமையாத படிமுறைகள். இவை இரண்டுமே கிடைக்கப்பெறும் பணத்தை அந்த மாவட்டங்களிலும், தொகுதிகளும் செலவிடுவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ள மையங்கள்.

கடந்தகாலம் எமக்கு தந்த படிப்பினைகள் ஏராளம். 1992ம் ஆண்டில் நாங்கள் மேற்கொண்ட ஒரு தேர்தல் பகிஸ்கரிப்பே டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரு தனிநபரை வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குக்களுடன், நாடாளுமன்றம் செல்ல வைத்தது. அவர்கூடச் சென்றவர்கள் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். ஒரு நூறு வாக்குக் கூடப் பெறாமல் அவர்கள் சென்றார்கள். அதன் பெறுபேறுகளை நாங்கள் நாளாந்தம் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். யாழ் மாநகரசபை கூட இன்று அவர்கள் வசமே என்பதை நாங்கள் இதில் கோடிட்டுக் காட்டத் தேவையில்லை.

இந்த நிலையில் இந்தத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிகாக எம்மால் எதுவுமே இங்கிருந்து செய்ய முடியாவிட்டாலும் புலம்பெயர்ந்த மக்களின் தலைமைகள் தங்களின் தார்மீக ஆதரவை அவர்களிற்கு வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் நாளை இடம்பெறப்போகும் ஈழத்தமிழினத்தின் அழிவிற்கான ஆமோதிப்பை வழங்கியவர்கள் என்ற அவப்பெயரையும் இவர்களே தாங்கியாக வேண்டும்.


வண்ணன் குகேந்திரா

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.