குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

நிலைத்து நின்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் - வீ. ஆனந்தசங்கரி மனோகணேசனும் பேசினார்

18 .07.011  -த.ஆ-2042--அன்றும் இன்றும் என்றுமே சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களுடன், தமிழ் மண்ணில், நிலைத்து நின்றவர்கள் என்றும் இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இன்று தற்காலிக கூடங்களை அமைத்துக் கொண்டு இங்கே தங்கி இருக்கும் அமைச்சர்களும், சிங்களக் கட்சியினரும் தேர்தல் முடிவுகளைக் கேட்கக் கூட இங்கே இருக்கமாட்டார்கள். எனவே மானமுள்ள தமிழர்களான நாம் எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கே வாக்களித்து நமது தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பளை பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆனந்த சங்கரி இதனை குறிப்பிட்டு;ளளார்.
 
 
இப்பொழுது இங்கு நடை பெறுவது சாதாரண பிரதேச சபைக்கான தேர்தல் அல்ல. தன்மானத் தமிழர்களுக்கும் ஒரு சிங்கள அரசாங்கத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு பலப்பரீட்சை.
 
இந்த தமிழ் மண்ணில் நாம் இருப்பதற்கு எதுவுமே இல்லை. இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான்.உச்சிமீது வானமே இடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை என்று வாழ்பவன் தமிழன். நமது தாயகத்தை, தமிழ் தேசியத்தை தமிழ் மண்ணைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரினும் கடமை. இதை மறந்துவிடக் கூடாது.
 
 
கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துவிடக்கூடாது. வாக்களிப்பில் கலந்துகொள்வோர் ஏனோதானோ என்று இருந்துவிடக் கூடாது. நம்மைப் பாதுகாக்க இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் நமது வாக்குகள் மட்டுமே தான்.
 
அதனை நாம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிக்காவிட்டால் நமது வாக்குகள் சூறையாடப்பட்டு நமக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு விடலாம்.இன்று சர்வதேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. போர்குற்ற அறிக்கையும் சனல் 4 உம் கூறுவது சரியா? அல்லது சிங்கள அரசு கூறுவது சரியா? என்று அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அதனை தீர்மானிக்க வேண்டியதும், தீர்ப்பு வழங்க வேண்டியதும் நீங்கள் தான். சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
 
 
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீதரன், ஈ.சரவணபவன், பிரதேச அமைப்பாளர் அருந்தவபாலன் ஆகியோர் பேசினர்.
தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் தேடுகிறார்கள் - மனோ
18 .7. 2011 


வன்னியில் நடந்த கடைசிக் கட்டப் போரில் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய் கூறுவதாகவும் அவரைத் தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும் எனவும் தமிழன் என மட்டுமல்ல, மனிதன் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
 
தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் காணவில்லை என்று தேடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இங்கே முகாமிட்டுள்ளார்கள். மக்கள் மீது அக்கறை கொண்டு ஜனாதிபதியோ அமைச்சர்களோ இங்கு வரவில்லை. போர்க்குற்ற விசாரணை, சனல்4 தொலைக்காட்சி போன்றவை நிரூபிக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காகவே அவரகள் இங்கு வந்துள்ளார்.
 
வேட்டிக்கும் சேலைக்கும் சில அற்பசொற்ப சலுகைகளுக்கும் சோடைபோபவர்கள் அல்லர் எமது மக்கள். அவர்கள் மானம் உள்ளவர்கள். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 1983ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களைவிட்டு சிங்களக் காடையர்களால் விரட்டப்பட்டு, வன்னியில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்.
 
வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அமைச்சர்களை நம்ப வேண்டாம். அவர்கள் தமிழ் மக்களை ஆதரிக்கவல்ல, அழிக்கவே வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் தாம் கோழைகள் அல்லர் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபிப்பார்கள் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


வடமாகாண சபைக்கு உரித்தான நிதியை தேர்தலுக்காக அரசு பயன்படுத்துவது
18 .07. 2011 
குறித்து  தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளது :


 வடமாகாண சபைக்கு உரித்தான 25 மில்லியன் ரூபாவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசு பயன்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
வடக்கு மாகாண சபைக்குரிய இந்த நிதியை வடமாகாண ஆளுநர் வழங்கியிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.
 
வடக்கு மக்களின் நலன்புரித் திட்டங்களுக்கு என ஒதுக்கப்பட வேண்டிய இந்த நிதியைத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அரசு திட்டமிட்டு செலவிடுகிறது. இந்த நிதியில் வேட்டி, பட்டுச்சேலை, தையல் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன. இது உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தின்படி குற்றமாகும் என சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்ட விதிகளின் 89ஆவது ஷரத்தின்படி இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாக்காளர்களுக்கு இலவசமாகப் பொருள்களை வழங்குவது லஞ்சமாகக் கருதப்படும். இதைக் கொடுப்பதும் வாங்குவதும் இந்தச்ஷரத்தின்படி குற்றமாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.