குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

21.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பயனற்ற சட்டங்களை நீக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடில்லி: பழமையான சட்டங்கள் அனைத்தையும் நீக் க வழிவகை செய்யும் மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றியது. இதயைடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப் பட்ட 758 பயனற்ற சட்டங்களை நீக்கவும் அரசு தி்ட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 1950-ம் ஆண்புடு முதல் 1976-ம் ஆண்டு வரை நிறை வேற்றப் பட்ட சட்டங்களும் உள்ளன. இக் காலக்கட்டங்களில் பல்வேறு மாநிலங்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த போது அவற்றின் நிதி ஒதுக்கீட்டிற்காக இயறறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னருக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை : யுகாதி திருநாளை முன்னிட்டு தமிழக கவர்னர் ரோசைய்யாவிற்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். பூங்கொத்துடன் வாழ்த்து கடிதத்தை ரோசைய்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
கர்நாடக முதல்வர் மீது திக்விஜய் தாக்கு
புதுடில்லி : ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம் தொடர்பான வழக்கை கர்நாடக அரசு முறையாக கையாளவில்லை எனவும், இவ்வழக்கை உடனடியாக சிபிஐ.,க்க மாற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் உதவி கேட்கிறது இலங்கை
கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே பதுக்கிய வைத்துள்ள 2 பில்லியன் டாலர் பணத்தை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவி தேவை என இலங்கை அரசு கேட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை இலங்கை புலனாய்வுக் குழுவினர் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், அது துபாய் வங்கிகளில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அதனை மீட்க அமெரிக்காவும், இந்தியாவும் உதவ வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ராணுவம் மீது காஷ்மீர் அமைச்சர் குற்றச்சாட்டு
ஜம்மு : காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக பேசிய காஷ்மீர் சுகாதாரத்துறை அமைச்சர், ராணுவத்தின் பாதுகாப்பு குறைபாடே இந்த தாக்குதலுக்கு காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.
கசாப் பிரியாணி கேட்கவில்லை:நிகம்
ஜெய்பூர் : மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக ஜெய்பூரில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பேசிய வழக்கறிஞர் உஜ்வால் நிகம், விசாரணையின் போது கசாப் பிரியாணி கேட்கவும் இல்லை. அரசும் பிரியாணி கொடுக்கவில்லை. வழக்கு விசாரணையின் போது உணர்வுபூர்வமான வார்த்தைகளை மட்டுமே கசாப் அளித்தார் என தெரிவித்துள்ளார். அன்றைய தினம் ரக்ஷா பந்தன் என்பதால் தனது தந்தையை நினைத்து கசாப் கண்ணீர் வடித்தார் என்று கூட பத்திரிக்கைகள் எழுதியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலை கருவூலத்தில் நகை - பணம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர் ; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நகை - பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பணம், நகை மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.
பொதுப்பணித்துறையில் ஊழல்:கனிமொழி பகீர்
நெல்லை : நெல்லையில், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினரை திமுக எம்.பி., கனிமொழி இன்று சந்தித்து பேசினார். முத்துகுமாரசாமியின் மனைவி சரஸ்வதி மற்றும் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, முத்துகுமாரசாமியின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அடுத்த பார்லி.,கூட்டத் தொடரின் போது நான் பேச உள்ளேன். இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சரையும், அதிமுக.,வினரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். நெல்லையில் மணிமுத்தாறு அணை பகுதியில் ரூ.4 கோடியே 91 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்றதாக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் கையெழுத்து போட வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரி குமாரசாமியை சிலர் மிரட்டி உள்ளனர். இதன் காரணமாக அவர் விருப்ப ஓய்வு(வி.ஆர்.எஸ்.,) வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார். குமாரசாமி வி.ஆர்.எஸ்., வாங்கியதற்கு காரணம் ஏதும் இதுவரை கூறப்படாமல் இருந்த நிலையில், சிலரின் மிரட்டல் காரணமாகவே அவர் வி.ஆர்.எஸ்., வாங்கியதாக இன்று கனிமொழி கூறி உள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏமன் தாக்குதல் : ஐநா கண்டனம்
ஐ.நா : ஏமனில் மசூதி மீது ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 142 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை அனைத்து வழிகளிலும் தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு எதையும் மறைக்கவில்லை:சித்தராமைய்யா
பெங்களூரு : பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம் தொடர்பான எந்த விஷயங்களையும் அரசு மறைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை அரசியல் ஆக்க பார்க்கின்றன. அவ்வாறு அவர்கள் கூறும் கருத்திற்கு அவர்களே பொறுப்பு. இந்த வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவது தொடர்பாக இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ரவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மார்ச் 23ம் தேதி (திங்கள்கிழமை) அது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மாஜி பிரதமர் கவலைக்கிடம்
சிங்கப்பூர் : உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வாண் யூ.,யின் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 25ல் புதுச்சேரி சட்டசபை கூட்டம்
புதுச்சேரி : மார்ச் 13ம் தேதி புதுச்சேரியின் பட்ஜெட் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் துவங்கியது. முதல் மூன்று நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 25ம் தேதி புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் துவங்க உள்ளதாக சட்டசபை செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கான பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என மார்ச் 25ம் தேதி கூட்டத்தின் போது முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும் சட்டஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை:கனிமொழி
தூத்துக்குடி : தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக திமுக எம்.பி., கனிமொழி இன்று நெல்லை செல்கிறார். அதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த போது அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திற்கும் சட்ட ஒழுங்கிற்கும் எவ்வித சம்பந்தமும். மீத்தேன் எடுக்கும் ஒப்பந்ததத்தை கைவிட்டு விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் அதனை மத்திய அரசு கைவிடவில்லை. அந்த ஒப்பந்தக்காரர் தான் அதனை கைவிட்டுள்ளார். கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்காக அந்த மாநிலமே கொந்தளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை ஊடகங்கள் கூட கண்டுகொள்ளவில்லை. நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதனை ஆதரிக்கும் நிலையில் தான் அவர்கள் இப்போது உள்ளனர் என தெரிவித்துள்ளார். நெல்லைக்கு செல்லும் கனிமொழி, பிற்பகலில் தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் தத்தெடுக்கும் சி.புரம் கிராமத்தில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார்.
வாக்காளர்களுக்கு சந்திரசேகர ராவ் எச்சரிக்கை
ஐதராபாத் : தெலுங்கானாவில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பா.ஜ.,விற்கு ஓட்டளிப்பது சந்திரபாபு நாயுடுவிற்கு ஓட்டுப்போடுவதற்கு சமம் என வாக்காளர்களை எச்சரித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கு தேசம் கட்சியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக போலி வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஏமன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்
ஏடன் : ஏமன் தலைநகர் சனாவில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.,பயங்கரவாதிகள பொறுப்பேற்றுள்ளனர். சனா நகரை கைப்பற்றுவதற்கு சில அமைப்புக்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்காததால் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்:ஒருவர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் சம்பா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தீவிரவாதிகள் நடத்தும் இரண்டாவது தாக்குதலாகும். தற்போதைய தாக்குதலின் போது பொதுமக்கள் தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்,ஒருவர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்ராணுவ முகாமிற்குள் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தான்சானியா நாட்டிற்கு சுஷ்மா சுற்றுப்பயணம்
புதுடில்லி: வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான்சானியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் கூறியிருப்ப தாவது: வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான்ஷானியா, தென் ஆப்ரிக்கா, ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் தான்சானியாவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து 29-ம் தேதி தென் ஆப்ரிக்காவிற்கு செல்கிறார். இவ்வாறு செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.
முல்லைபெரியாறு பகுதியில் புதிய அணை: கேரளா ஆய்வு
திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை கேரள அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அணைப்பகுதி உறுதியாக இருப்பதால் புதிய அணை கட்ட தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இருப்பினும் புதிய அணைகட்டுவது குறித்து மாநில அரசு மத்திய சுற்றச்சூழல் துறையிடம் அனுமதி கோரியது. இதனையடுத்து ஆய்வு நடத்தி அறி்க்கை தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதன்படி மாநில நீர்பாசனத்துறை இன்ஜினியர் ஜார்ஜ் மேற்பார்வையில் விரைவில் 13 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதே நேரத்தில் புதிய அணை கட்ட தேவையில்லை என கூறிய சுப்ரீம் கோர்ட் புதிய அணை கட்டுவதற்கும், அது தொடர்பான ஆய்வு நடத்துவதற்கும் தடை ஏதும் விதிக்கப்பட வில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.
மூன்றாடுகளுக்கு பின் மூன்றுநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு
சியோல்: மூன்று ஆண்டுகளுக்கு பின் மூன்று நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று சந்தித்து பேச உள்ளனர். ஜப்பான்,சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலில் சந்தித்து பேச உள்ளனர். சந்திப்பின் போது மூன்று நாடுகளிடையே உள்ள எல்லைப்பிரச்னை , தீவு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் பற்றாக்குறை 1,270 மெகா வாட்
சென்னை : தமிழக அனல் மின் நிலையங்களில், நேற்று, 3,260 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், மொத்த மின் உற்பத்தி, 11,640 மெகா வாட் என்றளவில் இருந்தது.அதேசமயம், மின் தேவை, 12,910 மெகா வாட்டாக அதிகரித்ததால், 1,270 மெகா வாட், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், சென்னை உட்பட, பல இடங்களில், மின் தடை செய்யப்பட்டது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.