குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

19.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சகாயத்தி்ற்கு மிரட்டல் கடிதம் ?

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை குறி்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு 9ம் கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சகாயத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. இக்கடிதம் குறித்து போலீஸாரிடம் சகாயம் புகார் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மிரட்டல் கடிதம் எழுதிய நபரை போலீஸார் தேடிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மதுரை:விமான நிலையத்தில் நேற்று மாலை இலங்கையிலிருந்து மதுரைக்கு வந்த திருச்சி சேர்ந்த முகமது பெராஸ்கான்(26) என்ற பயணியை சோதனை செய்ததில், அவரிடம் இரண்டரை கிலோ தங்ககட்டி சிக்கியது. இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும். விமான நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

 

கோல்கேட்: சி.பி.ஐ., மீண்டும் சோதனை

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், மேலும் பல இடங்களில் சி.பி,.ஐ., சோதனை நடத்தி வருகிறது. பெங்களூரு, கோல்கட்டா, நாக்பூர் மற்றும் புதுடில்லி ஆகிய நகரங்களில், பல அலுவலகம் மற்றும் இல்லங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கெட்டியான ஒட்டக பால்; விரைவில் விற்பனைக்கு

அகமதாபாத் : சமீப காலமாக நம் ஊரில் ஆங்காங்கே கழுதை பால் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. இப்போது குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், ஒட்டக பாலை விரைவில் விற்பனைக்கு அனுப்ப இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதிக இன்சுலினையும் நிறைய விட்டமின்களையும் கொண்டுள்ள ஒட்டக பால் உடம்புக்கு நல்லது என்றும் அதை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி தெரிவித்தார். இன்னும் நான்கு மாதங்களில் அதற்கான ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும், குஜராத்தில் கட்ச் பகுதியில் இருக்கும் அமுல் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் இந்த ஒட்டக பால் தயாரிக்கப்படும் என்றும் நாள் ஒன்றுக்கு 10,000 லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் அதிகம் ஒட்டகம் இருப்பது குஜராத் மற்றும் ராஜஸ்தானி்ல்.

 

மொபைல் இணைப்பில் இந்தியா சாதனை

புதுடில்லி: இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள மொபைல்போன்களின் இணைப்பு 95.5 கோடியை எட்டி உள்ளது.மிக விரைவில் 100 கோடியை எட்டும் என கருதப்படுகிறது. லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடு முழுவதும் மொபைல்போன் இணைப்புக்கள் பரவி, விரிவிடைந்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று கூறி உள்ளார்.

 

ஆம் ஆத்மி அங்கீகாரம் ரத்து செய்ய கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பெங்களூரு: ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்ய கோரிய மனு டில்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கட்சி பதிவு செய்யும் போது போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது.

 

கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு

புதுடில்லி: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐ. ஏ.எஸ்., அதிகாரி ரவி, மர்மமான முறையில் அவரது அபார்ட்மென்ட்டில் தூக்கில் தொங்கினார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மணல் மாபியாக்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும் கூறி, கோலார் உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள், எதிர்கட்சியினரின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ரவியின் குடும்பத்தினர், சி.பி.ஐ., விசாரணை கோரி உள்ளனர். இருப்பினும், மாநில அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மர்ம மரணம் குறித்து இரண்டு நாட்களில் அறிக்கை அனுப்ப வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

ஆம் ஆத்மி பதிவு குறித்த மனு தள்ளுபடி

புதுடில்லி: ஆம் ஆத்மியை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

அமளி: கர்நாடக சட்டசபை ஒத்திவைப்பு

பெங்களூரு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி கர்நாடக சட்டசபையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால், வரும் திங்கட்கிழமை வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

 

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கவலைக்கிடம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ ( 91) உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது..

பிப்-5 முதல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள அவர் காலமாகி விட்டதாக ஒரு வெப்சைட்டில் செய்தி வெளியானதால் குவான் ஆதரவாளர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் மருத்துவமனை வட்டாரம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வெப்சைட் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் மெல்வின்யாங்கூ எச்சரித்துள்ளார். 1965 ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த போது லீ குவான் யூ முக்கிய பங்காற்றினார். தற்போது அவர் ஐ.சி.யுவில் வைக்கப்பட்டுள்ளார்.

 

மும்பை பள்ளிகளில் பகவத்கீதை

மும்பை: பல மாநிலங்களின் பள்ளிகளில் பகவத்கீதையை கற்றுக் கொடுக்க முடிவெடுத்துள்ளன. இந்த வகையில், மும்பையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் பகவத்கீதையை கற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

 

பார்லி.,முன் பா.ஜ., போராட்டம்

டில்லி : கர்நாடகா ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி இறப்பு குறித்து சி.பி.ஐ.., விசாரிக்க கோரி, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பா.ஜ.,எம்.பிகள் போராட்டம் நடத்தினர்.

 

காஷ்மீர் போக்குவரத்து சீரானது

ஸ்ரீநகர்:கடுமையான பனிபொழிவு மற்றும் ஜவகர் சுரங்கம் பகுதியில் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்ப்பட்டு, 300 கி.மீ. நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, கடந்த 16ம் தேதி மூடப்பட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் வகையில் ஒரு வழிப்பாதை மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதில், இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்லும், என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

 

தெற்காசியாவில் அமைதி: ராஜ்நாத்சிங் கருத்து

புதுடில்லி: தெற்காசியாவில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ வேண்டும் என்றால், அதற்கு பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐ.,யும் ஒத்துழைக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். மேலும், பயங்கரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. எனவே, பயங்கரவாதிகளை தனது செயல்பாடுகளுக்கு யன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா மீது மறைமுக போர் நடத்துவதையும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன் என்றும் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார்.

 

காஷ்மீர் அரசிலிருந்து பா.ஜ,வெளியேறும்

புதுடில்லி : காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாவிட்டால் காஷ்மீர் அரசில் இருந்து பா.ஜ., வெளியேறும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், தேசிய நலனில் பா.ஜ., ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இந்நாட்டு மக்கள். அவர்கள் எங்களிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவதற்காகவே பிடிபி அரசிற்கு ஆதரவு அளித்துள்ளோம். அது நடக்காவிட்டால் அந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பா.ஜ., தயங்காது என கட்சி தொண்டர்களிடம் பேசிய அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

பிரதமரிடம் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மனு

பெங்களூரு : கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவியின் மர்மமான மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கையெழுத்திட்டு, பிரதமர் மோடிக்கு ஆன்லைனில் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். இது தவிர தொண்டு அமைப்புக்கள் சார்பில் 13.58 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவும் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

மோடி அமைச்சர்கள் 10 மாதங்களில் 111 முறை வெளிநாட்டு பயணம்

புதுடில்லி: மோடி அமைச்சரவை பதவியேற்று 10 மாதங்கள் ஆன நிலையில் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 111 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து அ.தி.மு.க எம்.பி சுந்தரம் எழுப்பிய கேள்வி்க்கு பார்லி., விவகாரத்துறை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: மோடி அமைச்சரவை பதவியேற்று 10 மாதம் ஆன நிலையில் அதி்க அளவில்(19முறை ) வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டவகையி்ல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலிடத்தையும், பிரதமர்மோடி இரண்டாம் (11முறை) இடத்தையும், மூன்றாமிடமாக (8முறை) வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்காமிடமாக(5 முறை) மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், இவர்களுக்கு அடுத்தபடியாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், சாலைகள் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ்குமார் சின்ஹா, உணவு பதப்படுத்துதல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத்கவுர்பாதல், ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலேயே வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மான் கி பாத் நிகழ்ச்சியில் விவசாயிகள் குறித்து பேசுகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் ரேடியா மூலம் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இதன்படி, இந்த மாதம் மார்ச் 22ம் தேதி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேச உள்ளார். அன்று காலை 11 மணியளவில், ஒளிபரப்பாகும் 6வது நகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் அவர்களது பிரச்னைகள் குறித்து மக்களிடம் தனது கருத்தை பேச உள்ளார். இது குறித்து தங்களது கருத்தை கூறுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 5 மான் கி பாத் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி, கிளீன் இந்தியா, காதி தொடர்பான பிரச்னை, திறன் மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு, போதைப்பிரச்னை மற்றும் மாணவர்களின் தேர்வு குறித்து பேசினார். ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து மான்கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: கர்நாடக அரசு உறுதி

பெங்களூரு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம் குறித்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைதேவையில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும்திறன் எங்களுக்கு உள்ளது எனவும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட மாட்டாது எனவும் கூறினார்

 

சுதந்திரமான விசாரணை தேவை: பா.ஜ.,

பெங்களூரு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மர்ம மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கர்நாடக மாநில பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.