குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 22 ம் திகதி சனிக் கிழமை .

18.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

மதுரை : நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வைகோவுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

பழநி நகராட்சியில் தர்ணா போராட்டம்
பழநி: கலெக்டர் உத்தரவின்படி, பழனியில் வாகனங்களுக்கான நுழைவு கட்டணத்தை குறைப்பதற்காக, நகராட்சி அவசர கூட்டம் நடந்தது. இதில், ஆளும் கட்சியினர் டெண்டர் எடுத்திருப்பதால், நுழைவு கட்டணம் குறைக்கப்படுவதாகவும், இதே போல் குளிக்குமிடம், கழிப்பிடம் மற்றும் டோல்கேட்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரி தி.மு.க.,வை சேர்ந்த நான்கு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்பயா பட தடை ஏப்.,15 வரை தொடரும்
புதுடில்லி : நிர்பயா ஆவண படத்திற்கு விதித்துள்ள தடை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதால், படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பள்ளி மீது டில்லி அரசு நடவடிக்கை
புதுடில்லி : டில்லியில் உள்ள பிரபல ஒன்றில் பள்ளி நிர்வாகம், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பா.ஜ.,வில் உறுப்பினர்களாக சேர வற்புறுத்தியதாக புகார் வந்தது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர், ஜெட்லிக்கு கட்காரி வாழ்த்து
புதுடில்லி : வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு பார்லி., ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, முதல் முறையாக கறுப்பு பணத்தை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ள நமது பிரதமருக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் எனது வாழ்த்துக்கள். மீட்கப்படும் கறுப்பு பணம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், டில்லியில் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆம்ஆத்மியில் இருந்து பூஷன் ராஜினாமா?
புதுடில்லி : ஆத்ஆத்மி கட்சி பதவியை பிரசாந்த் பூஷன் ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 17ம் தேதியே ராஜினாமா கடிதத்தை கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், கோரிக்கைகளை கட்சி பரிசீலிக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அணு விஞ்ஞானி அனில் ககோத்கர் ராஜினாமா
புதுடில்லி : அணு விஞ்ஞானி அனில் ககோத்கர், மும்பை ஐஐடி கவர்னர்கள் கழகத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சில ஐஐடி இயக்குனர்களை தேர்வு செய்ததில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அனில் ககோத்கருக்கும ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
நியூயார்க்கில் விஷ்ணு கண்காட்சி
நியூயார்க்: நியூயார்க் மெட்ரோபாலிட்டன் மியூசியம் சார்பில், கடவுள் விஷ்ணு பற்றிய கண்காட்சி, டிசம்பர் 19ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வரை நடக்க உள்ளது.'விஷ்ணுவை சந்தியுங்கள்: இந்திய புராண வரலாற்றில் சிங்க முக அவதாரம்' என்ற தலைப்பில் இக்கண்காட்சி நடக்க உள்ளது. இது குறித்து மியூசியம் சார்பில் வௌியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்னிந்தியாவில் இந்து மத விழாக்களில் நடத்தப்படும் நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. கண்காட்சியில் அதிகம் வௌியே தெரியாத, முன்பு இந்து மத கலைகளில் காணப்பட்ட விஷ்ணு பற்றிய முகமூடிகள் பயன்படுத்தப்படும்.உலகில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு நரசிம்ம அவதாரத்திற்கும் தீய மன்னனுக்கும் நடந்த போர் பற்றி இந்த முகமூடிகள் வௌிகாட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்காவின் நெவாடாவை சேர்ந்த உலக இந்துமத சொசைட்டி தலைவர் ராஜன் ஜேத் கூறும்போது ''இந்து மதத்தில் கலைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. மரங்களிலும் துணிகளிலும் இந்து மத கடவுள்களின் உருவங்களை பொறிக்கும் பழக்கம் பல நுாற்றாண்டுகளாக காணப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பெரிய மியூசியங்கள் இதே போன்ற, இந்து மத கலைகளையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சிகளை நடத்த வேண்டும்'' என்றார்.
ஆவணபடத்திற்கு தடை ஏன்?:கோர்ட் கேள்வி
புதுடில்லி : நிர்பயா ஆவணப்படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ள தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, டில்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட், ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் தடையை நீக்கக்கோரும் பொதுநல மனு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.
பேராசிரியர் கொலையாளிக்கு குண்டாஸ்
கோவை: கோவை மாவட்டம், மேட்டுபாளையம் அருகே கல்லூரி உதவி பேராசிரியர் ரம்யா கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மகேஷ் மீது, திருநெல்வேலி,தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தவிட்டார்.
தேவைப்பட்டால் கூட்டத்தொடர் நீட்டிப்பு
புதுடில்லி : பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி தேவைப்படும் பட்சத்தில் 2 நாட்கள் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி மார்ச் 20ம் தேதியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனக்கு அவமானமாக உள்ளது:வத்ரா
புதுடில்லி : மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய சம்பவங்களால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒரு இந்தியனாக அவமானமாக உள்ளது எனவும் வத்ரா தெரிவித்துள்ளார்.
ஏசி வேண்டாம் : கெஜ்ரிவால்
புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிதாக குடியேற இருக்கும் நான்கு படுக்கையறை வசதி கொண்ட வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து 'ஏசி'க்களையும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் எவ்வளவு கூறியும் அவர்களின் கோரிக்கையை ஏற்க கெஜ்ரிவால் மறுத்துள்ளார். அதனால் 'ஏசி'க்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
பார்லி., கூட்டம் நீடிப்பு இல்லை
புதுடில்லி : பார்லி., விவகாரத்துறை அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் சில நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வாட்ஸ்அப்பில் கிண்டல்:பெண்ணுக்கு சவுக்கடி
ரியாத் : சவுதி அரேபியாவில் ஆண் ஒருவரை கிண்டல் செய்யும் வகையில் வாட்ஸ்அப்பில் படம் மற்றும் செய்தி வெளியிட்டதாக இளம் பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சவுதி அரேபியா கோர்ட், அப்பெண்ணிற்கு 20,000 ரியால் அபராதமும், 70 கவுக்கடிகள் தண்டனையும் விதித்துள்ளது.
பிரதமரை சந்திக்கிறார்கள் காங்., தலைவர்கள்
புதுடில்லி : பருவம் தவறிய மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்திருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கமல்நாத், திக்விஜய் சிங், கபில் சிபில், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட காங்., தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஆட்சியாளர்கள் அதிகாரிகளை சாகடிக்கிறார்கள்
சென்னை : கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தற்கொலை: இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் மக்களை வாழ வைக்கிறார்களோ இல்லையோ... நேர்மையான அதிகாரிகளை சாகடிக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற விரைவில் புதிய கொள்கை: இந்த கொள்கையை வகுக்க காந்தி தேசத்தில் 68 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வரூபம் எடுக்கிறது அதிகாரி கொலை
பெங்களூரு : ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக சட்டசபையில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து ரவியின் கொலை வழக்கை புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைக்க கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரவு முழுவதும் சட்டசபையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். ரவியின் மரணம் தற்கொலை என கர்நாடக உள்துறை அமைச்சகம் கூறியதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கை சிபிஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
கிரானைட் முறைகேடு : 2வது குழு நியமனம்
மதுரை : கிரானைட் முறைகேடு குறித்த புகார்களை விசாரிக்க கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையிலான 2வது குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவான புகார்களை இந்த குழு விசாரிக்க உள்ளது. மேலும் புதுத்தாமரைப்பட்டி பகுதியில் காவல் குடியிருப்பு நில ஆக்கிரமிப்பு குறித்தும் இக்குழு விசாரிக்க உள்ளது.
துவங்கியது ஆபரேஷன் ஆம்லா திட்டம்
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் ஆபரேஷன் ஆம்லா திட்டம் துவங்கியது. தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் இந்த ஆபரேஷன் ஆம்லா திட்டம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கப்பல்படை கடலோர காவல் படை, உட்பட பல்வேறு பாதுகாப்பு குழுவினர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆண்டிற்கு இரண்டு முறை ஆபரேஷன் ஆம்லா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொலைதூர கல்வி: பொறியியல் படிப்பிற்கு யுஜிசி தடை
புதுடில்லி: தொலைதூர கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு யுஜிசி தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொலைதூர கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலை தூர கல்வி திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்கு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக எந்த ஒரு பல்கலைகழகம், மற்றும், நிகர்நிலை பல்கலைகழகம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளை தவிர தொலைதூர கல்வி திட்டத்தில் பிற தொழி்ல் நுட்ப பாடங்கள் மற்றும் பட்டய படிப்புகளை நடத்த கூடாது. மீறினால் யுஜிசி அல்லது ஏஐசிடிஇ நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
ஹசாரே பாதயாத்திரை திடீர் ரத்து
மும்பை: நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னாஹசாரே நடத்த இருந்த பாதயாத்திரை போராட்டம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறிவந்த ஹசாரே, மசோதாவை கண்டித்து மகராஷ்டிரா மாநிலம் வர்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து 25ம் தேதி துவங்கும் எனவும் ஏப்ரல் 10-ம் தேதி புதுடில்லி ராம்லீலா மைதானத்தி்ல் முடிவடையும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஹசாரே உதவியாளர் சுரேஷ்பதாரே என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் கூடிய விரைவில் பாதயாத்திரைக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என ஹசாரே தரப்பில் கூறப்பட்டு்ள்ளது
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.