குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

முன்தோன்றிய மூத்த கிருமி!

17.07.2011--புற்றுநோய்க் கிருமி செல்களின் வயது 60 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அறிந்து கூறியுள்ளனர். உலகில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செல் உயிரினம் தோன்றி விட்டது.  அதிலிருந்து பல செல் உயிரினங்கள் உருவாகி பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. இந்த உயிரினத்தில் தான் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு விலங்கின் எலும்புக் கூடுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அவற்றில் புற்று நோய்க் கட்டிகளை உருவாக்கக் கூடிய செல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் புதையுண்டு கிடந்த  விலங்கின் எலும்புக் கூட்டை சோதனை செய்ததில், அது 60 கோடி ஆண்டு பழைமையானது எனவும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்று நோய் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி உயிரோடு இருந்து வருகிறது என தெரிய வந்துள்ளது.