குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

17.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடிக்கு சம்பளம் எவ்வளவு?

வாஷிங்டன்: சர்வதேச அளவில், இந்திய பிரதமராக உள்ள நரேந்திரமோடிக்கு தான் குறைவான சம்பளம் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. உலகின் அதிக அளவு சம்பளம் வாங்கும் பிரதமராக ஆஸ்திரேலியாவின் டோனி அபோட் உள்ளார். அவருக்கு ஆண்டு சம்பளம், 4,03,700 டாலர். அடுத்ததாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 4 லட்சம் டாலர் சம்பளமாக பெறுகிறார்.

 

 

இந்திய பிரதமரான மோடிக்கு, 30 ஆயிரம் டாலர்கள் தான் சம்பளம். மோடியை விட ஒருவர் குறைவாக சம்பளம் வாங்குகிறார். அவர், சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங். அவரின் ஆண்டு சம்பளம் 22 ஆயிரம் டாலர் மட்டுமே.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்;ஜெட்லி
புதுடில்லி: திருத்தியமைக்கப்பட்ட நிதித்துறை விதிமுறைகளின் கீ்ழ், அனைத்து மாநிலங்களுக்கும், நிதி குறித்த விஷயத்தில் அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார்.
கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜர்
புதுடில்லி: அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு டில்லி கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் டில்லி கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
காங்., பேரணிக்கு அனுமதி மறுப்பு
புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, காங்., தலைவர் சோனியா தலைமையில் ராஷ்டிரபவன் நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
பூஷனை விரைவில் சந்திப்பேன்: கெஜ்ரிவால்
புதுடில்லி: ஆம் ஆத்மியில் கருத்து வேறுபாடுகள் எழுப்பியுள்ள பிரசாந்த் பூஷனை விரைவில் சந்திப்பேன் என கட்சியின் ஒருங்கிணப்பாளரும், முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தொடரும் 2ஜி, 3ஜி ஒளிக்கற்றை ஏலம்
புதுடில்லி: 2ஜி,3ஜி ஒலிக்கற்றை ஏலம் 12வது நாளாக இன்றும் நடக்கிறது. இதுவரை, 1.03 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு ஏலம் போயுள்ளது. கடந்த 11 நாட்களில் நடந்த 67 சுற்றுக்களில் 87 சதவீதம் என்ற அளவில் ஏலம் நடந்துள்ளதாகவும், மீதம் உள்ள 13 சதவீதத்திற்கும் ஏலம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் 144 தடை உத்தரவு
புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று தலைநகர் டில்லியில் பேரணி நடக்க உள்ளது. மொத்தம் 9 கட்சிகள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்துள்ளன. இந்நிலையில், டில்லியில் 144 தடை உத்தரவை டில்லி போலீசார் பிறப்பித்துள்ளனர். எம்.பி.க்களுக்கும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படமாட்டாது என்று போலீஸ் கூறி உள்ளது.
12பேரை 'தொங்க' விட்டது பாக்.,
இஸ்லாமாபாத்: பெஷாவர் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு பயங்கரவாதிகள் மீது இருந்த பாசம் மறைந்து, கோபம் வந்துவிட்டது. அதுவரை நிறுத்தி வைத்திருந்த மரண தண்டனையை மீண்டும் ஒரு சட்டம் மூலம் கொண்டு வந்தது. அதை பயன்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை தூக்கில் போட்டு வருகிறது. இந்த வகையில், இன்று காலை 12 பயங்கரவாதிகளை பாக்.,அரசு தூக்கில் போட்டுள்ளது.
ரெய்னாவுக்கு டும் டும் ; தோழியை கரம்பிடிக்கிறார்
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரரான ரெய்னாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் ரெய்னா, 28. இதுவரை 18 டெஸ்ட் (768 ரன்கள்) , 213 ஒரு நாள் (5316), 44 'டுவென்டி-20' (947) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இது குறித்து ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,'' ரெய்னா தாயாரின் தோழியின் மகள் பிரியங்கா சவுத்ரி. சிறு வயதிலிருந்தே ரெய்னாவும், பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள். தற்போது, பிரியங்கா நெதர்லாந்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்திய அணி வீரர்கள், உலக கோப்பை தொடரை முடித்து, மார்ச்30ம் தேதி தாயகம் திரும்புகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி ரெய்னா, தனது நண்பர்களுக்கு விருந்து அளிக்கிறார். டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏப்ரல் 3ம் தேதி காலை நிச்சயதார்த்தமும், அன்று மாலையில் அதே ஓட்டலில் திருமணமும் நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபாவில் அ.தி.மு.க,. தி.மு.க.,மோதல்
புதுடில்லி: ராஜ்யசபாவில், தி.மு.க.,. எம்.பி., கனிமொழி, மீத்தேன் வாயு திட்டத்தை கண்டித்து பேசினார். அப்போது, அவர் தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறி, அ.தி.மு.க,. எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டனர். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
மத்திய அரசு உத்தரவு ரத்து
புதுடில்லி: ஜாட் இனத்தை மற்ற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ரகுபதி ஆணைய விசாரணைக்கு தடை
சென்னை: புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து, அரசுக்கு அறிக்கை தர நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நீதிபதி ரகுபதி தலைமையிலான ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மன்மோகன்சிங்குக்கு சரத்பவார் ஆதரவு
புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர், ஏப்.8ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பபட்டுள்ளது. மன்மோகனசிங் குற்றமற்றவர் என்று கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்மோகன்சிங் வீட்டிற்கு பேரணியாக சென்று, ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், கட்சியினருடன் மன்மோகன்சிங் வீட்டிற்கு சென்று ஆதரவை தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தற்கொலை: விசாரிக்க கோரிக்கை
புதுடில்லி: கர்நாடகா மாநிலம் கோலார் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறி்தது விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளது
டில்லி புறப்பட்டனர் விவசாயிகள்
சென்னை: நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் டில்லியில் நாளை போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக,. நேற்று இரவு அவர்கள் ரயில் மூலம் டில்லி புறப்பட்டு சென்றனர்.
கெஜ்ரிவால் தேறிட்டாரு... டில்லி தேறுமா...?
புதுடில்லி: தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெங்களூருவில், இயற்கைமுறை வைத்திய சிகிச்சை பெற்றார். கிட்டத்தட்ட 80 சதவீதம் குணமடைந்த நிலையில் அவர் டில்லி திரும்பி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.,வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்., நரசிம்மராவ் கூறுகையில், 'நல்ல உடல் நலத்துடன் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பி உள்ளார் என்று நம்புகிறேன். ஆனால், டில்லி அரசின் நிலைமையை பார்த்தால் அது ஆரோக்கியமாக இல்லை என்றே தோன்றுகிறது' என்று தெரிவித்தார்.
டில்லி விமான நிலையத்திற்கு 2 சர்வதேச விருதுகள்
புதுடில்லி:பாரிசில் நடந்த 2015-ம் ஆண்டுக்கான உலக விமான நிலைய விருதுகள் வழங்கும் விழாவில், டில்லியில் உள்ள இந்திரா சர்வதேச விமான நிலையம் 2 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. சிறந்த விமான நிலையம், மற்றும் சிறந்த விமான நிலைய ஊழியர்கள் என்று 2 விருதுகளை டில்லியின் இந்திரா சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளதாகவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த இது உதவுமென்றும் டில்லி சர்வதேச விமான லிமிடெட் நேற்று அறிவித்துள்ளது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.