குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மனோகணேசனின் இணைவு மகத்தானது. பூநகரிபிரதேசபை உட்பட கரச்சி கண்டாவளை பச்சிலப்பள்ளி எங்கும்செல்லவேண்டும்

 17.07. 2011கிளிநொச்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசனும் இணைவு மகத்தானது. பூநகரிபிரதேசபை உட்பட கரச்சி கண்டாவளை பச்சிலப்பள்ளி எங்கும் செல்லவேண்டும்.
  பூநகரிபின் கிராமங்களான  செட்டியகுறிச்சி சித்தன்குறிச்சி  ஞானிமடம் கறுக்காய்த்தீவு  ஆரியம்பொந்து தம்பிராய் ஆலங்கேணி நல்லுார் முட்கொம்பன் மட்டிவில்நாடு. நெற்புலவு வெட்டுக்காடு கௌதாரிமுனை பள்ளிக்குடா நாலாம்கட்டை செம்பன்குண்டு யெயபுரம் சோலை முழங்காவில் போன்னாவெளி வேரவில் கிராஞ்சி வலைப்பாடு இரணைதீவு குமுழமுனை பல்லவராயன்கட்டு கரியாலைநாகபடுவான். அரசபுரம் பத்தினிப்பாய் இன்னும் இவ்வாறு பல கராமங்கள் உண்டு

இது போன்று  ஏனைய பிரதேசசபைகளுக்கும் பிரச்சாரத்ததிற்கு  வரும்தலைவர்கள் சென்று வாக்கு கேட்பதோடு மட்டுமல்லாது  அரசசார்பு எழுச்சியை முறியடிக்கத் தவறின் பூநகரிப்பிரதேச சபையுட்பட பலவற்றை தமிழத்தேசியக் கூட்டமைப்பு இழக்கும் நிலைகாணப் படுகின்றது. 

 உலக உதவிநிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதை பாமரமக்கள் அரசும் நமாலும் கொடுப்பதாக கிளிநொச்சி மக்கள் நம்பி நிற்கின்றார்கள்.

அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் ஓர்இருமாதங்கள் தங்கி நின்று வந்தவரின் கருத்தாக இது இருக்கின்றது.

 பூநகரி யாழ் இணைப்புப் பாலம் போடப்பட்டமை பூநகரி மக்கள் டக்கிளசு பக்கம் அரசபக்கம் சார்ந்து சிந்திக்கும் நிலையிருக்கிறது.

இதைவெற்றிகொள்ள பெரும் பணபலம் தேவைப்படுவதாக கருத்து நிலவுகிறது. அத்துடன்  பிரசித்தியான வேட்பாளர்களை வந்து முகாங்களில் சந்திக்கும்படி   இராணுவ அதிகாரிகள் தொலைபேசியில் அழைப்புவிடுவதாக தகவல்கள் இருக்கின்றன.

 இருந்தாலும் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா அரியேந்திரன்  கொழும்பு மனோகணேசன். வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சி வட்டக்கச்சி சிறிதரன் ஆகியபிரமுகர்களின் எழுச்சிப் பிரசாரமும் தமிழ்மக்களிடம் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதிலும் அய்யமில்லை. 

  எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் இன்று கிளிநொச்சி செல்கின்றனர்.
 
இன்று மாலை 4 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இவர்கள் உரையாற்றுவர்.
 
கூட்டமைப்பின் கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், இராசெல்வராசா, கீ.லோகேஸ்வரன்,  தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் உரையாற்றுவர். கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
 
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் உரையாற்றுவர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.