குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழர்களின் சிறப்புக் கொண்டாட்டத்திற்குரிய ஆடிப்பிறப்பு நாளை(17.07.2011)

17.07.2011 நாளைய தினம் தமிழ் ஆடிப்பிறப்பு தினமாகும்.   அழகான மென்மையான கொழுக்கட்டை செய்து பிள்ளைகளுடன்  அயலவருடன் வெளிநாட்டுநண்பர்களுடன் உண்டுமகிழலாம். பனங்கட்டிக்கூழ் குடித்து மகிழலாம். எம்குடும்பத்தில் முன் இறந்தவர்களுக்கு உணவுகள் சமைத்து படைக்கலாம். ஈழத்து தமிழ்ச்சைவப்புலவர் சோமசுந்தரப்புலவரால்  ஏதும் அறியாத தமிழ்ச்சிறர்கள் போன்றவர்களுக்காக தமிழர்கள் தமது பண்பாட்டுக் கொண்டாட்டங்களை  அறிவதற்காக ஆடிப்பிறப்பிற்கு நாளைவிடுதலை என்று பாடியபின் பள்ளியில் மட்டும் பாடமாகப்படியுங்கள் மற்றும்படி தீபாவழியை பெரிதாகக் கொண்டாடுங்கள் சித்திரைப்பிறப்பை பெரிதாகக்கொண்டாடுதல்  நத்தார்தினத்தைக் கொண்டாடும் பண்பாட்டுப் பிரள்வை தமிழர்கள் தற்போது கொண்டிருக்கிறார்கள்.

 வெள்ளையர்களின் பிறந்தநாளுக்கு கொடுக்கும் முன்னுரிமைகூட ஆடிப்பிறப்பிற்கோ  தைப்பொங்கல் தமிழப்புத்தாண்டிற்கோ கொடுப்பதில்லை.

 இந்த இரண்டுமே தமிழர்களின் சிறப்பு கொண்டாட்டநாளாகும். இவற்றை விடுத்து ஏனைய இந்தியக் கொண்டாட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பழகிவிட்டோம்.

 இதன்பின் பௌத்தத்தோடு மட்டும் மல்லுக்கட்டுவதும் கவலைப்படுவதும் தவறாகும். பிள்ளையார் பிற்காலத்தில் தான் தமிழர்களின் வழிபாட்டுக்கடவுளாகினார்.

சேர்ப்பதற்காக முன்னுக்கு முதலுக்கு என்று பலகாரணங்களைக் கூறி எமது வழிபாட்டில் ஒட்டவைத்து இன்று தனிக்கோவில்களும் இருக்கின்றன.

 அதேபோன்று கிருச்சுணர் கோவில்களும் ஒட்டவைக்கப்பட்டு வளர்ந்தவையே. கண்ணன்  ஆலயங்கள் புதிதாக முளைத்தாலும் அவை இன்று விகாரைகளைவிட  மிகவேகமாக இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் வளர்ந்து பெரிதாகிவிடும்.

 அதேபோன்று தமிழர் கொண்டாட்டங்கள் பின்தள்ளப்பட்டு அயல்நாட்டு பண்பாட்டு  கலாச்சாரக் கொண்டாட்டங்களே தமிழர்களிடத்தில் தாக்கம்பெற்று விட்டது.

 இதனால்  ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு மேலாக மெல்ல மெல்ல மாற்றப்பட்டு தமிழச் சுயம் இழந்திருப்பதை யாரும் உணரவாய்ப்பில்லை இதனால் இப்படியான தமிழ் இனத்திற்கு சாதகமான கருத்துக்கள் மக்களிடம் செல்வதில்லை ஆனாலும் சிலராவது  தமது வாழ்விலாவது எண்ணிச் செயற்படுவதால் மீண்டும் 5000 ஆண்டுகளிலாவது தமிழர்களின் சிலஆவது காக்கப்படும்  மீள்நிலைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.