குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

10.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அழகிரி மீதான வழக்கு ஏப்-7 க்கு ஒத்தி வைப்பு

மேலூர்: தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீதான வழக்கு ஏப்-7 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேர்தல் அதிகாரி ஒருவரை தாக்கியதாக அழகிரி உள்பட 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் ஏப்- 7 ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.

பட்டா மாற்ற லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது

பொள்ளாச்சி: பட்டா மாற்றுவதற்கு 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊஞ்சவேலாம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணசாமியை, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.

 

மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு ஆய்வில், 'உலகில் மூன்று பெண்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில், அவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்முறையின் தாக்கத்தை அனுபவிக்கின்றனர்,' என்று தெரிய வந்துள்ளது.

 

பாதுகாப்பில் சமரசமில்லை: ராஜ்நாத்சிங்

புதுடில்லி: பிரிவினைவாதி மசராத் ஆலம் விடுதலை குறித்து கருத்து தெரிவித்தள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 'பாதுகாப்பு குறித்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆட்சி, அதிகாரத்தை காட்டிலும் நாட்டின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்,' என்று கூறி உள்ளார்.

 

வருகிறது மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு

புதுடில்லி: ஒரு ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார். மேலும், பெட்ரோல் டீசலுக்கான எக்சைஸ் வரியை குறைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் ஜெட்லி கூறி உள்ளார்.

 

தோனியின் வெற்றிச் சாதனை

ஹாமில்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 9 முறை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று, டோனி புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக, சவுரவ் கங்குலி 8 முறை தொடர் வெற்றி கொடுத்துள்ளார். அவரின் சாதனையை டோனி முறியடித்துள்ளார்.

 

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்து கூறி உள்ள பிரதமர் நரேந்திரமோடி, 'இந்த வெற்றியை தொடருங்கள்' என டுவீட் செய்துள்ளார்.

 

அரசியல் கைதிகள் விவகாரம்: அறிவிப்பு

ஸ்ரீநகர்:சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கோர்ட் வழிகாட்டியபடி ஜம்மு காஷ்மீர் அரசு செயல்படும் என, மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.

 

மும்பை கோர்ட்டில் ராகுல் மனு தள்ளுபடி

மும்பை: ஆர் எஸ்.எஸ்., தான் காந்தியை கொன்றது என்று ராகுல் பேசியது குறித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, ராகுல் மனு தாக்கல் செய்திருந்தார். ராகுலின் இந்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

 

பிரிவினைவாதிகள்: முப்தி உத்தரவாதம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றதும். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசரத் ஆலம் விடுவிக்கப்பட்டார். இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மசரத் ஆலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி பிரிவினைவாதிகள் யாரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படமாட்டார்கள் என காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீது உத்தரவாதம் அளித்துள்ளார்.

 

முப்தி மீது நடவடிக்கை: சாமி வற்புறுத்தல்

புதுடில்லி: முப்தி முகமது அரசியல் சட்டத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார். விடுதலை செய்யப்பட்ட பிரிவினைவாதிகளை மீண்டும் கைது செய்யுமாறு, அரசியல் சட்ட விதி 256ன் கீழ் அவருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்ய முப்தி மறுத்தால், அரசியல் சட்ட விதி 356 மற்றும் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் ஆகியவற்றை பிரயோகிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

பா.ஜ.,வுக்கு திக் விஜய் சிங் கேள்வி

புதுடில்லி: மோடி அரசின் கட்டுப்பாட்டில், காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடந்தபோதுதான் மசரத் ஆலமை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, காஷ்மீர் முதல்வர் முப்தி முகமதுவைக் குறை கூறுவதில் என்ன பயன்? என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: இந்தியாவுடனான உறவை இலங்கை அதிபர் பெரிதும் மதிப்பதால், இலங்கை செல்லும் மோடி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கருணாநிதி டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அமர்ஜவான் ஜோதியில் மோடி அஞ்சலி

புதுடில்லி: முதலாம் உலகப் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, புதுடில்லி, அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார்.

 

தூத்துக்குடி அருகே அதிமுக பிரமுகர் கொலை

தூத்து்குடி: தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சி அதிமுக., கிளைச் செயலாளர் பிச்சையா சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 

தொழிலக பாதுகாப்பு படையினருக்கு மோடி வாழ்த்து

புதுடில்லி: மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மத்திய தொழிலக பாதுகாப்புபடையின் 46வது ஆண்டு துவக்க விழா நாளான இன்று அந்த படையைச் சேர்ந்த வீரர்களுக்கு, . அவர்கள் தங்களுடைய கடமையை வீரத்துடனும் கடமை உணர்வுடனும் செய்து வருவதற்காக என்னுடைய சல்யூட். இந்தியா முழுவதும் உள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் மூலம் அவர்கள் நாட்டிற்கு சேவை மகத்தான செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

87 அரசு பள்ளிகளில் மின்வசதி இல்லை : அமைச்சர்

அமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் 87 அரசு துவக்கப்பள்ளிகள் மின்சார வசதி இன்றி செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேஜ்ஸ்ரீ படேலின் கேள்வி ஒன்றிற்கு மாநில கல்வித்துறை அமைச்சர் எழுத்து பூர்வமான பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

 

கேரள சபாநாயகர் பதவி:காங்.,வேட்பாளர் தேர்வு

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டசபையில் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு துணை சபாநாயகர் சக்தன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில சட்டசபை சபாநாயகராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் உடல் நல குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இதனையடுத்து அப்பதவிக்கு தற்போதைய துணை சபாநாயகர் சக்தன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கச்சன் தெரிவித்துள்ளார். துணை சபாநாயகர் சக்தன் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்து வருகிறார். 140 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 74 உறுப்பினர்களும் எதிர்கட்சியான இடது சாரி அணிகளுக்கு 65 உறுப்பினர்களும் உள்ளனர். சபாநாயகர் கார்த்திகேயன் மறைவையொட்டி அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விமானி பற்றாக்குறை: பயணிகள் அவதி

புதுடில்லி: விமானிகள் பற்றாக்குறை காரணமாக விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் 150க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர். புதுடில்லியில் இருந்து ஆமதாபாத் நகருக்கு செல்ல வேண்டிய விமானம் இரவு 8 மணியளவில் புறப்பட தயாராக இருந்தது. இருப்பினும் இரவு 7.30 மணி வரையில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை .இதனையடுத்து விமான நிறுவத்தினரிடம் விசாரித்த போது விமானி பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது. இதனால் 150 பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர். சுமார் ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் தாமதத்திற்கு பின்னர் மாற்று விமானி மூலம் விமானம் புறப்பட்டு சென்றது. முன்னதாக விமானம் கால தாமதாக புறப்படுவதற்கு விமானி காரணமாக இருக்க கூடாது என விமான போக்குவரத்து அமைச்சர் மகேஷ்சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

25-ம் தேதி பாதயாத்திரை துவக்குகிறார் அன்னா ஹசாரே

வார்தா: நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா வரும் 25-ம் தேதி பாதயாத்திரையை துவக்குகிறார். மகாராஷ்டிரா மாநிலம் சேவா கிராமத்தில் இருந்து ஊர்வலம் துவங்குகிறது. ஏப்ரல் மாதம் 27-ம் தேதி புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் பாதயாத்திரை முடிவடைகிறது. யாத்திரையி்ன் முடிவில் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்ட மேடையில் அரசியல் தலைவர்களுக்கு அனுமதி கிடையாது என அன்னா ஹசாரே கூறியுள்ளார். முன்னதாக வரும் 23-ம் தேதி சுதந்திரபோரட்ட வீரர் பகத்சிங்கின் இறந்த தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் சென்று அவரது சொந்த கிராமத்தி்ல் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

 

சேலம் திருமலைகிரியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சேலம்: சேலம், வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி தோப்புக்காடு தோட்டத்தில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வரும் நிலையில், 144 தடை உத்தரவை மேலும், 14 நாட்கள் நீட்டிக்க அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.

 

சூரியசக்தி விமானம் இன்று வருகை

ஆமதாபாத்: உலகிலேயே சூரியசக்தியில் இயங்கும் முதல் விமானம், இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் வருகிறது. போயிங் - 747 விமானத்தை விட பெரியதாக, 72 மீட்டர் அளவுக்கு இறக்கைகளைக் கொண்ட, அதேநேரத்தில், ஒரு காரைப் போல, 2,300 கிலோ எடையுள்ள, கார்பன் பைபரில் தயாரிக்கப்பட்ட, ஒரே இருக்கை கொண்ட, இந்த சூரிய சக்தி விமானம், உலகை சுற்றி வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட் சென்று, அங்கிருந்து ஆமதாபாத் வரும் விமானம், பின், வாரணாசிக்கும் செல்கிறது. இதன் பின், மியான்மர், சீனா மற்றும் அமெரிக்கா என, பயணத்தை தொடர்கிறது. இன்றும், நாளையும் ஆமதாபாத்தில் நிற்கும் விமானம், பின், வாரணாசி செல்லும்போது, மாசற்ற எரிசக்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, கங்கை நதியின் மீதும் பறக்கிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.