குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இது இந்தியாவின் விலாங்குப்போக்கைக் காட்டுகிறது-இதுகுமரிநாட்டின் கருத்து

 17.07.  2011 செனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் - இந்தியா : இது இந்தியாவின் விலாங்குப்போக்கைக் காட்டுகிறது-இதுகுமரிநாட்டின் கருத்து இதற்கு அப்புறம் இந்தியா என் செய்யும் என்பது முக்கியமான விடயம்-பேராசிரியர் சகாதேவன் இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

சானல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது. இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது என விஷ்ணுபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

ஐநா நிபுணர் குழு அறிக்கையைப் பொருத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 சனல் 4 வெளியிட்ட வீடியோ தொடர்பாக நீண்ட மௌனத்தற்குப் பிறகு இந்தியா வெளியிட்ட கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று தெற்காசிய விவகாரங்களுக்கான பகுப்பாய்வாளர் பேராசிரியர் சகாதேவனிடம் பிபிஸி கேட்ட போது 'ஒரு வித்தியாசமான கருத்துத் தான், இந்தியாவின் முக்கியமான ஒரு சில தொலைக்காட்சிகள் இதனை ஒளிபரப்பிய பின்னர் இந்தியா வெளியிட்டுள்ள இந்தக் கருத்து ஒரு முன்னேற்றமான கருத்து என்று தான் சொல்ல முடியும். இதற்கு அப்புறம் இந்தியா என் செய்யும் என்பது இதைவிட முக்கியமான விடயம். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் சொல்லியுள்ள கருத்துக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஐநாவின் அறிக்கை குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தெளிவில்லாத அறிக்கை. ஆனால் அது குறித்து இந்தியா ஒரு அறிக்கை வெளியிட்டள்ளது என்பது முக்கியமான ஒரு நிகழ்ச்சி. ஆந்த அறிக்கையினூடாக இந்தியா என்ன சொல்லவருகிறது என்ன செய்யப் போகிறது என்பது தெளிவில்லாமல் தான் இருக்கிறது. சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து இலங்கை மீது இந்தியா அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முதல் நடவடிக்கையாக இதனைப் பார்க்க முடியுமா என்று சொல்லத் தோன்றவில்லை. இதுவரைக்கும் மௌனம் சாதித்து வந்த இந்தியா இப்போது தெளிவில்லாத ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்து அது என்னசெய்யப் போகிறது என்பது தெளிவில்லாமல் தான் இருக்கிறது. இலங்கை இந்தியாவின் இந்த அறிக்கை குறித்து எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இந்தியாவின் நடவடிக்கை அமைய வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது இந்தியப் பாராளுமன்றில் மற்றைய அரசியல் கட்சிகளால் எத்தகைய அழுத்தம் வரப் போகிறது என்பதைப் பொறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைய வாய்ப்புண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

 நன்றி: பிபிஸி:

செனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையான செனல்4 ஊடகம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரினால் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கமும் படையினரும் திட்ட வட்டமாக நிராகரித்துள்ளனர்
இந்தியாவின் மவுனம் கலைந்தது?

இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் - டி.ராஜா கோரிக்கை. இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாகவும் இறுதிப் போர் தொடர்பாகவும் இந்தியா அமைதியாகவே இருந்து வந்தது. பெரும்பாலும் இலங்கை அரசுக்கு ஆதரவான நண்பனாகவே இந்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரசாத் நேற்று டில்லியில் பேசும் போது, இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20மூ பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். எனவே அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு சட்ட ரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும் தாம் கௌரவமாகவும் சுயமரிதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கைத் தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான் இப்பிரச்சனையில் இந்தியாவின் பார்வை.
 
 
மனித உரிமை மீறல்கள்
............................................
 
 
இலங்கைப் போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக ஐநா பொதுச் செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையைப் பொறுத்தவரை பல் வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சனையை ஐநா மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின. இந்தியாவைப் பொறுத்தவரை போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துக்களை பல் வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லி வந்த போது கடந்த மாதம் கொழும்பில் நடந்த சந்திப்பின் போதும் இது குறித்து கேட்டுள்ளோம்.
 
 
மறு வாழ்வு.
...................
 
 
இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களை மறு குடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை கொடுக்க வேண்டும். என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். இவ்வாறூ விஷ்ணு பிரகாஷ் கூறினார்.
 
இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் - டி.ராஜா கோரிக்கை.
 
 
பெங்களூருவில் செய்தியாளார்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, இலங்கை அரசு சர்வதேச போர் விதிமுறையை மீறி செயல்பட்டது. பெண்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏராளமானோரை போர்க்குற்றவாளி என்ற பெயரில் ராணுவம் கைது செய்து உள்ளது. அவர்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி மனித உரிமை மீறலை நடத்தி வருகிறார்கள். இன்னும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் தொடர்கிறது. இதை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருகின்றன. அங்கு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான மனித உரிமை மீறலை இந்தியா கண்டிக்க வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்போது, அந்த தண்டனை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.தமிழர்கள் மீதான அத்துமீறல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் இதை கண்கூடாக பார்த்து கொண்டு இந்திய அரசு மவுனம் காக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு அவசியம். பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அந்த அரசுடன் இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.