குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 22 ம் திகதி சனிக் கிழமை .

09.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அறிக்கை விடும் ராகுல் எங்கே?

புதுடில்லி : பத்திரிக்கையாளர் வினோத் மேத்தா மரணத்திற்கு இரங்கல், கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணத்திற்கு இரங்கல், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியதாக காங்கிரஸ் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ராகுல் எங்கு இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினருக்கே சரியாக தெரியவில்லை.

 

 

சிலர் அவர் ஏற்கனவே ஓய்வு முடிந்து வந்து விட்டதாகவும், விரைவில் வந்து விடுவார் என சிலரும், பார்லி., கூட்டத்தொடரின் கடைசி வார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் வருவார் என சிலரும் கூறி வருகின்றனர்.

 

நில மசோதா விவாதம் துவங்கியது

புதுடில்லி : லோக்சபாவில் நிலம் கையகப்படுத்தும் மசோதா மீதான விவாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, மசோதாவில் திருத்தம் கொண்டு வர அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

 

முலாயம் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

குர்கான் : பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங், இன்று அவசர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

 

குப்பை அள்ளியவருக்கு ஒரு மாதம் சிறை

ஜியார்ஜியா : அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் வழக்கமாக குப்பை அள்ளும் நேரமான காலை 7 மணிக்கு முன்னதாக துப்புரவுத் தொழிலாளி குப்பையை அள்ளி உள்ளார். வழக்கமான நேரத்திற்கு முன்னதாக குப்பை அள்ளியதால், அந்த சத்தத்தால் தங்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு விட்டதாக அப்பகுதியினர் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து குப்பை அள்ளிய தொழிலாளிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து ஜார்ஜியா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

ஜெய்ராமுக்கு ரூடி பதிலடி

புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ள கருத்திற்கு பதிலளித்த ஆர்.பி.ரூடி, முதல் முறையாக பார்லி.,யில் பேசுவது மட்டுமல்ல எம்.பி.,க்கள் கேன்டீனில் சாதாரணமாக உணவருந்திய பிரதமரை நாம் பெற்றுள்ளோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

 

கோரிக்கையை ஏற்றார் பிரதமர்:மம்தா

புதுடில்லி : டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் ம்மதா பானர்ஜி, மேற்குவங்கத்தில் பல நலதிட்ட பணிகள் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசுக்கு திருப்பி தர வேண்டிய கடனை தளர்த்த வேண்டும் என பிரதமரிடம் கேட்டேன். அதுற்கு அவரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார் என கூறினார்.

 

மஸரத் விடுதலை நியாயமானது:பிடிபி

ஜம்மு : மஸ்ரத் ஆலம் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சட்டவிரோதமாக யாரையும் சிறையில் வைத்திருக்க வேண்டாம் என்று தான் அவரை விடுதலை செய்தோம் என பிடிபி கட்சியின் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து லலித் மோடி நீக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து லலித் மோடி நீக்கப்பட்டுள்ளார்.

 

அரசு பதிலில் திருப்தியில்லை:காங்.,

புதுடில்லி : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரதமர் மோடியும் விளக்கம் அளித்தனர். ஆனால், மத்திய அரசு அளித்த பதில் திருப்தி அளிப்பதாக இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

பிரதமரை சந்தித்தா மம்தா

புதுடில்லி : பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்தித்து பேசினார்.

 

குஜராத் வருகிறது சோலார் விமானம்

ஆமதாபாத் : சூரிய சக்தியால் இயங்கும் விமானமான சோலார் இம்பல்ஸ், நாளை குஜராத் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருந்து புறப்படும் இந்த சோலார் இம்பல்ஸ் விமானம், நாளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் விமானம், இன்றே ஆமதாபாத் வருவதாக இருந்தது. வானிலை ஒத்துழைக்காததன் காரணமாக, ஆமதாபாத் வருகை, ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில், 2 நாட்கள் இருக்கும் சோலார் விமானம், அடுத்ததாக, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்ல உள்ளது.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்காத தொழில்நுட்பங்களை வலியுறுத்தி, சோலார் இம்பல்ஸ் விமானம், சர்வதேச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிரதமருக்கு கார்கே கேள்வி

புதுடில்லி : மஸரத் ஆலயம் விடுதலை தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் விளக்கம் அளித்தது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே, நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் விரும்பினால், பின்னர் எதற்காக காஷ்மீர் அரசுக்கு பா.ஜ., அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள மறுக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

மஸரத் விடுதலையில் எனக்கும் கோபம்:பிரதமர்

புதுடில்லி : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக உங்களின் கோபத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அரசு வேதனை அடைகிறது. இதனை எங்கள் அரசு ஆதரிக்காது. இதை மட்டுமல்ல எந்த பயங்கரவாத நிகழ்வையும் அரசு ஆதரிக்காது. காஷ்மீர் அரசு இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலையும் அளிக்கவில்லை. ஆலமின் விடுதலை கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் எதையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. எந்த தேசபக்தியையும் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை. இந்த விமர்சனங்கள் சரியானது தான். அதனை ஏற்றுக் கொள்கிறேன். இந்த காரணத்திற்காக நாங்கள் காஷ்மீர் அரசில் இருந்து வெளியேற வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.

 

இந்திய பெண் கொலை: அரசு வேதனை

புதுடில்லி : ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் கொலை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கொலைக்கான நோக்கம் என்ன என்பது இது வரை தெரியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

பத்திரப்பதிவு அதிகாரிகள் சோதனை

சிவகங்கை : சிவகங்கையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில், பத்திரப்பதிவு சங்க தலைவர் முருகையா தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

ஐதராபாத் : மார்ச் 7ம் தேதி நடைபெற்ற தெலுங்கானா சட்டசபை கூட்டத்தின் போது கூட்டம் நடைபெற விடாமல் இடையூறு விளைவித்ததற்காக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.,க்கள் மார்ச் 27ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழர்களுக்கு 27,000 வீடுகள்:ஜெய்சங்கர்

புதுடில்லி : செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழகர்களுக்கு விரைவில் வீடுகள் ஒப்படைக்கப்படும். தமிழர்கர்களுக்கு 27,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கை செல்லும் பிரதமர், யாழ்பாணத்தில் தமிழ் தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்:மாயாவதி

புதுடில்லி : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

தேவையானால் பிரதமர் பதிலளிப்பார்:பா.ஜ.,

புதுடில்லி : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என பார்லி.,யின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதற்கு லோக்சபாவில் பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, தேவையானால் மட்டுமே பிரதமர் பதிலளிப்பார். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என தெரிவித்துள்ளார்.

 

பா.ஜ.,வுக்கு மக்கள் கட்சி வலியுறுத்தல்

புதுடில்லி : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் அரசின் முடிவை எதிர்ப்பது உண்மை என்றால், பிடிபி.,க்கு அளித்திருக்கும் ஆதரவை பா.ஜ., திரும்பப் பெற வேண்டும் என காஷ்மீர் மக்கள் கட்சி பீம் சிங் தெரிவித்துள்ளார்.

 

சாமிக்கு கார்நாடக கோர்ட் அவகாசம்

பெங்களூரு : ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் தங்களின் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தர வேண்டும் என சுப்ரமணிய சாமியின் ஜூனியர் வழக்கறிஞர் பவன்சந்திர ஷெட்டி அனுமதி கேட்டிருந்தார். இதற்கு அனுமதி மறுத்த நீதிபதி குமாரசாமி, வழக்கை முடிக்க அவகாசம் குறைவாக உள்ளதாகவும், வேண்டுமானால் அரசு வழக்கறிஞரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனவும் கூறினார். பவன்சந்திர ஷெட்டி கேட்ட ஒருவார கால அவகாசத்தை வழங்க அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், நீதிபதியும் மறுத்து விட்டனர். பின்னர் நாளை மறுநாளுக்குள் எழுத்துபூர்வ வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சுப்ரமணியசாமி தரப்பிற்கு நீதிபதி அளித்துள்ளனர்.

 

சத்யம் முறைகேடு :தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐதராபாத் : சத்யம் நிறுவன முறைகேடு வழக்கில் ராமலிங்க ராஜூ மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இந்த தீர்ப்பை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐதராபாத் சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 

எதிர்க்கட்சிகளுக்கு நஹ்வி கோரிக்கை

புதுடில்லி : எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சியை பற்றியை சிந்தித்து முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என பா.ஜ.,வின் முக்தர் அப்பாஸ் நஹ்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுடில்லி : நிலம் கையகப்படுத்தும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் அருண் ஜெட்லி, கல்யாண் பானர்ஜி, சரத் பவார், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

என்னை வைத்து அரசியல் செய்கிறார்கள்:ஆலம்

ஜம்மு : எனது விடுதலையை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன என சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸரத் ஆலம் தெரிவித்துள்ளார். மேலும், தனது தண்டனை காலம் முடிந்து விட்டதாலேயே தான் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பார்லி.,யில் பதிலளிக்கிறார் ராஜ்நாத் சிங்

புதுடில்லி : காஷ்மீர் அரசு பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸரத் ஆலமை விடுதலை செய்தது குறித்து பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் பதிலளிக்க உள்ளார். இருப்பினும் இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

நகரங்களை மட்டும் பார்க்கிறார்கள்.மத்தியஅரசு மீது ஹசாரே தாக்கு

புதுடில்லி : மத்திய அரசு கிராமங்களைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் நகரங்களை மட்டும் தான் பார்க்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் மசோதா தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

 

மோடி அடுத்த ஆண்டு பாக்., பயணம்?

இஸ்லாமாபாத் : இந்திய பிரதமர் மோடி, அடுத்த ஆண்டு நிச்சயமாக பாகிஸ்தான் வருவார் என பாக்.,வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2016ம் ஆண்டு சார்க் மாநாட்டை பாகிஸ்தான் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நிச்சயம் பாகிஸ்தான் வருவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரதமரை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்

புதுடில்லி : நாகாலாந்தில் பாலியல் குற்றவாளி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கலவரம், காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் ஆகியவற்றை காரணமாக எடுத்து, இன்றைய பார்லி., கூட்டத்தொடரில் பிரதமருக்கு எதிராக கேள்வி கணைகளை தொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த விவகாரங்களில் பிரதமர் விளக்கம் அளிக்கவும் அவைகள் வலியுறுத்த உள்ளன.

 

கலாச்சார நகரங்கள் அழிக்கப்படுவதை தடுங்கள்:ஐ.நா

ஐ.நா : ஈராக்கில் கலாச்சார நகரங்கள் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன், பயங்கரவாதிகளால் கலாச்சார நகரங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் என உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.