குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்?பண்டாரவன்னியனை அகற்றியபோது

 16.07.2011.த.ஆ.2042--விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? பண்டாரவன்னியனை அகற்றியபோது இந்தஉணர்வுகள் எங்கேபோனது. குண்டான்சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டம்.  அன்றே அதற்காகப் போராடியிருந்தால் இன்று சற்று யோசித்திருப்பார்கள். இன்று சங்கிலியன் சிலை உடைக்கப்படுகிறது, நேற்று வன்னியில் தமிழரின் நிலங்களை பாதுகாக்க காலனித்துவ ஆட்சியாளர்களுடன் போர் முறிந்த பண்டாரவன்னியனின் நினைவு சின்னத்தை அகற்றினார்கள்.தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது, இதில் சிறிலங்கா அரசு தனது திட்டத்தை தமிழர்களை கொண்டே நடாத்தி கொண்டிருகிறது.

சங்கிலியன் வாளுடன் குதிரைமேல் நிற்கும் சிலை சிறிலங்கா இராணுவத்திற்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறதாம்.

தமிழ் அரசர்களின் சின்னங்கள், தமிழரின் விடுதலை போராட்ட சின்னங்களை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகளை அடக்கிவிடலாம் என்பதே சிறிலங்கா அரசின் திட்டமாக இருக்கிறது.

சங்கிலியன் கையில் வாள் இருப்பது போல் சிறிலங்கா அரசின் தேசிய கொடியில் சிங்கம் வாளுடன் தான் நிற்கிறது, ஆகவே இந்த வாளையும் அகற்றிவிடலாமே,

விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள், சங்கிலியன் சிலையில் வாளை அகற்ற நினைப்பதை போல், கொடியில் இருந்து சிங்கத்தை அகற்றிவிடலாமே,

அன்பான தமிழ் மக்களே! யாழ்ப்பான மக்களே! நீங்கள் சிங்கள அரசுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டீர்களா! இவ்வாறு சிங்கள அரசு தமிழரின் வரலாற்றை அழித்துக்கொண்டு போக நீங்கள் எவ்வளவு காலம் அமைதி காக்க போகிறீர்கள்?

இன்று உங்களை சுற்றி இருக்கும் உலகத்தை பாருங்கள், துனிசியா முதல் சிரியா வரை மக்களின் ஜனநாயக போராட்டத்தை, பாலஸ்தின மக்களின் ஜனநாயக போராட்டத்தை பாருங்கள்,

காஷ்மீர் முஸ்லிம் மக்களின் ஜனநாயக போரட்டத்தை பாருங்கள், இவர்கள் எல்லோரும் அழிவுகளுடன் தான் தமது விடுதலைக்காக போராடுகிறார்கள். இன்று உலகத்தின் பார்வை ஈழ தமிழ் மக்கள் மேல் பதிந்து இருக்கிறது,

உலகம் தமிழ் பிரதேசங்களை விருத்தி செய்ய தமிழீழ மக்களுக்கு என்று கோடிக்கணக்கான பணத்தை கொடுக்கிறது, அதில் தமிழர் பகுதிக்கு கிடைப்பது சிறிது.

தமிழ் மக்களை தென் இலங்கையிடம் கையேந்தும் இனமாக மாற்றி கொண்டிருக்கிறார்கள்,

அமைதி காத்தது போதும். உங்கள் ஜனநாயக உரிமைகள் உங்கள் அமைதி காப்பினால் கிடைத்து விடப்போவது இல்லை. இன்று நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

இன்று உலகம் சிறிலங்கா அரசை குற்றம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் சிறிலங்கா அரசு தமிழர்களை அடிமை படுத்தும் செயல்களை செய்து கொண்டு செல்கிறது.

இதற்கு மேலும் நீங்கள் அமைதி காப்பீர்கள் என்றால், தமிழ் இனமே அழிந்து விடும்.உங்கள் ஜனநாயக உரிமைகளை பெற நீங்கள் போராடவேண்டிய நேரமிது.

சங்கிலியன் சிலை போன்று எமது தேசிய சின்னத்தை அழிக்க விடாதீர்கள். இன்று உலகு எங்கும் மக்கள் எழுந்து நிற்கிறார்கள். இன்று உலகம் நிற்கும் நிலையில் உங்கள் போராட்டம் முக்கியம், இது உங்களின் நேரம்.

- சங்கிலியன்

சங்கிலி மன்னன் புதுப் பொலிவுடன் காட்சி தருவார்!-----------------------------------------------------------------------------------------யாழ்ப்பாண இளவரசர் நம்பிக்கை   இலங்கையின் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்து அரசன் சங்கிலி செகராசசேகரன் வெகு விரைவில் நல்லூர் முந்திரைச் சந்தியில் புதுப் பொலிவுடன் தோன்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சங்கிலி மன்னனின் வாரிசான இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா. பாரம்பரிய உடைமட்டும் சங்கிலியன் வாரிசு ஆகாது. பெயரும் தமிழாகவிருக்கவேண்டும்.

 
சங்கிலி மன்னனின் சிலை அரசினால் உடைத்து நொருக்கப்பட உள்ளது என தமிழ் தேசிய உணர்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் தீவிர பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஆனால் சிலை உயிரோட்டத்துடன் புதிதாக உருவாக்காப்பட உள்ளது என்று அரசுத் தரப்பினர் கூறி வருகின்றனர். இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா நெதர்லாந்தில் வசிக்கின்றார்.

 மூதாதையர்களில் ஒருவரான சங்கிலி மன்னனின் சிலை சம்பந்தமாக இன்று இவர் யாழ். மாநகரசபை ஆணையாளர் எம்.எஸ். சரவணபவனுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடினார்.

 கடந்த 30 வருட கால யுத்தத்தில் குண்டுகள், சன்னங்கள் பட்டு சிலை உருக்குலைந்து விட்டது என்றும் - இதனால் சிலையை புனருத்தாரணம் செய்கின்றமை சாத்தியப்படாது என துறை சார்ந்த வல்லுனர்கள் கை விரித்து உள்ள நிலையில் இந்திய சிற்ப கலைஞர்களால் புதிய சிலை வடிவமைக்கப்பட உள்ளது என்றும் இளவரசருக்கு பொறுமையாக விளக்கிக் கூறினார் ஆணையாளர்.

 ஆனால் வாளை நீட்டிப் பிடித்து ஏந்தியிருக்கின்ற தோற்றத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது என்றும் - வாளை மடித்து ஏந்தியிருக்கின்ற கம்பீரமான தோற்றத்துடன் புதிய சிலை நிர்மாணிக்கப்படும் என்றும் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

 
ஆணையாளரின் விளக்கங்கள் இளவரசருக்கு பூரண திருப்தியை கொடுத்து உள்ளன. இந்நிலையில் இச்சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் இளவரசர். சிற்ப வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பதும் விரைவில் நிறைவு பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.